அறிஞர்களின் கருத்துகளில் பிடிவாதமாக இருப்பவர்களுக்கான அறிவுரை என்ன?

கேள்வி:

மக்களில் சிலர் சில மனிதர்களை அதிகமாக கண்ணியப்படுத்துவதோடு, அவர்கள் கூறும் கருத்துக்கள் (பிழையாக இருப்பினும் அவைகளில்) பிடிவாதமாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் கூறும் உபதேசம் என்ன?

பதில்:

ஒருவர் யாருடன் இருந்தாலும் அவர் சத்தியத்தையே பின்பற்ற வேண்டும். சத்தியத்துக்கு முரணான கருத்துக்களை கூறும் மனிதர்களை அல்ல.

இமாம் அஹ்மத் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறினார்கள்:-

ஒரு கூட்டத்தினர் விடயத்தில் நான் ஆச்சரியமடைகிறேன். அவர்கள் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையையும், அது ஆதாரப்பூர்வமானது என்றும் அறிந்துள்ளார்கள். (ஆனால்) அவர்கள் ஸுப்யான் (அஸ்ஸவரி) அவர்களின் கருத்தை கூறுகின்றனர்.

அல்லாஹ் கூறினான்:-

ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:63)

“فتح المجيد شرح كتاب التوحيد” (386)

இப்னு அப்பாஸ் -ரழியல்லாஹு அன்ஹூமா- அவர்கள் கூறினார்கள்:-

உங்கள் மீது வானத்திலிருந்து பாறாங்கல் ஒன்று இறங்க ஏதுவாகி விட்டது. ஏனெனில் நான் அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக கூறுகிறேன். நீங்களோ (அதற்கு மாறாக அபூபக்கர் மற்றும் உமர் அவர்கள் சொன்னதாக கூறுகின்றீர்களே! )

நபிமார்களுக்கு பின் மனிதர்களில் மிக சிறந்தவர்களான (அந்த சஹாபாக்களே) ஆதாரமின்றி கூறும் விடயங்களுக்கு இவ்வாறான எச்சரிக்கை செய்யப்படும் போது மார்க்கத்தில் எவ்வித அறிவும், அந்தஸ்தும் அற்றவர்கள் கூறும் கருத்துக்களை பின்பற்றுவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்??

பதிலளித்தவர்:

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்.

பார்க்க:

“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة” (159-160)

மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply