கிப்லாவை அறியாத நிலையில் தொழுவது

ஒருவன்‌ கிப்லாவைத்‌ தெரிந்து கொள்ள முயற்‌சித்து, பின்னர்‌ ஒரு திசையை நோக்கி இதுதான்‌ கிப்லா என்று நினைத்துத்‌ தொழுதான்‌. தொழுத பிறகு, தான்‌ தொழுதது கிப்லாவை நோக்கி அல்ல எனத்‌ தெரியவந்தால்‌ அத்தொழுகையின்‌ நிலை என்ன? இவ்வாறு அவன்‌ தொழுதது முஸ்லிம்களின்‌ நாட்டிலோ அல்லது நிராகரிப்பாளர்களின்‌ நாட்டிலோ என்றால்‌ அல்லது ஒரு பாலைவனத்தில்‌ என்றால்‌ சட்டநிலையில்‌ வித்தியாசமுண்டா?

பதில்‌: ஒருவர்‌ பயணத்தில்‌ இருந்தால்‌ அல்லது கிப்லாவை அறிவித்துக்‌ கொடூப்பவரில்லாத நாட்டில்‌ இருந்தால்‌- அவர்‌ கிப்லாவின்‌ திசையைக்‌ கண்டறிய முயற்சித்து, பின்னர்‌ ஒரு திசையை நோக்கிக்‌ தொழுத பின்‌ அவர்‌ தொழுதது கிப்லா அல்லாத திசையெனத்‌ தெரிய வந்தால்‌ அவரது தொழுகை நிறைவேறிவிடும்‌. எனினும்‌ அவர்‌ முஸ்லிம்களின்‌ நாட்டில்‌ இருந்தால்‌ அவரது தொழுகை கூடாது. ஏனெனில்‌ கிப்லாவின்‌ திசையைக்‌ காட்டித்‌ தருபவரிடம்‌ அவரால்‌ கேட்டூத்‌ தெரிந்து
கொள்ள முடியும்‌. அதுபோல பள்ளிவாசல்களின்‌ மூலமும்‌ கிப்லாவைத்‌ தெரிந்து கொள்ள இயலும்‌.

 

-இமாம் இப்னு பாஸ் – தொழுகை பற்றிய முக்கியமானகேள்வி பதில்கள்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply