ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

கேள்வி 4️⃣ :

ஒருவர் ரமளான் மாதம் வந்துவிட்டதா(?) என்பதில் சந்தேகம் கொள்பவராக இருந்தால், அவர் (ரமழானுக்கு) முந்தைய நாள் நோன்பு நோற்கலாமா?

📝 பதில் :

இந்த கருத்தை ஹன்பலீ மத்ஹபை சேர்ந்தோர் கொண்டுள்ளனர். இருப்பினும் சரியான கருத்து என்னவெனில், அந்நபர் (அவ்வாறு) நோன்பு நோற்கக் கூடாது என்பதே.!

நபி صلى الله عليه و سلم அவர்கள் கூறுவதாவது :

لا تقدموا رمضان بصومٍ يومٍ ولا يومين
“ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள்….”

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1976)

அம்மார் பின் யாஸீர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிப்பதாவது : “சந்தேகத்திற்கிடமான நாளில் (ரமளானுக்கு ஒரு நாள் முன்பு) நோன்பு நோற்பவர் நபியவர்களுக்குக் கீழ்ப்படியவில்லை.”

எனவே, ரமளானுக்கு முந்தைய நாளில் நோன்பு நோற்க கூடாது என்பதே சரியானது.

நபி صلى الله عليه و سلم அவர்கள் கூறுவதாவது :

صوموا لرؤيته وأفطروا لرؤيته ، فإن غبي عليكم فأكملوا عدة شعبان ثلاثين

“பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (ஷஅபான் மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்.”

(📖 நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1973)

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

மூன்றாம் பாகத்தை வாசிக்க

ஐந்தாம் பாகத்தை வாசிக்க

வீடியோ வடிவில் பார்வையிட:

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

1 thought on “ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்”

Leave a Reply