பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 05 |
மார்க்கத்தில் பொய் சொல்வது பாரதூரமான குற்றச்செயலாகும்:
மார்க்கச் சட்டங்களில் அறிவின்றிப் பொய் பேசுவது மறுமை வாழ்வை அழித்துவிடும்:
﴿وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَـٰذَا حَلَـٰلࣱ وَهَـٰذَا حَرَامࣱ لِّتَفۡتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِینَ یَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا یُفۡلِحُونَ﴾ [النحل ١١٦]
அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை, (சில பிராணிகள் பற்றி) இது ஹலால் (ஆகுமானது), இது ஹராம் (ஆகாதது) என்று கூறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கின்றவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)
அல்லாஹ்வின் பெயரால் கூறப்படும் பொய்யே மிக மோசமான பொய்யாகும்:
﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ قَالَ أُوحِیَ إِلَیَّ وَلَمۡ یُوحَ إِلَیۡهِ شَیۡءࣱ وَمَن قَالَ سَأُنزِلُ مِثۡلَ مَاۤ أَنزَلَ ٱللَّهُۗ وَلَوۡ تَرَىٰۤ إِذِ ٱلظَّـٰلِمُونَ فِی غَمَرَ ٰتِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَـٰۤىِٕكَةُ بَاسِطُوۤا۟ أَیۡدِیهِمۡ أَخۡرِجُوۤا۟ أَنفُسَكُمُۖ ٱلۡیَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَیۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَایَـٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ﴾ [الأنعام ٩٣]
அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுபவனைவிட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க “எனக்கும் வஹீ அறிவிக்கப்பட்டது” என்று கூறுபவனை விட அல்லது “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்” என்று கூறுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? இன்னும், இவ்வநியாயக்காரர்கள் மரண வேதனையிலிருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின்மீது (பொய்யாகக்) கூறிக் கொண்டிருந்ததாலும், இன்னும் அவனது வசனங்களை விட்டும் (அவற்றை ஏற்க மறுத்து) நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும் (அதற்குப் பகரமாக) இன்றைய தினம் இழிவான வேதனையை நீங்கள் கொடுக்கப்படுகிறீர்கள் (என்று கூறுவதை நீர் காண்பீர்.) (அல்குர்ஆன் 6:93)
﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًاۚ أُو۟لَـٰۤىِٕكَ یُعۡرَضُونَ عَلَىٰ رَبِّهِمۡ وَیَقُولُ ٱلۡأَشۡهَـٰدُ هَـٰۤؤُلَاۤءِ ٱلَّذِینَ كَذَبُوا۟ عَلَىٰ رَبِّهِمۡۚ أَلَا لَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّـٰلِمِینَ﴾ [هود ١٨]
மேலும், அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனை செய்பவரைவிட மிகப் பெரிய அநியாயக்காரர் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இரட்சகன் முன் நிறுத்தப்படுவர், மேலும், “இவர்கள் தாம் தங்கள் இரட்சகன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று (மலக்குகளான) சாட்சிகள் கூறுவார்கள், அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டென்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக! (அல்குர்ஆன் 11:18)
நபி ﷺ அவர்கள் பெயரால் பொய்கூறவது அல்லாஹ்வின் பெயரால் கூறப்படும் பொய்யை அடுத்து மிகப் பெரிய பொய்யாகும்:
صحيح البخاري: عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: مَن يَقُلْ عَلَيَّ ما لَمْ أقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النّارِ.
நான் கூறாததை நான் கூறியதாகக் கூறுபவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்’ என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (புகாரி 109)
பொய் சாட்சி சொல்வது ஒரு மகா பாதகம்:
சாட்சியம் சம்பந்தமான பல வழிகாட்டல்களை குர்ஆன் வழங்கியுள்ளது. நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும்; ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல், சாட்சியத்தை மறைத்தல், சாட்சியம் கூற மறுத்தல், சாட்சியத்தை மாற்றிக் கூறுதல், சாட்சிகளைக் கலைத்தல், சாட்சிகளைத் துன்புறுத்தல், பொய் சாட்சி கூறுதல் போன்ற பல விடயங்கள் குர்ஆனில் பல இடங்களில் கண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு சில ஆயத்களை மாத்திரம் பார்ப்போம்.
﴿وَلا تَلبِسُوا الحَقَّ بِالباطِلِ وَتَكتُمُوا الحَقَّ وَأَنتُم تَعلَمونَ﴾
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
﴿…وَإِذا قُلتُم فَاعدِلوا وَلَو كانَ ذا قُربى وَبِعَهدِ اللَّهِ أَوفوا ذلِكُم وَصّاكُم بِهِ لَعَلَّكُم تَذَكَّرونَ﴾
…நீங்கள் பேசினால் (அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய) உறவினராயினும் (சரியே) நியாயமே பேசுங்கள்; நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (அல்குர்ஆன் 6:152)
[النساء: ١٣٥]
விசுவாசங்கொண்டோரே! (நீங்கள் சாட்சி கூறினால், அது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதிலும், நீதியை நிலைநிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள், (சாட்சி கூறப்படும்) அவர் பணக்காரராக இருந்தாலும் சரி, அல்லது ஏழையாக இருந்தாலும் சரி (உண்மையையே கூறுங்கள்.) அல்லாஹ் அவ்விருவருக்கும் (அவர்களைக் காப்பாற்றுவதற்கு) மிக உரியவன், இன்னும், நீங்கள் நியாயம் வழங்குவதில் (உங்கள் மனோ) இச்சையைப் பின்பற்றாதீர்கள், நீங்கள் (சாட்சியத்தை) மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறாது) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:135)
﴿وَالَّذينَ لا يَشهَدونَ الزّورَ وَإِذا مَرّوا بِاللَّغوِ مَرّوا كِرامًا﴾
மேலும் (ரஹ்மானின் அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. (அல்குர்ஆன் 25:72)
﴿فَإِن أَمِنَ بَعضُكُم بَعضًا فَليُؤَدِّ الَّذِي اؤتُمِنَ أَمانَتَهُ وَليَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلا تَكتُمُوا الشَّهادَةَ وَمَن يَكتُمها فَإِنَّهُ آثِمٌ قَلبُهُ وَاللَّهُ بِما تَعمَلونَ عَليمٌ﴾
…உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் – எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது – இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 2:283)
ص البخاري: سمعت أنس بن مالك قال: ذكر رسول الله ﷺ الكبائر أو سئل عن الكبائر، فقال: الشرك بالله، وقتل النفس، وعقوق الوالدين. فقال: ألا أنبئكم بأكبر الكبائر؟ قال: قول الزور. أو قال: شهادة الزور. قال شعبة وأكثر ظني أنه قال: شهادة الزور.
அனஸ் (றளியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ‘பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்’ அல்லது ‘அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது’. அப்போது நபி ﷺ அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)’ என்று கூறிவிட்டு, ‘பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். ‘பொய் பேசுவது’ அல்லது ‘பொய் சாட்சியம்’ (மிகப் பெரும் பாவமாகும்)’ என்று கூறினார்கள். (புகாரி 5977)
ص البخاري: عن أبي بكرة، قال: قال النبي ﷺ: ألا أنبئكم بأكبر الكبائر. ثلاثا، قالوا: بلى يا رسول الله. قال: الإشراك بالله، وعقوق الوالدين. وجلس وكان متكئا فقال: ألا وقول الزور. قال: فما زال يكررها حتى قلنا: ليته سكت.
அபூ பக்றஹ் (றளியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: (ஒரு முறை) ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி ﷺ அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்றார்கள். உடனே, நபி ﷺ அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)’ என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்’ என்று கூறினார்கள். அவர்கள் ‘சொல்வதை நிறுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் (மனதிற்குள்) சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். (புகாரி 2654)
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
– ஹுஸைன் இப்னு றபீக் மதனி
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: