ரமழான் மாதத்தில் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்க்கு 1350 க்கும் மேலான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ரமழான் மாதம் பரக்கத்துக்களும் நன்மைகளும் பொருந்திய மாதம்.
அனைத்து மாதங்களை விட இந்த மாதத்திலேயே பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் நேரங்கள் அதிகம், மேலும் நன்மைகளை பன்மடங்குகளாக்கும் காரணங்களும் அதிகம்.
அதன் விளைவாகவே முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் 1350 யும் தாண்டியது.
இது ஒரு மிகப்பெரிய அருளாகும்.
இதனாலேயே முஃமீன்கள் ஆனந்தமடைகிறார்கள்,அவர்களின் உள்ளங்களும் அதனால் மகிழ்ச்சியடை கின்றது.
அச்சந்தர்ப்பங்களை குறிப்பிட முன்னால் அவைகளுக்கான ஆதாரங்களை குறிப்பிடுவது அவசியம்.
ஆதாரங்களில் சில :
1-ரமலான் மாதத்தில் எவர் ஈமானோடு நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு நோற்கிறாறோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும், ரமழான் மாதத்தில் எவர் ஈமானோடு நன்மையை எதிர்பார்த்தவராக நின்று வணங்குகிறாறோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும், லைலதுல் கத்ர் இரவில் எவர் ஈமானோடு நன்மையை எதிர்பார்த்தவராக நின்று வணங்குகிறாரோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2- இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள், காரணம் எவருடைய ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு நேர்படுகிறதோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
3-இமாம் ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா என்று கூறினால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்த் என்று கூறுங்கள், காரணம் எவருடைய வார்த்தை மலக்குகளின் வார்த்தைக்கு நேர்படுகிறதோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
எனவே நாம் இந்த ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து ரமழான் மாதத்தில் அடிக்கடி கிடைக்கப்பெரும் இச்சந்தர்ப்பங்களை கணக்கிட்டால் 1350-தை தாண்டியது, அதன் விபரம் பின்வருமாறு:
நோன்பு நோற்றல், அனைத்து இரவுகளிலும் நின்று வணங்குதல், லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குதல் இம்மூன்று சந்தர்ப்பகள்.
ஐவேளை தொழுகைகளில் உள்ள சந்தர்ப்பங்கள்:
● ஒரு நாளில் ஜஹ்ரியத்தான 6 ரக்ஆத்கள், அவைகளில் ஒரு முஸ்லிம் இமாமுடன் ஆறு தடவைகள் ஆமீன் சொல்வான் 30×6=180
● ஒரு நாளில் 17 ரக்அத்களில் இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா கூறினதை அடுத்து ஒரு முஸ்லிம் அல்ஹூம்ம ரப்பனா லகல் ஹம்த் என்று கூறுவார்.17×30=510
தராவீஹ் தொழுகை:
ஒரு முஸ்லிம் இமாமுடன் 11 ரக்ஆத்கள் தொழுகிறார் என்று வைத்துக்கொண்டால் 11 தடவைகள் இமாமுடன் ஆமீன் கூறுவார் அத்துடன் 11 தடவைகள் அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்த் என்றும் கூறுவார். இது தராவீஹ் தொழுகையில் முன்னைய பாவங்கள்மன்னிக்கப்படும் சந்தர்ப்பங்கள் 600 தடவைகள் வருவதை காட்டுகிறது. 22×30=660
முன்னாள் கூறப்பட்ட அனைத்தையும் கூட்டிப்பார்போம்
3+180+510+660=1353
ரமழானின் இறுதிப்பத்தின் தஹஜ்ஜத் தொழுகையையை சேர்க்காமலேயே இது இரு பெரும் தொகை,
முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான இன்னும் பலவிடயங்கள் இல்லாமல் இல்லை, அவைகளையும் ஒரு முஸ்லிம் ரமழானில் அமுல் படுத்தினால் இந்த எண்ணிக்கை இன்னும் பெருகும், இந்த மாதத்திலும் ஏனைய மாதத்திலும் இறைவனின் அருள் விசாலமானது, அவனின் கொடை அழப்பெரியது.
தொகுப்பு: கலாநிதி சுல்தான் அல் உமைரி.
தமிழில்: மௌலவி இஷ்பாக் அல் இன்ஆமி.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: