بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
கேள்வி 1️⃣6️⃣ :
ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் மருந்து ஊசிகளை (Injections) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.?
பதில் :
அத்தகைய ஊசிகள் ஊட்டமளிக்கக்கூடியவையாக இருந்தால், அவைகளை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; அதே சமயம் ஊட்டமளிக்காத ஊசிகளை பொறுத்தளவில் அதனை பயன்படுத்தலாம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
நான் முன்னர் கூறியது போல, நோயாளியாக இருப்பவர் நோன்பை விட்டுவிட்டு, அதனை வேறொரு நாட்களில் வைத்துக்கொள்வதே பொருத்தமானதாக கருதுகிறேன்.
கேள்வி 1️⃣7️⃣ :
ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் (நோன்பாளி ஒருவர் தம்) பற்களை பிடுங்குவதன் காரணமாக வந்த இரத்தத்தை விழுங்கினால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன.?
பதில் :
அந்த நபர் தன்னுடைய இரத்தத்தை விழுங்கினார் என்றால், அதனால் அவருடைய நோன்பு முறியாது. இருப்பினும் இஃப்தார் நேரம் வரையிலும் பற்கள் பிடுங்குவதை ஒருவர் தாமதப்படுத்திக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால், நோன்பின்போது பற்களை பிடுங்குவதால் அவர் வேதனைப்படுகிறார். ஆதலால் இரவுப் பொழுது வரையிலும் அச்செயலை தாமதிப்பது பொருத்தமானதாக உள்ளது.
மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: