ஐவேளைத் தொழுகைகளை தொழாத ஒருவர் அவரது ஸகாத்தை வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?
தொழுகையை விடுபவன் “காபீர்” (இறை நிராகரிப்பாளன்) ஆவான்.
அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:-
ஒரு மனிதனுக்கு மத்தியிலும் இணைவைப்புக்கும், இறை நிராகரிப்புக்கு மத்தியில் இருப்பது தொழுகையை விடுவதாகும்.
நூல்: முஸ்லிம்-82
இந்த ஹதீஸ் பொதுப்படையாக இடம் பெற்றிருப்பதன் காரணமாக தொழுகை கடமை என்பதை மறுக்காமல் (சோம்பேறித்தனத்தின் காரணமாக) ஒருவர் விட்டிருந்தாலும் (அவர் இறை நிராகரிப்பாளனாகி விடுவார்.)
மேலும், எவரொருவர் தொழுகை (முஸ்லிம்களின் மீது) கடமையில்லை என்று கூறி மறுத்துவிட்டால் அனைத்து உலமாக்களின் கருத்தின் படி அவர் (காபிராக) இறைநிராகரிப்பாளனாக ஆகிவிடுவார். அவர் தொழுதாலும், ஸகாத் கொடுத்தாலும், அதுவல்லாத வேறு (வணக்கங்கள்) செய்தாலும் தொழுகை கடமை என்பதை மறுக்கும் காலமெல்லாம் அவர் (காபிர்) இறை நிராகரிப்பாளனாவான்.
எவரொருவர் தொழுவது கடமை என்பதை ஏற்றுக் கொண்டு சோம்பேறித்தனத்தின் காரணமாக தொழுகையை விட்டு விட்டால் அவர் விடயமாக உலமாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. (இக்கருத்துக்களில்) அவர் இறை நிராகரிப்பாளன் என்பதே சரியான கருத்தாகும். (அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவராகக் கருதப்படுவார்.)
அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:-
எங்களுக்கு மத்தியிலும் (காபிர்களான) அவர்களுக்கு மத்தியிலும் உள்ள உடன்படிக்கை தொழுகையாகும். அதை விட்டு விடுபவர் காபிராகி விடுவார்.
இந்த ஹதீஸை இமாம்களான திர்மிதீ (2621) அந்நஸாஈ (463), இப்னுமாஜா (1079), அஹ்மத் (22428) போன்றவர்கள் தமது கிரந்தங்களில் பதிவு செய்துள்ளனர்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:-
எவரொருவர் அஸ்ர் தொழுகையை விட்டு விடுகிறாரோ அவரின் அமல்கள் அழிந்து விடுகின்றன.
(புகாரி-553)
மேலும் அல்லாஹ்வின் தூதர் -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- அவர்கள் கூறினார்கள்:-
விடயங்களில் தலையாகக் கடமை இஸ்லாமாகும். அதனது தூணாக இருப்பது தொழுகையாகும்.
(திர்மிதீ – 2616)
பார்க்க:-
அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் “فتاوى نور على الدرب” என்று பத்வா தொகுப்பு (பாகம் – 15/ பக்கம் 12-14 )
தமிழாக்கம் : அபூ அப்திர் ரஹ்மான் (அப்பாஸி,மதனி)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:


