கேள்வி: ரமழான் மாத நோன்பின் கழா செய்ய வேண்டிய நிலை இருக்கும் ஒரு மனிதர், ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள், ஆஷுரா போன்ற நோன்புகளை வைக்கலாமா? உங்களுக்கு மிக்க நன்றி
பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும்.
ரமழான் மாத கழா நோன்பை முடிக்கும் முன்னர் உபரியான நோன்புகளை வைப்பது ஆகுமானதா என்பதை குறித்து மார்க சட்ட மேதைகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளது.
ஹனஃபிகள், மாலிகிகள், ஷாஃபியிகள் உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள் அது ஆகுமானது என்றே கூறுகின்றனர், ஆனால் மாலிகிகள், ஷாஃபியிகள் அது அனுமதிக்கப்பட்ட போதும், வெருக்கத்தக்கது என்று கூறினர். ஹனஃபிகள் அது வெருக்கத்தக்கது அல்ல என்றே கருதினர்.
அதற்கு ஆதாரம் கழா நோன்புகளை வைப்பது உடனே செய்ய வேண்டிய கடமை அல்ல என்பதாகும்.
ஹம்பலிகள், கழா நோன்புகளை முடிக்காமல், உபரியான நோன்புகளை வைப்பது கூடாது என்றும், அந்த நோன்பு செல்லாது என்றும் கருதுகின்றனர்.
இதில் அவர்களுடைய ஆதாரமானது அஹ்மத் (رحمه الله) அவர்கள் அறிவித்த அபூஹுரைரா (رضي الله عنه) அவர்களின் ஹதீஸ் ஆகும். நபிகள் நாயகம் (صلى الله عليه وسلم) கூறினார்கள் “எவர் ஒருவர் ரமலானின் சில நோன்புகள் அவர்மீது கழா (பூர்த்தி) செய்யாத நிலையில் இருக்க உபரியான நோன்பு நோற்பாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது (ரமழானில் தவறிய நோன்புகள் நோற்க்கும் வரை).” ஆனால் இப்னு அபீ ஹாதிம் (رحمه الله) கூறியதுபோல் இந்த ஹதீஸில் தடுமாற்றங்கள் (இழ்திராப்) இருக்கும் காரணத்தினால் இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இன்னும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ (எனும் ஒரு பலவீனமான அறிவிப்பாளரும்) இருக்கிறார்.
இதில் கூடுதலாக ஹதீஸின் தொடர்ச்சியில் யாரும் ஏற்காத ஒரு கருத்தையும் அவர் அறிவித்துள்ளார், அது என்னவெனில் “எவர் ஒருவர் சென்ற ரமலானின் தவறிய நோன்புகள் (பூர்த்தி செய்யாத நிலையில்) இருக்க அடுத்த ரமலானின் நோன்புகள் நோற்பாரோ அது ஏற்றுக் கொள்ளப்படாது.”
ரமழான் நோன்புகளை கழா செய்யும் முன்னர் உபரியான நோன்புகளை வைப்பது ஆகுமானது என்று இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலின் இன்னொரு கருத்து அறிவிக்கப்படுகிறது.
இமாம் அல் மர்தாவி இதை சரி காண்கிறார்.
ஆகவே இவ்விடயத்தில் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தே சரியானது, ஷவ்வாலின் ஆறு நோன்புகள், ஆஷுரா நோன்பு போன்ற நோன்புகளை ரமழானின் கழா நோன்பு நோற்கும் முன் வைப்பதில் தவறில்லை, ஏனெனில் ரமழானின் விடுபட்ட நோன்புகளை வைப்பதற்கான நேரம் விரிவானது, இது போன்ற உபரியான நோன்பின் காலம் குறுகியது.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
https://www.islamweb.net/ar/fatwa/3718/لا-حرج-في-صيام-التطوع-لمن-عليه-قضاء-من-رمضان
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: