இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் இணைவைப்பாளர்களின் பண்டிகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்கலாமா மற்றும் அவர்களின் அப்பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறலாமா ?

الحمد لله

لا يجوز حضور أعياد المشركين
قال ابن القيم رحمه الله : ولا يجوز للمسلمين حضور أعياد المشركين باتفاق أهل العلم الذين هم أهله . وقد صرح به الفقهاء من أتباع المذاهب الأربعة في كتبهم . . . وروى البيهقي بإسناد صحيح عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال : (لا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم) . وقال عمر أيضاً : (اجتنبوا أعداء الله في أعيادهم) . وروى البيهقي بإسناد جيد عن عبد الله بن عمرو أنه قال : (من مَرَّ ببلاد الأعاجم فصنع نيروزهم ومهرجانهم وتشبه بهم حتى يموت وهو كذلك حشر معهم يوم القيامة) انتهى من أحكام أهل الذمة 1 /723-724 .
அல்ஹம்துலில்லாஹ்.،
இணைவைப்பாளர்களின் பண்டிகைகளில் பங்கேற்பதற்கு அனுமதி இல்லை.
இமாம் இப்னுல் கய்யிம்(அல்லாஹ் அவர்களின் மீது கருணை காட்டட்டும்) கூறினார்கள்: சான்றுள்ள உலமாக்களின் ஒருமித்த கருத்தின்படி முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களின் பண்டிகைகளில் பங்கேற்பதற்கு அனுமதி இல்லை. நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடிய மார்க்க அறிஞர்கள் இதனை அவர்களது புத்தகங்களில் தெளிவாக கூறியுள்ளார்கள். பைஹகி அவர்கள் ஆதாரம் உள்ள ஒரு தொடரில் உமர் பின் கத்தாப்(அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக) கூறுவதாக அறிவித்தார்கள்: “இணைவைப்பாளர்களின் விழா நாட்களில் அவர்களுடைய ஆலயங்களில் நீங்கள் நுழையாதீர்கள் ஏனெனில் இறைக்கோபம் அவர்கள் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது.”
மேலும் உமர்(அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக)அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வினுடைய எதிரிகளை அவர்களின் விழா பண்டிகைகளில் நீங்கள் தவிர்த்து விடுங்கள்”. பைஹகி அவர்கள் சரியான ஒரு தொடரில் அப்துல்லாஹ் பின் அம்ர்(அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள் “எவரொருவர் அரபில்லாத நிலங்களிலே(இஸ்லாமிய கலாச்சாரம் இல்லாத இடங்கள்) வசித்து மேலும் அவர்களுடைய புத்தாண்டிலும் அவர்களுடைய விழா பண்டிகைகளிலும் பங்கேற்று அவர்களை ஒத்து பின்பற்றி அதே நிலையில் மரணிக்கிறாரோ அவர் மறுமை நாளில் அவர்களுடன் எழுப்பப்படுவார்,” (அஹ்காம் அஹ்லத்திம்மாஹ், 1/723-724).

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply