ஜனாஸா தொழுகை தொழும்‌ முறை – ஜனாஸா சட்டங்கள் – இமாம் அல் அல்பானி

  1. ஜனாஸா தொழுகைக்காக 4 அல்லது 5 தக்பீர்‌ கூற வேண்டும்‌. இவை அனைத்தும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ செயலை அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌. இவற்றில்‌ எதைக்‌ கடைப்பிடித்தாலும்‌ சரியாகிவிடும்‌. நபியவர்கள்‌ நான்கு முறையாகவும்‌ ஐந்து முறையாகவும்‌ தக்பீர்‌ கட்டியுள்ளார்கள்‌. தொழுகையில்‌ தக்பீர்‌ கட்டியவுடன்‌ பாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்‌ ஓதும்‌ துஆக்கள்‌, அத்தஹியாத்தில்‌ ஸலவாத்தில்‌ இப்ராஹீமிய்யா என்பன வித்தியாசப்பட்டது போன்று இவ்வித்தியாசமும்‌ நபியவர்‌களின்‌ நடைமுறையையொட்டியே எழுந்ததாகும்‌.

ஒரு மூறையையே பின்பற்ற வேண்டும்‌ என நினைத்தால்‌ 4 தக்பீர்களை வழமைப்படுத்திக்‌ கொள்வது நன்று. ஏனெனில்‌ நான்கு முறை தக்பீர்‌ கட்டுவதற்குத்தான்‌ ஏராளமான ஆதாரங்கள்‌ உள்ளன. 

இமாம்‌ எத்தனை தக்பீர்கள்‌ கட்டுகின்றாரோ அதனையே பின்னால்‌ நின்று தொழுபவர்களும்‌ (மஃமும்‌களும்‌) பின்பற்ற வேண்டும்‌.

 

  1. முதலாவது தக்பீரின்‌ போது கையை உயர்த்த வேண்டும்‌.

அபூஹுரைரா (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:

         நபி (ஸல்‌) அவர்கள்‌ ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும்போது முதலாவது தக்பீரில்‌ கையை உயர்த்தினார்கள்‌. வலது கையை இடது கையின்‌ மீது வைத்துக்‌ கொண்டார்கள்‌

(திர்மிதி, பைஹகி, தாரகுத்னி)

 

  1. பின்பு வலது கையை இடது கை மணிக்கட்டு அல்லது முன்னங்கை அல்லது விரல்கள்‌ அடுத்துள்ள பகுதியின்‌ மீது வைத்து நெஞ்சில்‌ கட்டிக்கொள்ள வேண்டும்‌. இதற்குப்‌ பல ஆதார நபிமொழிகள்‌ உள்ளன. இமாம்களாகிய நவவி, ஸைலயி ஆகியோரின்‌ கூற்றுப்படி தொப்புளுக்குக்‌ கீழே தக்பீர்‌ கட்டுவது பற்றி வந்துள்ள நபிமொழி ஒருமித்த கருத்துப்படி பலவீனமானதாகும்‌.

 

  1. தக்பீர்‌ கட்டியவுடன்‌ பாத்திஹா சூராவும்‌ வேறொரு சூராவும்‌ ஓத வேண்டும்‌.

அப்துல்லாஹ்‌ இப்னு அவ்ப்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:

           நான்‌ இப்னு அப்பாஸ்‌ (ரழி) அவர்களுக்குப்‌ பின்னால்‌ நின்று ஜனாஸா தொழுதேன்‌. அப்போது அவர்கள்‌ பாத்திஹா சூராவையும்‌ இன்னொரு சூராவையும்‌ சப்தமிட்டு ஓதித்‌ தொழுவித்தார்கள்‌. தொழுகை முடிந்ததும்‌ நான் அவர்‌ கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு (ஏன்‌ இப்படிச்‌ செய்தீர்கள்‌ என) கேட்டேன்‌. இதுதான்‌ “உண்மையும்‌ நபி வழியும்‌” என்பதை உங்களுக்கு அறியத்தருவதற்கே இவ்வாறு தொழுவித்தேன்‌ என்றார்கள்‌. 

(புகாரி, அபூதாவூத்‌, நஸயீ, திர்மிதி, ஹாகிம்‌)

 

  1. ஜனாஸா தொழுகையில்‌ சூராக்களும்‌, பிரார்த்‌தனைகளும்‌ மெளனமாக ஓத வேண்டும்‌.

அபூஉமாமா இப்னு ஸஹ்ல்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌.

ஜனாஸா தொழுகையில்‌ முதலாவது தக்பீருக்குப்பின்‌ பாத்திஹா சூராவை மெளனமாக ஓதுவதுதான்‌ நபி வழி (சுன்னத்‌) ஆகும்‌. 

 

  1. பின்னர்‌ இரண்டாம்‌ தக்பீர்‌ கட்டியபின்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலவாத்‌ கூற வேண்டும்‌.

அபூஉமாமா இப்னு ஸஹ்லி அவர்கள்‌ அறிவிக்‌கிறார்கள்‌:

         “ஜனாஸா தொழுகையின்‌ நபிவழி என்னவென்றால்‌ இமாம்‌ முதலாவது தக்பீர்‌ கட்டியபின்‌ மெதுவாக பாத்திஹா சூராவை ஓத வேண்டும்‌. பின்பு (இரண்டாம்‌ தக்பீருக்குப்‌ பின்‌) நபி (ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலவாத்துக்‌ கூற வேண்டும்‌. பின்னர்‌ (மூன்றாம்‌ தக்பிீருக்குப்பின்‌) மையித்திற்காகத்‌ தூய்மையுடன்‌ பிரார்த்தனை செய்தல்‌ வேண்டும்‌. இவ்விரண்டிலும்‌ (குர்‌ஆன்‌ வசனங்கள்‌) எதுவும்‌ ஓதக்கூடாது. அதன்பின்‌ (நான்காம்‌ தக்பிருக்குப்பின்‌) மெளனமாக ஸலாம்‌ கூறி முடிக்க வேண்டும்‌. 

மஃமும்களும்‌ இவ்வாறே இமாமைப்‌ பின்பற்றுவது சுன்னத்தாகும்‌. இரண்டாம்‌ தக்பீருக்குப்‌ பின்‌ கூறும்‌ ஸலவாத்தின்‌ வசனங்கள்‌ பற்றி எந்த நபிமொழியையும்‌ காணமுடியவில்லை. ஜனாஸா தொழுகையில்‌ குறிப்‌பிட்ட ஸலவாத்து இதுதான்‌ எனக்‌ கூறுவதற்கில்லை. எனினும்‌ அத்தஹிய்யாத்தில்‌ கூறப்படும்‌ “ஸலவாத்துல்‌ இப்ராஹீமிய்யா”வை ஓதுவது சிறந்ததாகும்‌. 

 

  1. அடுத்துள்ள (மூன்றாவது) தக்பீர்‌ மையித்திற்காக தூய உள்ளத்துடன்‌ பிரார்த்தனை செய்தல்‌ வேண்டும்‌.

 

  1. மூன்றாம்‌ தக்பீருக்குப்‌ பின்‌ ஜனாஸாவுக்காக ஓதும்‌ பிரார்த்தனைகள்‌ பற்றி ஸஹீஹான நபிமொழிகள்‌ இருக்கின்றன. அவற்றில்‌ நான்கை மட்டும்‌ இங்கு தருகிறோம்‌. இவற்றிலொன்றைக்‌ கூறி பிரார்த்திக்கலாம்‌.

 

  1. اللَّهُـمَّ اغْفِـرْ لَهُ ، وَارْحَمْـهُ ، وَعَافِهِ ، وَاعْفُ عَنْـهُ ، وَأَكْـرِمْ نُزُلَـهُ ، وَوَسِّـعْ مُدْخَـلَهُ ، وَاغْسِلْـهُ بِالْمَـاءِ وَالثَّـلْجِ وَالْبَـرَدِ ، وَنَقِّـهِ مِنَ الْخَطَـايَا كَمَا نَـقَّيْتَ الـثَّوْبَ الأَبْيَـضَ مِنَ الدَّنَـسِ،وَأَبْـدِلْهُ دَارًا خَـيْرًا مِنْ دَارِهِ ، وَأَهْلًا خَـيْرًا مِنْ أَهْلِـهِ ، وَزَوْجًا خَـيْرًا مِنْ زَوْجِهِ ، وَأَدْخِـلْهُ الْجَـنَّةَ ، وَأَعِـذْهُ مِنْ عَذَابِ الْقَـبْرِ وَعَذَابِ النَّـارِ
    “அல்லாஹும்மஃபிர்லஹு, வர்ஹம்ஹு, வஆஃபிஹி, வஃபுஅன்ஹு வஅக்ரிம்‌ நுஸ்லஹு வவஸ்ஸில்‌  மத்கலஹு, வஹ்சிலீஹு பில்மாஇ, வ்ததலஜி வவ்பர்தி, வநக்கிஹி மின்றஹதாயாஹு கமா நக்கைத்த (யுனக்கா)த்‌ தௌபுல்‌ அப்யழு மினத்தனஸி, வஅப்தில்ஹு தாரன்‌  ஹைரன்‌ மின்தாரிஹி, வஅஹ்லன்‌ கைரன்மின்‌ அஹ்லிஹி, வஸவ்ஜன்‌ ஹைரன்‌ மின்‌ ஸவ்ஜிஹி,  வஅத்ஹில்ஹுல்‌ ஜன்னத, வஅஇத்ஹு மின்‌  அதாபிகல்கப்ரி வமின்‌ அதாபின்னார்‌”.
    யாஅல்லாஹ்! அவருக்கு பாவம் பொருத்தருள்வாயாக! அவருக்கு அருளும்செ ய்வாயாக! சுகத்தையும் நல்குவாயாக! அவரை மன்னித்தும் விடுவாயாக! அவருடைய தங்குதலை கண்ணியப்படுத்தவும் செய்வாயாக! அவரின் நுலைவிடத்தை விஸ்தீரணமாக்கியும்தருவாயாக! தண்ணீர், ஐஸ்கட்டி, ஆலங்கட்டி, ஆகியவற்றைக் கொண்டு அவனரக் கழுகவும் செய்வாயாக! அழுக்கிலிருந்து மிக்க வெண்மையான ஆடையை நீ சுத்தம் செய்தது போயன்று பாவங்களிலிருந்து அவரைப் பரிசுத்தப்படுத்துவாயாக! வரை வீட்டை விட மிகச் சிறந்ததான ஒரு வீட்டை , அவருடைய குடும்பத்தினனர விடவும் மிகச் சிறந்த குடும்பத்தினனர, அவருடைய மனனவினய விட மிகச் சிறந்த மனனவினயயும் அவருக்கு நீ மாற்றித் தருவாயாக! இன்னும் அவரை சுவனத்தில் நீ பிரவேசிக்க செய்து, கப்ருடைய வேதனையிலிருந்தும் (நரகவேதனையிலிருந்தும்) அவனர நீ பாதுகாப்பாயாக !

 

(முஸ்லிம்‌, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்‌, பைஹகி) 

 

  1. اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا. اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ، اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ، وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ
    அல்லாஹும்மக்பிர்‌ லிஹையினா வமையிதினா வஷாஹிதினா வகாஇபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்தானா, அல்லாஹும்ம மன்‌அஹ்யைத்‌தஹுமின்னா ஃபஅஹ்யிஹி அலல்‌ இஸ்லாம், வமன்‌ தவஃப்‌பைத்தஹுமின்‌னா தவஃப்‌பஹூ அலல் ஈனான் அல்லாஹும்ம லா தஹ்ரிம் அஜ்ரஹு வலா தளில்லனா பஹ்தஹு”.
    எங்களில் உயிருடன் உள்ளவருக்கு, எங்களில் இறப்பெய்தி விட்வருக்கு, எங்களில் வந்திருப்பவருக்கு, வராதவருக்கு, எங்களில் சிறார்க்கு, பெரியவர்க்கு, எங்கைில் ஆடவருக்கு, பெண்டிர்க்கு அனனவருக்கும் பாவம் பொருத்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எங்களில் எவரை உயிருடன் வைத்துள்ளாயோ அவரை இஸ்லாத்தின் மீது ஜீவிக்கச் செய்வாயாக! எங்களில் எவரை மரணிக்கச் செய்கிறாயோ , அவர்களை ஈமானின் மீது நீ மரணிக்கச் செய்வாயாக! யாஅல்லாஹ்! இவருடைய கூலினய எங்களுக்குத் தடுத்து விடாதே! அவருக்குப் பிறகு எங்கனை
    வழி தவறவும் செய்து விடாதே!

 

(அபூதாவூத்‌. திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி, ஹாகீம்‌)

 

  1. اللهُـمِّ إِنَّ فُلانَ بْنَ فُلانٍ في ذِمَّـتِك ، وَحَبْـلِ جِـوارِك ، فَقِـهِ مِنْ فِتْـنَةِ الْقَـبْرِ وَعَذابِ النّـار ، وَأَنْتَ أَهْلُ الْوَفـاءِ وَالْـحَقِّ ، فَاغْفِـرْ لَهُ وَارْحَمْـهُ ، إِنَّكَ أَنْتَ الغَـفورُ الـرَّحيم
    “அல்லாஹும்ம இன்ன புலானப்னிபுலான்‌ பீ திம்மதி சுவஹப்ஸி ஜவாரிக, ஃபகிஹில்பித்னத்‌ தல்கப்ரி, வஅதாபின்னார்‌ வஅன்த அஹ்லுல்‌ வபாஇ வல்ஹக்கி ஃபஹ்பிர்லஹு வர்ஹம்ஹு இன்னக அன்தல்‌ கபூரூர்‌ ரஹீம்‌.யாஅல்லாஹ்! நிச்சயமாக இன்னார் மகன் இன்னார் உன் பொறுப்பில் மற்றும் உன்பாதுகாப்பிலாவார்; ஆகவே, கப்ரின் சோதனை மற்றும் நரக வேதனையிலிருந்து அவனரக்காப்பாயாக! நீயோ வாக்கை நிறைவேற்றுபவன் மற்றும் உண்மையானவன் , ஆகவே அவருக்குபாவம் பொருத்தருள்வாயாக! அவருக்கு அருளும் செய்வாயாக! நிச்சயமாக நீயே மிக்கப் பொருத்தருள்பவன், மிகுந்த கிருபையாைன்.

(அபூதாவூத்‌, இப்னுமாஜா, அஹ்மத்‌, இப்னுஹிப்பான்‌)

 

  1. اللَّهُمَّ عَبْدُكَ وَابْنُ أَمَتِكَ احْتَاجَ إِلَى رَحْمَتِكَ، وَأَنْتَ غَنِيٌّ عَنْ عَذَابِهِ، إِنْ كَانَ مُحْسِناً فَزِدْ فِي حَسَنَاتِهِ، وَإِنْ كَانَ مُسِيئاً فَتَجَاوَزْ عَنْهُ
    “அல்லாஹும்ம அப்துக வப்னு அமதிக இஹ்தாஐ இலாரஹ்மதிக, வஅன்த ஹனிய்யுன்‌ அன்‌ அதாபிஹி, இன்கான முஹ்ஸினன்‌ ஃபஸித்‌ஃபீ ஹஸனாதிஹி, வஇன்கான முஸீ௮ன்‌ஃ பதஜாவிஸ்‌அன்‌ஹு”
     

    யாஅல்லாஹ்! உன்னுடைய அடியார், உன்னுடைய அடியாைளின் மகனார் உன்னுடைய அருளின் பால் தேவையுடைவராக இருக்கிறார்; நீயோ அவரை த் தண்டிப்பதை விட்டும் தேவையற்றவன்; அவர் நன்மையுடைவராக இருப்பின் அவருடைய நன்னமயில் அதிகப்படுத்துவாயாக! தீமையுடைவராக அவர் இருந்தாலோ அவரை பொருட்படுத்தாது விட்டு விடுவாயாக!

(ஹாகிம்‌, தப்ரானீ)

 

  1. கடைசித்‌ தக்பீருக்கும்‌ ஸலாம்‌ கொடுப்பதற்கு முன்னால்‌ பிரார்த்தனை புரிவது மார்க்கத்தில் உள்ளதாகும்.

அபூயஹ்பூர்‌ அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:

          “நான்‌ அப்துல்லாஹ்‌ இப்னு அபீ அவ்பா (ரழி) அவர்கள்‌ ஒரு ஜனாஸாவைத்‌ தொழுவிக்கும்போது அதில்‌ கலந்து கொண்டேன்‌. நான்கு முறை தக்பீர்‌ கட்டியபின்‌ தாமதித்து விட்டு சலாம்‌ கொடுத்தார்கள்‌. அதன்‌ பிறகு எங்களைப்‌ பார்த்து நான்‌ ஐந்தாவது முறையும்‌, தக்பீர்‌ கட்டுவேன்‌ என எகிர்பார்த்தீர்களா? எனக்‌ கேட்டார்‌. நாங்கள்‌ “இல்லை” என்று கூறினோம்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ நான்கு முறைதான்‌ தக்பீர்‌ கட்டினார்கள்‌ எனக்‌ கூறினார்‌. 

(பைஹகீ, அஹ்மத்‌, இப்னுமாஜா, ஹாகிம்‌)

 

  1. பிறகு ஏனைய தொழுகைகள்‌ முடிந்து இரண்டு ஸலாம்‌ கொடுப்பது போன்று மையித்துத்‌ தொழுகைக்கும்‌ இரண்டு ஸலாம்‌ கூற வேண்டும்‌.

இப்னு மஸ்‌ஊத்‌ (ரழி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌:

“நபி (ஸல்‌) அவர்கள்‌ செய்த மூன்று  செயல்களை இப்போது முஸ்லிம்கள்‌ விட்டு விட்டார்கள்‌. அதில்‌ முதலாவது மற்ற தொழுகைகளுக்குப்‌ போன்று ஜனாஸா தொழுகையின்‌ முடிவிலும்‌ இரண்டு ஸலாம்‌ கொடுப்பதாகும்‌.

(முஸ்லிம்‌. பைஹகி, தப்ரானீ)

 

  1. ஒரு சலாமுடன்‌ முடித்துக்‌ கொள்வதும்‌ ஆகும்‌.

அபூஹுரைரா (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:

           நபி (ஸல்‌) அவர்கள்‌ ஒரு ஜனாஸாவைத்‌ தொழுவித்தார்கள்‌. நான்கு தக்பீர்‌ கட்டினார்கள்‌. ஒரு ஸலாம்‌ மட்டும்‌ கொடுக்கார்கள்‌.

 (பைஹகி, ஹாகிம்‌, தாரகுத்னீ)

இவ்விரண்டு ஹதீஸ்களையும்‌ சீர்தூக்கிப்‌ பார்க்கும்‌ போது ஜனாஸா தொழுகையின்‌ முடிவில்‌ ஒரு ஸலாம்‌ கொடுப்பதே போதுமானது என்பது புலனாகிறது. ஏனெனில்‌ இதற்கு ஆதாரமாகவே இப்னு அப்பாஸ்‌, இப்னு உமர்‌, ஜாபிர்‌ இப்னு அப்துல்லாஹ்‌, அலீ இப்னு அபீதாலிப்‌, அபூஹுரைரா (ரழி) ஆகியோரின்‌ செயல்களும்‌ இருக்கின்றன. இதனையே இமாம்‌ அஹ்மது அவர்களும்‌ தீர்ப்பளித்துள்ளார்கள்‌.

 

  1. நபிவழி யாதெனில்‌ ஸலாம்‌ கொடுப்பது மெளனமாக இருக்க வேண்டும்‌ என்பதாகும்‌.
    74ம்‌ இலக்கத்திலுள்ள அபூஉமாமாவின்‌ நபிமொழி இதற்கு ஆதாரமாக இருக்கிறது. இமாம்‌ மெளனமாக ஸலாம்‌ கொடுப்பது போன்றே மஃமும்களும்‌ மெளனமாக ஸலாம்‌ கொடுக்க வேண்டும்‌.

 

  1. போதிய காரணமின்றி தொழுவதற்கு விலக்கப்‌ பட்ட மூன்று நேரங்களில்‌ ஜனாஸா தொழுவது கூடாது.

உக்பா இப்னு ஆமிர்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:

       சூரியன்‌ உதிக்கும்போதும்‌, அது உச்சியிலிருக்கும்‌ போதும்‌, மறையும்‌ போதும்‌ தொழுவதையும்‌, மரணித்தவர்களை நல்லடக்கம்‌ செய்வதையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்து உள்ளார்கள்‌.

      நல்லடக்கம்‌ செய்வதையும்‌ என்பதன்‌ அர்த்தம்‌ மையித்துத்‌ தொழுகையையும்‌ உள்ளடக்கும்‌ என்பதுதான்‌ கருத்தாகும்‌. 

(முஸ்லிம்‌, அபூதாவூத்‌, திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்‌)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply