இஸ்லாமிய மார்க்க விளக்கம் பற்றி பதிவு செய்யப்பட்ட(ஆடியோ/வீடியோ) பாடங்களைக் கேட்பதன் மூலம் முஸ்லிமிற்கு நன்மைகள் கிடைக்குமா?

கேள்வி:

இஸ்லாமிய மார்க்க விளக்கம் பற்றி பதிவு செய்யப்பட்ட(ஆடியோ/வீடியோ) பாடங்களைக் கேட்பதன் மூலம் முஸ்லிமிற்கு நன்மைகள் கிடைக்குமா?

பதில்:

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

அறிவைத் தேடுவது நற்செயல்களில் மிகச் சிறந்த ஒன்றாகும், மேலும் இது ஒரு நபர் தனது நேரத்தை செலவிடுவதற்கான சிறந்த வழியாகும்,மேலும் முஸ்லிமை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சிறந்த பாதையாகும்.

இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

கல்வி கற்பது என்பது இறைவழிபாடுகளில் ஒன்று.

ஜாமி’ பயான் அல்-இல்ம் (1/104).

சுஃப்யான் அத்-தவ்ரி(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

கட்டாயக் கடமைகளுக்குப் பிறகு அறிவைத் தேடுவதை விட சிறந்த செயல் எதுவும் இல்லை.

ஹுல்லியாத் அல்-அவ்லியா’ (6/361).

அஸ்ஸுஹ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வை வணங்குவதில் அறிவைத் தேடுவது போன்ற சிறந்த ஒன்று இல்லை.

ஜாமி’ பயாம் அல்-இல்ம் (1/119).

அப்துல்லாஹ் இப்னு வஹ்ப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மாலிக் இப்னு அனஸ் அவர்களிடம் படித்துக் கொண்டிருந்த போது, ​​லுஹ்ர் அல்லது அஸர் தொழுகைக்கான நேரம் வந்தபோது,நான் எனது புத்தகங்களை எடுத்து வைத்து வழிபாடு செய்ய எழுந்தேன்,அதற்கு

இமாம் மாலிக்:நீங்கள் என்ன செய்கிறீர்கள்?என கேட்டார்கள்.

அதற்கு நான் கூறினேன்:
நான் தொழுகைக்கு எழுந்திருக்கிறேன் என கூறினேன்.அதற்கு,

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்:உங்களின் இந்த செயல் விசித்திரமானது.உங்கள் எண்ணம் சரியானதாக இருந்தால், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்(கல்வி கற்றல்) என்பதை விட நீங்கள் எழுந்திருப்பது(உபரி தொழுகைக்காக செல்வது) சிறந்தது அல்ல என கூறினார்கள்.

ஜாமி’ பயான் அல்-’இல்ம் (122).

அறிஞர்களின் பாடங்களை நேரிலும், பதிவுகளிலும் கேட்பது அறிவைப் பெறுவதற்கான மிக முக்கியமான வழிமுறைகளில் ஒன்றாகும்.

தற்காலத்தில், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், நாடாக்கள், குறுந்தகடுகள் மற்றும் பிற ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்ட பாடங்கள் உட்பட, அறிஞர்கள் தங்கள் பாடங்களில் என்ன கற்பிக்கிறார்களோ, அதன் மூலம் பல நல்ல வழிகளை அல்லாஹ் நமக்குக் கிடைக்கச் செய்துள்ளான்.இந்த பதிவு செய்யப்பட்ட பாடங்களைக் கேட்பதில் பல நன்மைகள் உள்ளன:

1.. இது மாணவர் பாடங்களை/அறிவுரைகளை கவனத்துடன் கேட்க பயிற்சியளிக்கிறது,இது மாணவர் அறிவைப் பெறுவதற்கும் பேச்சாளரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், பழகுவதற்கும்,மேலும் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான விஷயங்கள் பேசும் போது நிறுத்தி கேட்பதற்கு உதவும் ஒரு நேர்த்தியான மற்றும் நல்ல அணுகுமுறை.

சுஃப்யான் அத்-தவ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

“அறிவை அடைவதற்கான முதல் படி மௌனமாக இருப்பது, பிறகு கேட்பது, பிறகு மனப்பாடம் செய்வது, அதற்கு பிறகு அதன்படி செயல்படுவது,பிறகு அந்த அறிவைப் பரப்புவது ஆகும்”

ரவ்தத் அல்-உகலா’ (34)

2.கல்வியை தேடும் மாணவர் முதல் முறையாக அறிஞர்களின் வார்த்தைகளை கேட்கும்போது அவர் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அதை மாணவர் மீண்டும் அதனை கேட்க முடியும், ஏனெனில் சில கருத்துகள் மாணவர்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் அவர் அதை மீண்டும் கேட்டால் அது தெளிவாகிவிடுவார்.

3.கல்வியை தேடும் மாணவர் தேவைபடும் போது பதிவினை  இடைநிறுத்தலாம் அல்லது சில பகுதிகளை மீண்டும் கேட்கலாம் என்பதால்,சில பயனுள்ள குறிப்புகள் எழுதுவதை இது எளிதாக்குகிறது.

4.நீண்ட தூரம் பயணம் செய்து நேரிடையாக அறிஞர்களிடம் கல்வி கற்க முடியாத மாணவர்கள் நேரிடையாக அறிஞர்களிடம் கற்று கொள்வதை இது எளிதாக்குகிறது.

இப்போதெல்லாம் இஸ்லாமிய ஆடியோ நூலகத்தில் நூற்றுக்கணக்கான பயான்கள் மற்றும் பயனுள்ள பாடங்கள் உள்ளன.இது மாணவர்களின் நேரத்தையும்,முயற்சியையும் மற்றும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.

5.. இந்தப் பாடங்களை நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லலாம் மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளில் அவற்றைக் கேட்கலாம்: வாகனம் ஓட்டும்போது, ​​வேலை செய்யும் போது, ​​மற்றும் பல நேரங்களில் கேட்கலாம். இது நேரத்தை நன்றாகப் பயன்படுத்த உதவுகிறது மற்றும் ஒருவரின் ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த உதவுகிறது.

ஆனால் இந்த பயன்பாடு, நேரடியாக வகுப்புகளில் கலந்து கொள்வதையும், அறிஞர்களிடமிருந்து நேரடியாகக் கற்று கொள்வதையும் நாம் தவிர்க்கலாம் என்பது இதன் அர்த்தமல்ல.
ஒவ்வொரு முறைக்கும் அதன் நன்மைகள் உள்ளன, மேலும் அறிவினை வெற்றிகரமான தேடுபவர் யார் என்றால் அனைத்து வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்துபவரே.எப்படி தோட்டத்தின் அனைத்து பூக்களிலிருந்தும் தேன் எடுப்பது என்பதை அறிந்தவரைப் போல.

பதிவு செய்யப்பட்ட பாடங்களைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் அருளால் அவர் மகிமையும் மேன்மையும் அடைவார் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் அல்லாஹ் அந்த மக்கள் மீது அமைதியை இறக்கி, அவனது கருணையையும் இறை அருளையும் வழங்குவான் என்று கீழுள்ள ஹதீஸின் மூலமாக நாங்கள் நம்புகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

…… மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் அல்லாஹ், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்பவர்(மலக்குமார்கள்)களிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5231

அல்லாஹ் மிக அறிந்தவன்…

Source:IslamQ&A

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply