بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
கேள்வி 1️⃣4️⃣ :
நோன்பின்போது வாசனைத் திரவியம் அல்லது நறுமணம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன…?
📝 பதில் :
வாசனைத் திரவியம் அல்லது நறுமணத்தை பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவதில் எவ்வித பிரச்சனையுமில்லை (இன்’ஷா அல்லாஹ்…)
ஆனாலும், (அதிகமான) ஆல்கஹால் கலந்துள்ள Colognes போன்ற வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; நிச்சயமாக இந்த வாசனைத் திரவியங்களில் ஆல்கஹால் கலந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. (ஆகையால் இவைகளைப் பயன்படுத்த அனுமதியில்லை).
📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: