இரத்தம் வெளியாவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இரத்தப்போக்கு ஒருவருடைய வுழூவை முறிக்காது.
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப்பகுதியிலிருந்தும் இரத்தம் வெளியாவது ஒருவருடைய வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இரத்தம் வெளியாகுவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை.
வணக்கங்கள் வஹியின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், எனவே எந்தவொரு வணக்க வழிபாடும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டதாக ஆதாரங்கள் இல்லாமல் கூறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.
பெண்ணுறுப்பைத் தவிர மற்ற பகுதிகளில் இருந்து வெளியாகும் இரத்தம் அதிகமாக அதிகமாக இருந்தால், வுழூ முறிந்துவிடும் என்பது சில அறிஞர்களின் கருத்தாக உள்ளது. எனவே இந்த நிலையில் உள்ள (அதிகமாக இரத்தம் வெளியாகிய) ஒருவரின் பாதுகாப்பான/சிறந்த தேர்வு என்பது வுழூ செய்வதாகும்.
முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதை விட்டுவிடுங்கள், உங்களுக்கு சந்தேகம் வராததின் பக்கமே நிலைத்திருங்கள் (செயல்படுங்கள்).”
கேள்வி : வாந்தி வுழூவை முறித்துவிடுமா? பதில் : வாந்தி என்பது குறைவாகவோ அல்லது கூடுதலாகவே இருந்தாலும் அது வுழூவை முறிக்காது என்பதுவே ஆதாரமான கருத்தாகும். ஏனெனில், வாந்தி என்பது வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. எனவே, வுழூ தொடர்ந்திருக்கும் என்பது அடிப்படையாகும். ”ஆதாரத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தை (மற்றுமொரு) ஆதாரத்தின் மூலமே அல்லாமல் (நினைத்த விதத்தில்) அதனை முறித்துவிட முடியாது.” என்ற இந்த கோட்பாடு மாணவர்களுக்கும்…
பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 05 | -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து… நிபாஸும் (பேறுகால உதிரப்போக்கும்) அதன் சட்டங்களும்: நிபாஸ் என்பது, பேறு காலத்தின் போதோ, பிரசவத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களளுக்கு முன்போ அல்லது பின்போ பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து வலியுடன் வெளியாகும் இரத்தத்தைக் குறிக்கும். ஷெய்ஹூல் இஸ்லாம் இப்னு தைமியா…
பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் - 04 | -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து... (இஸ்திஹாழா) தொடர் உதிரப்போக்கும் அது தொடர்பான சட்டங்களும்: இஸ்திஹாழா என்பது ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பிலிருந்து தொடர்ச்சியாக அல்லது மிகக் குறைந்த காலத்திற்கு (மாதாந்தம் இரண்டொரு நாட்களுக்கு) நின்று மீண்டும் வெளிவரும் இரத்தத்தைக் குறிக்கும். (குறிப்பு : மாதவிடாய் இரத்தமானது கர்ப்பப்பையின் ஆழத்திலிருந்து வெளியாகும்.…