கேள்வி: குடும்பத்தார் அனைவரும் ஈத் அல் அத்ஹா அன்று உத்ஹிய்யா இறைச்சி உண்ணும்வரை மற்ற உணவுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளவேண்டுமா? அல்லது குடும்பத் தலைவர் மீது மட்டும் தான் இது கடமையா?
பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவ்னுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவாின் குடும்பத்தார் மீதும் தோழர்களின் மீதும் உண்டாகட்டும்.
புறைதா رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி صبى الله عليه وسلم ஈதுல் ஃபித்ராவுடைய நாளில் உணவுன்னாமல் வெளியேரமாட்டார்கள், ஆனால் நஹ்ருடைய நாளில் ( தியாக நாளில்) திரும்பி செல்லும்வரை உண்ண மாட்டார்கள், (வீடு வந்து) தியாகம் செய்யப்பட்டதில் இருந்து உண்ணுவார்கள்” (திர்மிதீ, முஸ்ணத் அஹ்மத்)
இமாம் அந் நவவி இதன் அறிவிப்பாளர் வரிசைகள் ஹஸன் தரத்தில் உள்ளன, இந்த ஹதீஸ் ஹஸன் தர ஹதீசாகும் என்று கூறுகிறார், அதே போன்று இமாம் அல் ஹாகிம் இது ஸஹீஹான ஹதீஸ் என்று கூறுகிறார்.
இமாம் அஸ் ஸைல’ஈ: இது உத்ஹிய்யா கொடுப்பவருக்குண்டான சட்டம், மற்றவர்களுக்கு அல்ல என்று கூறுகிறார். (தப்யீன் அல்ஹகாயிக்)
கஷ்ஃப் அல் கினா எனும் நூலில் கூறப்பட்டுள்ளது: நபி صلى الله عليه وسلم ஈதுல் அத்ஹா அன்று வீட்டுக்கு திரும்பும்வரை உண்ண மாட்டார்கள், வீடு திரும்பி அறுக்கப்பட்ட இறைச்சியில் இருந்து உண்ணுவார். ஒருவருக்கு அருத்துப் பலியிடும் பிராணி இல்லை என்றால் அவா் உண்பதால் கவலை இல்லை.
துஹ்ஃபதுல் அஹ்வதி எனும் நூலில் வந்துள்ளதாவது: இமாம் அஹ்மத் ஈதுல் அத்ஹா அன்று உணவு உண்பதை தாமதப்படுத்துவதை தியாகப் பிராணி உடையவருக்கு மட்டும் தான் முஸ்தஹப் என்று கருதுகிறார்.
நாம் மேல் கூறியவற்றில் இருந்து இரு விடையங்கள் புரிகிறது
முதலில்:ஈதுல் அத்ஹா அன்று தியாகம் செய்யப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணும் வரை மற்ற உணவுகளை தவிர்ந்து கொள்வது கடமை அல்ல, விரும்பத்தக்க விடையம் தான்.
இரண்டு: இது தியாகம் செய்யும் மனிதர்களுக்கான சட்டமே தவிர, அவாின் குடும்பத்தாருக்கு அல்ல, ஹதீஸில் இருந்து இவ்வாறே புரிந்து கொள்ள முடிகிறது, இதுவே உலமாக்களின் கருத்து.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
மூலம்: https://www.islamweb.net/ar/fatwa/13910
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: