சூரியன் உதிக்கும்/மறையும் போது விழித்தவர் எப்போது தொழுவது?

கேள்வி :சூரியன் உதிக்கும்போது விழித்தவர் எப்போது தொழுவது?

ஒருவர் தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்  என்றும் சூரியன் உதயமாகும்போது தொழாதீர்கள் ஏனெனில் அது ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகிறது என்றும் நபி அவர்கள் கூறியுள்ளார்கள் எனவே ஒருவர் ஃபஜர் தொழாமல் தூங்கி சூரியன்உதிக்கின்ற போது விழித்துவிட்டால் அவர் அப்போதே தொழவேண்டுமா அல்லது சூரியன் உதித்து உயரும் வரை காத்திருக்கவேண்டுமா? மேற்கூரிய இரண்டு நபிமொழியையும் எவ்வாறு பொருத்திப்பார்ப்பது என்பது தான் எனது கேள்வி.

பதில் : ஒருவர் ஃபஜர் தொழாமல் தூங்கி சூரியன் உதிக்கின்ற போதோ அல்லது அதற்கு சற்று முன்னரோ அல்லது உதித்த்தற்குபிறகோ அவர் விழித்து கொண்டால் ஃபஜர் தொழுவது அவர்மீது கடமையாகும்.

அவர் தொழுகின்ற போது சூரியன் உதித்திருந்தாலும் சரி அல்லது அவர் தொழ ஆரம்பித்த பிறகு உதித்தாலும் சரி அல்லது உதயமாகின்றபோது தொழ ஆரம்பித்தாலும் சரி சூரிய ஒளி முழுமையாக படர்வதற்கு முன் தொழுகையை அவர் நிறைவு செய்ய வேண்டும்.இது தான் அஸர் தொழுகைக்குமான சட்டமும் யார் தொழமல் தூங்கிவிடுகிறாறோ  , அல்லது மறந்துவிட்டாறோ அவர் தூக்கத்திலிருந்து விழிக்கின்றபோதோ,அல்லது நினைவுவந்த உடனையோ தொழுது கொள்ள வேண்டும் அவர் தொழுது கொண்டிருக்கும் போது சூரியன் மறைந்தாலும் சரியே.ஃபஜர் தொழுகையை சூரியன் உதித்து உயரும் வரை தாமதப்படுத்தக் கூடாது அஸர் தொழுகையை சூரியன் முழுமையாக மறையட்டும் என்று தாமதப்படுத்தக்கூடாது. நபி அவர்கள் கூறினார்கள்

«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ»


யார் ஒருவர் சுபுஹுடைய ஒரு ரக அத்தை சூரியன் உதயமாவதற்கு முன் அடைந்து கொண்டாரோ அவர் சுபுஹ் தொழுகையை அடைந்து விட்டார் மேலும் யார் அஸர் தொழுகையின் ஒரு ரக அத்தை சூரியன் மறைவதற்குமுன் அடைந்து கொண்டாரோ அவர் அஸர் தொழுகையை அடைந்து கொண்டார்.

[அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல்கள் புஹாரி:579,முஸ்லிம் :அபூதாவூத்:412,திர்மிதி:186 நஸாயி:515 ]

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَسِيَ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا، فَإِنَّمَا كَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا»

யார் தொழாமல் தூங்கிவிட்டாறோ,அல்லது மறந்து விடுகிறாறோ அவர் நினைவுவந்ததும் தொழுது கொள்ள வேண்டும் அதுவே அதற்குறிய பரிகாரமாகும்.
[அறிவிப்பாளர்:அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நூல் அஹ்மத்11972,புஹாரி 597, முஸ்லிம் 1217அபூதாவூத் 442,திர்மிதி:178]

நீங்கள் மேற்கோள் காட்டிய இரண்டு நபி மொழியையும் அறிஞர்கள் முரண்பாடில்லாமல் விளங்கும் விதமாக இனணத்து பொருள் கொண்டுள்ளார்கள் அதன் அடிப்படையில் சூரிய உதயம் மற்றும் மறைவின்போது உபரியாண தொழுகையை தொழுவதற்கு தான் தடை உள்ளது தூக்கத்தினாலோ மறதியினாலோ தவறவிட்ட ஃபர்ளு தொழுகைக்கு அல்ல.
சரியான கருத்தை பின்பற்ற அல்லாஹ் தௌஃபீக் செய்வானக! நபி அவர்கள் அவரது தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக!

[மூலம் :லஜ்னத்து தாயிமா கேள்வி எண்:2  ஃபத்வா எண்: 5545 தொகுதி எண்:-6/14,15]

மொழிபெயர்ப்பு பஷீர் ஃபிர்தெளஸி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply