ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்

 

கேள்வி:-

 

என்னிடம் ஒரு தொகைப் பணம் உள்ளது. மூன்று வருடங்களாக அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை. தற்போது நான் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும்.

 

பதில்:-

 

தங்கம், வெற்றியைப் போன்று பணத்தை 40 பங்குகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும்.

நீங்கள் கூறியதைப் போன்று மூன்று வருடங்களாக ஸகாத் வழங்கவில்லையெனில் உங்களது பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். இதுவே உங்களது விடுபட்ட முதல் வருடத்தின் ஸகாத் ஆகும்.

 

மறுபடியும் மீதியாக உள்ள பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். இதுவே உங்களது விடுபட்ட இரண்டாம் வருடத்தின் ஸகாத் ஆகும்.

 

மறுபடியும் மீதியாக உள்ள பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். இதுவே உங்களது மூன்றாவது வருடத்தின் ஸகாத் ஆகும்.

 

பார்க்க:-

مجموع فتاوى ابن العثيمين (18/32)

கேள்வி:-

 

தங்கம், வெள்ளியின் ஸகாத்தின் அளவு யாது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய “ஸாஃ” என்பதன் அளவை கிலோ கிராமில் நாம் எவ்வாறு அறிந்து கொள்வது ?

 

பதில்:-

 

தங்கத்தின் அளவை பொருத்தவரையில் 85 கிராமிற்கு சமமான “20 மிஸ்கால்கள்” ஆகும்.

வெள்ளியின் அளவை பொருத்தவரையில் 595 கிராமிற்கு சமமான 140 மிக்கால்கள் ஆகும்.

நபி -ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்- காட்டித் தந்த “ஸாஃ” என்பதின் அளவை பொருத்தவரையில் 2 கிலோ 400 கிராம்களாகும்.

 

பார்க்க:-

مجموع فتاوى ابن العثيمين (18/93) (18/138)

இவை அனைத்தும் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களின் மார்க்கத் தீர்வில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.

 

அல்லாஹ் இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பல பிரயோசனங்களை வழங்குவானாக.

 

தமிழில்:-

அபூ அப்திர்ரஹ்மான் (அப்பாஸி,மதனி)

 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply