முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவார்களா?

முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவார்களா?

 

கேள்வி: பிறந்தநாள் கொண்டாடுவதற்கு என்ன ஆதாரம் உண்டு, இஸ்லாத்தில் அதற்கு அனுமதி உள்ளதா?

 

பதில்:

 

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

 

குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ள ஆதாரங்கள், பிறந்தநாட்களைக் கொண்டாடுவது ஒரு வகையான பித்அத் அல்லது மார்க்கத்தில் புதுமை என்றும்; இதற்கு தூய மார்க்க சட்டத்தில் (ஷரீஅத்தில்) எந்த அடிப்படையும் இல்லை என்பதையும் குறிக்கிறது.

 

பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான அழைப்புகளை ஏற்பதற்கும் அனுமதி இல்லை, ஏனெனில் இது பித்அத்தை ஆதரிப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். மகிமைப்படுத்தப்படுபவனாகவும் மேன்மைப்படுத்தப்படுபவனாகவும் இருக்கும் அல்லாஹ் தனது திருமறை குர்ஆனில் கூறுவதாவது ,

“அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் (பொய் கடவுள்கள்) அவர்களுக்கு இருக்கின்றனவா …?” [அஷ்-ஷூரா 42:21]

 

“பின்னர் (முஹம்மதே) நாங்கள் உங்களை (எங்கள்) கட்டளையின் தெளிவான வழியில் வைத்தோம். எனவே அதைப் பின்பற்றுங்கள், அறியாதவர்களின் ஆசைகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக, அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக (அவன் உங்களைத் துன்புறுத்த விரும்பினால்) உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. நிச்சயமாக, அநியாயக்காரர்களுள் சிலர் அவர்களில் சிலருக்குத்தான் நண்பர்கள் (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல), ஆனால் அல்லாஹ் இறையச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன் ஆவான். [அல்-ஜாதியா 45:18-19]

 

“உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள், அவனைத் தவிர வேறு எவரையும் உங்களுக்கு பொறுப்பாளர்களாக ஆக்கி அவர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். எனினும் இதனைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவு” [அல்-அராஃப் 7:3]

 

ஸஹீஹான அறிக்கைகளின்படி, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “நம்முடைய இந்த விஷயத்தில் (அதாவது இஸ்லாத்தில்) இல்லாத ஒன்றை யார் செய்தாலும் அது நிராகரிக்கப்படும்.” (முஸ்லிமில் அறிவிக்கப்பட்டுள்ளது); மேலும் “பேச்சில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் மற்றும் வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டுதலாகும். (மார்க்கத்தில்) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே மிகவும் தீயவையாகும், மேலும் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும்.” இதே அர்த்தத்தை வெளிப்படுத்தும் மேலும் பல ஹதீஸ்களும் உள்ளன.

 

பித்அத் மற்றும் ஷரீஅத்தில் எந்த அடிப்படையும் இல்லாதது தவிர, இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களாவது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய வழிகளையும் கலாச்சாரங்களையும் பின்பற்றுவதை விட்டும் நம்மை எச்சரித்து கூறினார்கள்: “உங்களுக்கு முன் வந்தவர்களின் வழிகளை நீங்கள் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள், எந்த அளவிற்கு என்றால், அவர்கள் ஒரு பல்லியின் பொந்திற்குள் நுழைய முற்பட்டால் நீங்களும் நுழைவீர்கள்.” அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களையா குறிப்பிடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, அவர், “வேறு யார்?” என்றார்.(அல்-புகாரி மற்றும் முஸ்லிமில் அறிவிக்கப்பட்டது).

 

மேலும் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஒரு சமுதாயத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களில் ஒருவர்.”

 

மேலும் அல்லாஹ்வே நன்கறிந்தவன்!

 

Source:islamqa

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply