அதிகமானோர் தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால் மொழிவகதைக் கேட்கிறோம். இதன்சட்டநிலை என்ன? மார்க்கத்தில் இதற்கு ஆதாரமுண்டா?
பதில்: தூய இம்மார்க்கத்தில் நிய்யத்தை மொழிவதற்கு எந்த ஆதாரமுமில்லை. நபி(ஸல்) அவர்களோ
நபித்தோழர்களோ தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை மொழிந்ததாக எந்த ஒரு செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. நிய்யத் ஏற்படுவதற்குரிய இடம் உள்ளமாகும். நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى
“செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.” அறிவிப்பவர்: உமர்(ரலி), நூல்:புகாரி 1, முஸ்லிம் 1907
-இமாம் இப்னு பாஸ் – தொழுகை பற்றிய முக்கியமானகேள்வி பதில்கள்
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: