ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன? 

கேள்வி :

இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று வகைப்படுத்துகிறாரே!? என்று எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் கேட்கின்றார். குறிப்பாக கலாநிதி முஸ்தபா ஹில்மீ போன்ற ஸலபி அழைப்பாளர்களும் இக்கருத்தை தமது புத்தகங்களில் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தங்களது கருத்து என்ன?

 

பதில் :

ஸூபித்துவம் என்பது எவ்வகையிலும் புகழப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் அது ஸூபித்துவம். என்றாலும் குர்ஆன் ஹதீஸில் உள்ள ஒரு விடயம் ஸூபித்துவத்தில் இருந்தால் அதை ஸூபித்துவம் என்று மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது : அதிகமான ஸூபிகளின் கூற்றுக்களை விட நான்கு இமாம்களின் மத்ஹபுகளின் கருத்துக்கள் மிகவும் பலமானவையாகவும் சீரானதாகவும் இருக்கின்றன. என்பதில் சந்தேகமில்லை. குர்ஆன் ஸுன்னாவில் இருக்கும் ஒரு விடயம் மத்ஹபொன்றில் இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுவது மத்ஹபு என்பதற்காக அல்ல. குர்ஆன் ஸுன்னாவில் இருப்பதாலே அது ஏற்கப்படுகிறது.அதேநேரம் குர்ஆன் ஸுன்னாவிற்கு முரணான ஒரு விடயம் மத்ஹபொன்றில் இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

ஸூபித்துவமும் இவ்வகையானது தான். அதிலுள்ள குர்ஆன் ஸுன்னாவில் உள்ளவைகள் சரியானவை. அவற்றுக்கு முரணானவைகள் தவறானவை. அதற்காக நல்ல ஸூபித்துவம் கெட்ட ஸூபித்துவம் என்று வகைப்படுத்தி வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் குர்ஆனும் ஸுன்னாவும் இவையனைத்தையும் தேவையற்றதாக்கி விடும். இதுவே எனது கருத்தும் நம்பிக்கையுமாகும்.

பதிலளித்தவர்:இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்)

நூல்: أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

அரபு மூலம்:

ما رأيكم في تقسيم ابن تيمية رحمه الله تعالى التصوف لسني وبدعي؟

 

*السؤال :* عندي أحد الإخوة وفيه عنده هذا السؤال، يقول : يميل الشيخ ابن تيمية إلى تقسيم التصوف لسني وبدعي فما قول فضيلتكم خاصة وإن هذا الرأي يميل له الآن بعض دعاة السلفية كالدكتور مصطفى حلمي في كثير من كتبه؟

 

*الشيخ الألباني رحمه الله تعالى :* على كل حال، التصوف لا يمدح،لأنه تصوف. لكن ما كان منه مطابقا للكتاب والسنة فهو مما لا ينبغي عدم رده بمجرد أنه يقال إنه تصوف. يعني لا شك أن المذهب من المذاهب الأربعة للأئمة الأربعة هو الأقوى والأسلم من كثير من أقوال المتصوفة.

فكما أنه يوجد في كل مذهب من المذاهب ما يوافق الكتاب والسنة فيؤخذ به لموافقته للكتاب والسنة. لا لأنه مذهب إمام من الأئمة. وإذا وجد في مذهب من مذاهب هؤلاء الأئمة ما يخالف الكتاب والسنة رد ورفض وإن كان قد قال به إمام من الأئمة.

فالتصوف كذلك يقال فيه. ما وافق الكتاب والسنة فهو صواب وما خالفهما فليس بصواب. لكن لا ينبغي أن يقال هناك تصوف صالح وتصوف طالح، لأن ما في الكتاب والسنة يغني عن كل ذلك، هذا رأيي واعتقادي.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply