بسم الله الرحمن الرحيم
கேள்வி:
மண்ணறைகளின் மீது மரம், செடி முளைப்பது நல்லடியார்களின் அடையாளமா?
பதில்:
(அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…)
அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மண்ணறைகளின் மீது மரம், புற்கள் முளைப்பது அதில் இருப்பவர் நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மாறாக அது பிழையான எண்ணமாகும். மரங்கள் நல்லவர்களின் மண்ணறைகளின் மீதும் தீயவர்களின் மண்ணறைகளின் மீதும் முளைக்கின்றன. அவை நல்லவர்களின் மண்ணறைகளின் மீது மாத்திரம் குறிப்பாக முளைக்கக்கூடியதல்ல. இதற்கு மாற்றமாக நினைக்கும் வழிதவறிய, பிழையான கொள்கையை உடைய மக்களுடைய பேச்சில் நாம் கவர்ந்து ஏமாந்து விடக்கூடாது.
ஆதாரம்:ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மஜ்மூஉல் பதாவா (4/372)
தமிழில்:
அஸ்கி அல்கமி(ஆசிரியர்:அல்கமா அரபு கல்லூரி,இலங்கை)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: