பணப்பறிமாற்றத்திற்காக வங்கிக்கு செலுத்தும் மேலதிக தொகை(Extra Charges) கான மார்க்க சட்டம் என்ன?

கேள்வி:

பணப்பறிமாற்றத்திற்காக வங்கிக்கு செலுத்தும் மேலதிக தொகைக்கான மார்க்க சட்டம் என்ன?

பதில்:

இவ்வாறான வங்கி சேவைகள்( ஹவாலா) என்று அழைக்கப்படும்.

அறிஞர்கள் இதற்கு விளக்கமளிக்கையில் :

ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படி ஒரு வங்கிக்கோ அல்லது பிற நிறுவனத்திற்கோ நாட்டிற்குள் அல்லது வெளி நாட்டுக்கோ அல்லது அந்த வங்கியின் ஒரு கிளைக்கோ – குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அனுப்பி வைப்பதாகும்..

இந்த வங்கிப் பணப் பரிமாற்றம் என்பது வாடிக்கையாளரிடமிருந்து வங்கிக்கு கடன் வழங்குவதுமல்ல ,

அதுபோல் பிக்ஹ் கலையில் (ஹவாலா)
என்ற சொல்லுக்குறிய பரிபாசை அர்த்தமுமில்லை அதாவது (தனக்கு பொறுப்பான கடனை இன்னொருவரின் மீது பொறுப்பு சுமத்தல் )

மாற்றமாக இது தன்னுடைய வங்கிக் கணக்கில் உள்ள தொகையை இன்னொருவரின் வங்கிக்கு அனுபுதல் ஆகும்.

பேராசிரியர் யுசுப் அஷ்ஷபீலிய் ஹபிழஹுல்லாஹ் இதைப்பற்றி கூறுகையில்:

வாடிக்கையாளர் வங்கிக்கு செலுத்தும் மேலதிகத்தொகை அனுமதிக்கப்பட்டதாகும்.

ஏனெனில் இது வாடிக்கையாளரின் பணிக்கு மாற்றீடாக வழங்கப்பட்ட தொகையாகும்.
(அதாவது வங்கி வாடிக்கையாளர் தனது பணத்தை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்காக வழங்கப்பட்டது.)

இந்த முறையின் நோக்கம் பணப்பறிமாற்றமே தவிர மேற் குறிப்பிட்டது போல் வங்கிக்கு செலுத்தும் மேலதிக கடனோ அல்லது பிக்ஹ் கலையின் பரிபாஷை அர்த்தம் கொடுக்கும் ஹவாலாவோ கிடையாது..

இன்னும் தெளிவாக சொல்லுவதாயின் மார்க்கச்சட்டத்தின் படி ஹவாலா என்பது கடன் கொடுப்பவர், கடன் கொடுக்கப்பட்டவர், கடன்கொடுக்கப்பட்ட தொகை, கடன் கொடுக்கப்பட்டவரின் கடனை பொறுப்பேட்பவர்.இவ்வாறானோர் உள்ளடங்கப்படுவார்கள். இந்த முறை மேற் குறிப்பிட்டதை விட சற்று வித்தியாசமானது.

அதுபோல் அவர் வங்கிக்கு செலுத்தும் மேலதிக கடன் தொகையும் இல்லை..

இதன்படி வங்கி ஒருவரின் பணப்பறிமாற்றத்திற்கு எடுக்கும் தொகை ஆகுமானதே ஆகும்.

பிக்ஹ் அல் முஆமலாத் அல் மஸ்ரபிய்யா (32)

அதேபோல் கராராது மஜ்மயி அல் பிக்ஹ் அல் இஸ்லாமிய்யி (1/88) ஒன்பதாவது அமர்வில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள்:

“ஒருவர் தனது பணத்தை அதே பணத்தொகையில் பரிமாற்றம் செய்ய நாடுவது அல்லது ஏனைய நாணயத்திற்கு மாற்றுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்..
இந்த பணிக்கு மேலதிக தொகை வங்கியால் நிர்ணயிக்கபட்டாலும் சரி அல்லது நிர்ணயிக்கபடாவிட்டாலும் சரி”..

அல்லாஹ் மிக அறிந்தவன்…….

இதுவே சுருக்கமான விளக்கம் மேலதிக தகவலுக்கு கீழ் வரும் இணைப்புக்களை நாடவும்.

1)https://www.islamweb.net
2)https://www.islamweb.net

தமிழாக்கம்:ஷெய்க் இல்ஹாஜ் இல்யாஸ் முஹாஜிரி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d