குர்ஆன் இறங்கும்பொழுதெல்லாம் ரஸுலுல்லாஹி (ﷺ) அதற்கு விளக்கம் (தப்ஸீர்) அளித்து வந்தார்களா ?

ஷய்ஹ் ஸாலிஹ் ஆல் அஷ்ஷய்கிடம் பின் வரும் கேள்வி கேட்க்கப்பட்டது:
هل نزل القرآن وفسّره الرسول صلى الله عليه وسلم. ـ
கேள்வி: குர்ஆன் இறங்கும்பொழுதெல்லாம், ரஸுலுல்லாஹி (ﷺ) அதற்கு விளக்கம்(தப்ஸீர்) அளித்து வந்தார்களா?
பதில்: நபி (ﷺ) முழு குர்ஆனிர்க்கும் தப்ஸீர் அளிக்கவில்லை, குறைந்த சில ஆயத்திற்க்கு மட்டும் தான் தப்ஸீர் அளித்தார்கள். ஏன்?
ஏனென்றால், தப்ஸீர் தேவையின் அடிப்படையில்தான் எழுகிறது.
தப்ஸீர் என்பது குர்ஆனின் அர்த்தங்களை விளக்குவது, யாருக்கு அதன் அர்த்தம் புரியவில்லையோ அவர்களுக்கு விளக்கிக்கூறுவதே தப்ஸீர்.
குர்ஆன் தெளிவான அரபிமொழியில் இறங்கியது . அதை அரபுகள் புரிந்துகொண்டனர், அதன் ஆயத்துகளை விளங்கிக்கொண்டார்கள். ஸஹாபாக்களும் அறிந்துகொண்டனர், குரிப்பிட்ட சில ஆயத்துகளை தவிர, அவற்றிற்கு ரஸூலுல்லாஹ் (ﷺ) தப்ஸீர் அளித்தார். அதனால் நபி(ﷺ)இடமிருந்து அறிவிக்கப்படும் தப்ஸீர் எண்ணிக்கையில் குறைவானதே.
ஸஹாபாக்களின் தப்ஸீர் நபி (ﷺ) அவர்களின் தப்ஸீரைவிட எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது, ஏன்?
ஏனென்றால், ஸஹாபாக்கள் தாபியீன்களிற்க்கு தப்ஸீரை அறிவித்தார்கள். தாபியீன்கள் ஸஹாபாக்களை விட இல்மில் குறைந்தவர்கள், அரபி மொழியின் இல்மிலும், அஸ்பாபின் நுஸுல் எனும் ஆயத்துகள் இறக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த இல்மிலும், குர்ஆனை சுற்றிய பல்வேறு கல்வி துறைகளிலும், நபியின் (ﷺ) வரலாற்றிலும், பொதுவான வரலாற்றிலும், ஜாஹிலிய்யா கால அரபுகள் குறித்த இல்மிலும், மற்ற இல்முகளிலும் தாபியீன்கள் ஸஹாபாக்களை விட இல்மில் குரைந்தவர்கள்.
அதனால் ஸஹாபாக்கள், தாபியீன்களுக்கு அதிகமாக தப்ஸீர் செய்தனர்.
தாபியீன்களுடைய தப்ஸீர் ஸஹாபாக்களின் தப்ஸீரை விட அதிகமாக இருந்தது, அதன் தேவை அதிகமாக இருந்ததால்.
அவ்வாரே தப்ஸீர்கள் அதிகமானது. ஒரு காலகட்டத்தில் மக்கள் குர்ஆனை விளங்க வேன்டும் எனும் ஆசையிலும் மக்களை அதன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்க்காகவும், தப்ஸீர் புத்தகங்கள் எழுதப்பட துவங்கின,

ஆகையால் சுருங்க சொன்னால், நபி (ﷺ) அவர்களிடம் இருந்து வந்த தப்ஸீரின் குறைவான எண்ணிக்கைக்கு காரணம், குர்ஆனின் தெளிவும் தப்ஸீருக்கான தேவை இன்மையும் தான், மேலும் ஸஹாபாக்கள் தப்ஸீரை விளங்கிக்கொண்டதும். சில வேளைகள் அவர்களுக்கு விளங்காததை அவர்களில் சிலர் சிலருக்கு விளக்கப்படுத்தினர் அல்லது நபி (ﷺ) அவர்களுக்கு விளக்கினார்.

النبي صلى الله عليه وسلم لم يفسر القرآن كله، وإنما فسر آيات قليلة، لما؟ لأنّالتفسير يتبع الحاجة، يُفسر بمعنى يبين المعاني، لمن لا يفهم المعاني، والقرآن نزل بلسان عربي مبين، فقهته العرب فهمت الآي، فهمته الصحابة، إلا في بعض الآيات لم تفهم فسرها النبي صلى الله عليه وسلم فالمنقول من تفسيره عليه الصلاة والسلام قليل، تفسير الصحابة أكثر من تفسير النبي صلى الله عليه وسلم، لما؟ لأنّ الصحابة نقلوا للتابعين، والتابعون أقلّ علما بالقرآن من الصحابة لا من جهة اللغة، ولا من جهة أسباب النزول، ولا من جهة معرفة علوم القرآن، والعلوم المختلفة التي دار عليها القرآن، ولا من جهة السيرة، والتاريخ وأحوال العرب والجاهلية، إلى آخره، ففسروا القرآن أكثر، تفسيرهم أكثر، التابعون تفسيرهم لمن بعدهم أكثر من تفسير الصحابة لشدة الحاجة، هكذا إلى زمن التأليف والتصنيف كثرت التفاسير رغبة في أن يفهم الناس القرآن ويقبلوا عليه. ـ

فإذن عدم تفسير النبي صلى الله عليه وسلم للقرآن لوضوحه، وعدم الحاجة إلى تفسيره، ولأن الصحابة رضوان الله عليهم كانوا يعلمون التفسير، وربما لم يعلموا ففسر بعضهم لبعض أوفسر لهم النبي عليه الصلاة والسلام. نعم ـ

மொழிபெயர்ப்பு – நயீம்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d