கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா?

கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா?அல்லாஹ் எங்கே என்று கேள்வி கேட்கும்போது அவன் எழு வானஙகளுக்கு அப்பால் அர்ஷின் மேல் உள்ளான் என்று பதிலளிக்கப்படும்.மேலும் இரவின் கடைசி பகுதியில் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான் என்றும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. இரவின் கடைசி பகுதியில் அல்லாஹ் ஏங்கே என்று ஒருவர் கேள்வி எழுப்பினால் அவருக்கு என்ன பதில் சொல்வோம்,அத்துடன் சில மக்கள் இரவின் கடைசி பகுதி என்பது உலகின் எங்காவது எல்லா நேரமும் இருந்து கொண்டேயிருக்கும் என்றும் கூறுகிறார்கள் எனவே இவர்கள் அல்லாஹ் அர்ஷின் மேல் அல்ல என்று முடிவுகட்டுகிறார்கள்.

பதில் :
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஹ்ஹுன்னத்தி வல் ஜமாஅத்தின் கொள்கையை முதலாவதாக நாம் தெரிந்துகொள்வது நமது கடமையாகும்.
அல்லாஹ் தனக்கு இருப்பதாக கூறியபெயர்களையும் பன்புகளையும் திரித்துகூறாமலும் மாற்றுவிளக்கம் சொல்லாமலும் அதனை மறுக்காமலும் ஏற்றுகொள்வது தான் அஹ்லுஹ்ஹுன்னத்தி வல் ஜமாஅத்தின் கொள்கை .அல்லாஹ் தன்னைகுறித்து எவ்வாறு நம்பிக்கை கொள்ளவேண்டுமென்று ஏவியுள்ளானோ அவ்வாறே அவனை நம்பிக்கை கொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். அல்குர்ஆன் (42:11)

மேலும் அல்லாஹ் தன்னைக்குறித்து நமக்கு தெரிவிக்கும் போது அவன் கூறுகிறான்:


إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் அர்ஷின் மேல் உயர்ந்தான்.(அல்குர்ஆன்:07:54)

الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى
அர்ரஹ்மான் அர்ஷின் அர்ஷின் மேல் உயர்ந்தான்.(அல்குர்ஆன்:20:05)

வேறு பல வசனங்களிலும் அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்துள்ளான் என்று கூறுகிறான் அல்லாஹ் அர்ஷின்மேல் அவனது தாத்துடனேயே உயர்ந்துள்ளான் உயர்தல் என்பது அல்லாஹ்வின் மகத்துவத்திற்கும் அவனது கண்ணியத்திற்கும் தக்கவாறகும்.அதன் வடிவத்தை அவனைத்தவிர வேறு யாரும் அறியமுடியாது .
ஆதாரபூர்வமான நபி மொழியில் அல்லாஹ் இரவின் கடைசியில் மூன்றின் ஒரு பகுதியில் அடிவானத்திற்கு இறங்குவான் என்றுள்ளது
இறைத்தூதர் ﷺஅவர்கள் கூறினார்கள்:

உயர்வும் வளமும் மிக்க ‘நம்முடைய இரட்ச்சகன்  ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.(புஹாரி: 1145,6321,7494 முஸ்லிம் :1386)

அஹ்லுஹ்ஹுன்னத்தி வல் ஜமாஅத்தினரிடத்தில் அல்லாஹ் இறங்குகிறான் என்பதன் பொருள் அல்லாஹ் அவனது மகத்துவத்திற்கு தக்கவாறு யதார்த்தமாக இறங்குவான் என்பதாகும்.அதன் வடிவம் எப்படி என்பதை அவனைத்தவிற வேறு யாரும் அறியமாட்டார்.
அல்லாஹ் இறங்குவதனால் அவனது அர்ஷ் காலியாகி விடுமா இல்லையா என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஷைகு உஸைமின் அவர்கள் கூறினார்கள்;

இதுபோன்றகேள்வி தேவையற்ற ஆராய்ச்சியின் விளைவாகும் இது விரும்பதக்கதுமல்ல இவ்வாறு கேள்வி எழுப்புவோரிடத்தில் நாம் கேட்கிறோம் நீங்கள் நபிதோழர்களைவிட அல்லாஹ்வின் பன்புகள்குறித்து அறிந்துகொள்ள ஆர்வமுடையவரா ஆம் ஏன்று அவர் பதிலளித்தால் அவர் ஒரு பொய்யன் ஆவான் மாறாக இல்லையென்பது அவரது பதிலாக இருந்தால் ஸஹாபாக்கள் எதனை போதுமாக்கிகொண்டார்களோ அது உங்களுக்கும் போதுமானது அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில்அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருவதால் அர்ஷ் காலியாகிவிடுமா ஏன்று கேள்வி கேட்க்கவில்லை .அப்படியானால் நீங்கள் ஏன் இது போன்ற கேள்வியை கேட்கிறீர்கள்? அல்லாஹ் இறங்குகிறான் என்று கூறுங்கள் அர்ஷ் காலியாகிவிடுமா?இல்லையா என்பதைகுறித்து மௌனமாக இருந்துவிடுங்கள் அது தேவையற்றது.நமக்கு அறிவிக்கப்படும் செய்திகளை உன்மைபடுத்துவதற்குத்தான் ஏவப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக அல்லாஹ்வுடைய தாத்துடன் தொடர்பான பன்புகள் விஷயத்தில்.இவை அறிவிற்கு அப்பார்பட்டவையாகும்.(மஜ்மூஃ ஃபதாவா வ ரசாயில் ஷைகு உஸைமின்  1/204 ,205)

இவ்விஷயம் தொடர்பாக ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் கூறினார்கள்:


அல்லாஹ் அர்ஷில் இருந்து இறங்கினாளும் அர்ஷ் காலியாகது என்பதே சரியாகும் ஒரு மனிதனின் உயிர் அவன் மரணிக்கும் வரை இரவிலும்,பகலிலும் அவனது உடலில் இருந்து கொண்டிருக்கும் அவன் உறங்கும் நேரத்தில் அவனது உயிர் மேலே ஏறிச்செல்கிறது என்பது போன்று.மேலும் கூறினார்கள் இரவின் மூன்றில் ஒரு பகுதி மேற்கில் ஒரு நேரத்திலும் கிழக்கில் ஒரு நேரத்திலும் இருக்கும் அதன் அடிப்படையில் நபி அவர்கள் தெரிவித்த இறங்குதல் ஒவ்வொரு பகுதியினருக்கும் அவர்களது இரவின் மூன்றில் ஒரு பகுதியில் தான் நிகழும் இது அல்லாஹ்விற்கு இயலாத விஷயமல்ல. (மஜ்மூஃல் ஃபதாவா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா)


அர்ஷின்மேல் உயர்வது அர்ஷிலிருந்து இறங்குவது என்பது அல்லாஹ்வின் நாட்டத்துடன் தொடர்புடைய அவனது செயல்ச்சார்ந்த பன்புகளாகும்.
இதனை அஹ்லுஹ்ஹுன்னத்தி வல் ஜமாஆவைச்சார்ந்தவர்கள் நம்பிக்கைகொள்கிறார்கள்
ஆனாலும் உவமை கூறுவதையும் உதாரணம் கூறுவதையும் தவிற்ந்து கொண்டு இதனை நம்பிக்கை கொள்வார்கள் அதாவது அல்லாஹ்வின் இறங்குதல் படைப்பினங்களின் இறங்குதலைப் போன்று என்னமாட்டார்கள் அதே போன்று அல்லாஹ் அர்ஷின்மேல் உள்ளான் என்பதை மனிதர்கள் இருப்பதுபோன்று நினைக்ககூடாது அஹ்லுஹ்ஹுன்னத்தி வல் ஜமாஆவை பொருத்தவரை அல்லாஹ் யாவற்றையும் செவியேர்ப்பவன், பார்ப்பவன்அவனைப் போன்று எப்பொருளுமில்லை என்பது தான் அவர்களது நம்பிக்கை இன்னும் படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் மத்தியிலான மகத்தான வேறுபாட்டையும் அல்லாஹ்வின் உள்ளமை,பண்புகள்,செயல்கள் போன்றவைகளையும் தங்களது அறிவின் மூலம் அறிந்துள்ளார்கள் அப்படியிருக்கும் போது அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் எப்படி இறங்குவான்,எவ்வாறு அர்ஷின் மேல் உயர்ந்துள்ளான் என்று சந்தேகம் எழுவது சாத்தியமற்றது.
இதன் நோக்கம் அல்லாஹ்வின் பன்புகளுக்கு வடிவம் இருந்தாலும் அதனை நாம் அறியமாட்டோம் என்பதால் அதனை நம்பிக்கை கொள்வோம் அதனை எதனுடனும் ஒப்பிட மாட்டோம்,அதற்கு வடிவம்கொடுக்கமாட்டோம்.
குர் ஆனிலும் நபி ﷺஅவர்களின் சுன்னாவிலும் வந்துள்ளவை ஒன்றுக்கொன்று ஒருபோதும் முரண்படாது என்பதையும் நாம் உறுதியாக அறிந்துள்ளோம்

அல்லாஹ் கூறுகிறான்:
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன்:04:82)

செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுவது ஒன்றை ஒன்று பொய்யாக்கும் இவ்வாறு அல்லாஹ்வின் கூற்றிலும் அவனது தூதருடய கூற்றிலும் ஏற்ப்படுவது சாத்தியமில்லை தனது அறிவுகுறைபாடின் காரணமாகவோ,அல்லது புரிதலில் உள்ள குறைபட்டின் காரணமாகவோ அல்லது ஆய்வின் குறைபாட்டின் காரணமாகவோ ஒருவர் குர் ஆனிலும் சுன்னாவிலும் முரண்பாடு இருப்பதாக எண்ணினால் அவர் அவருக்கு உன்மை தெளிவாகும் வரை ஆய்வு செய்வதற்கு முயற்சி செய்து அதற்குறிய கல்வியை தேட முயற்சிக்க வேண்டும்.உண்மை அவருக்கு தெளிவாகாவிட்டால் அதனைக் குறித்து அறிந்து வைத்துள்ள அறிஞர்களிடம் அவ்விஷயத்தை ஒப்படைத்து விட்டு சந்தேகத்தை தவிர்த்து உறுதியான நம்பிக்கை உடைய அறிவுடைய மக்கள் கூறியதையே கூறவேண்டும்

கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள்.(அல்குர்ஆன்:03:07)

மேலும் அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் சுன்னவும் ஒருபோதும் முரண்படாது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன் [மஜ்மூஃ ஃபதாவா வ ரசாயில் ஷைகு உஸைமின் 3/237,238]

அல்லாஹ்அர்ஷின்மேல் உயர்ந்திருப்பதுடன்  அடிவானத்திற்கு இறங்கிவருகிறான் என்பதில் முரன்பாடு இருப்பதாக சந்தேகம் கொள்ள காரணம் படைத்தவனை படைப்பினங்களோடு ஒப்பிடுவதால் தான்  மனிதன் அவனது அறிவால் அல்லாஹுவால் படைக்கப்பட்ட மறைவான விஷயங்களையே கற்ப்பனைசெய்ய முடியாதபோது (உதாரணமாக சுவனத்தின் இன்பம்) மறைவான ஞானங்கள் அனைத்தையும் அறிந்த அல்லாஹுவையா கற்ப்பனைசெய்யமுடியும்.
எனவே நாம் இஸ்திவா, (அர்ஷின் மேல் உயர்ந்தான் ) அல் உலுவு( உயர்தல்) போன்ற அல்லாஹ்வின் பன்புகளை அவனது மகத்துவத்திற்கு தக்கவாறு நம்பிக்கைகொள்வோமாக

மூலம்:இஸ்லாம் சூவால் வ ஜவாப்

மொழிபெயர்ப்பு:ஷெய்க் பஷீர் ஃபிர்தெளஸி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply