காலை, மாலை துஆக்கள் (திக்ர்கள்) – தொடர் 02

 

بسم الله الرحمن الرحيم

 

நபி ﷺ அவர்கள்  நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 02

 

துஆ: 05

 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ» ، وَإِذَا أَمْسَى قَالَ: «اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ» وأخرج البخاري في الأدب المفرد (١١٩٩) وإسناده حسن

 

___________________

 

காலை நேரத்தில்:

 

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ

 

அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா, வபிக அம்ஸைனா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகன் நுஷூர்

 

பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நேற்றைய மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே மரணிப்போம்; எழுப்பப் படுதலும் உன்பக்கமே!

 

[காலையில் ஒரு முறை]

 

________________

 

மாலை நேரத்தில்:

 

اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ

 

அல்லாஹும்ம பிக அம்ஸைனா, வபிக அஸ்பஹ்னா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகள் மசீர்

 

பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நேற்றைய காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே மரணிக்கிறோம்; உன்பக்கமே திரும்ப வேண்டியுள்ளது.

 

[மாலையில் ஒரு முறை]

 

ஆதாரம்:

 

ஆபூ-ஹுரைரா رضي الله عنه. அவர்களின் ஹதீஸ்:

 

ஆதாபுல் முப்ரத் என்ற நூலில் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் ஹஸன் எனும் தரத்தில் உள்ளது.

 

_____________________

 

துஆ: 06

 

ஸூரத்துல் இஃக்லாஸ்

 

__________________________________

 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

 

قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ۝

 

(நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே!

 

ٱللَّهُ ٱلصَّمَدُ ۝

 

அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!).

 

لَمۡ یَلِدۡ وَلَمۡ یُولَدۡ ۝

 

அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.

 

وَلَمۡ یَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ۝

 

மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.

 

________

 

ஸூரத்துல் ஃபலக்

 

__________________________________

 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

 

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ۝

 

(நபியே! நீர் கூறுவீராக! வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

 

مِن شَرِّ مَا خَلَقَ ۝

 

அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்,

 

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝

 

(இரவினுடைய) இருளின் தீங்கைவிட்டும் – அது பரவிவிடும்போது,

 

وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِی ٱلۡعُقَدِ ۝

 

மேலும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும்,

 

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ۝

 

பொறாமைக்காரனின் தீங்கைவிட்டும் -அவன் பொறாமை கொள்ளும்போது (நான் காவல் தேடுகிறேன்).

 

________

 

ஸூரத்துந் நாஸ்

 

__________________________________

 

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

 

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ۝

 

(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

 

مَلِكِ ٱلنَّاسِ ۝

 

(அவன்தான்) மனிதர்களின் அரசன்.

 

إِلَـٰهِ ٱلنَّاسِ ۝

 

(அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன்.

 

مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ۝

 

பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியவ(னான ஷைத்தா)னின் தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்)

 

ٱلَّذِی یُوَسۡوِسُ فِی صُدُورِ ٱلنَّاسِ ۝

 

அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிறான்.

 

مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ۝

 

(இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர்.

 

[காலையிலும், மாலையிலும் ஸூரத்துல் இஃக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் மூன்று முறை]

 

நன்மைகள்:

 

எல்லாத்தீங்குகளில் இருந்தும் இது உங்களுக்கு போதுமான பாதுகாப்பாக இருக்கும்.

 

ஆதாரம்:

 

‘அப்துல்லாஹ் இப்னு குபைப் رضي الله عنه அவர்களின் ஹதீஸ்.

 

இமாம் அபூ-தாவூத் மற்றும் இமாம் அஹ்மத் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 

______________

 

துஆ: 07

 

عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ، قَالَ: ” أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ. أخرجه أحمد (٢٤/٧٧) وإسناده صحيح.

 

_________________________________

 

أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ

 

அஸ்பஹ்னா அலா பித்ரதில் இஸ்லாமி; வஅலா கலிமதில் இக்லாசி; வஅலா தீனி நபிய்யினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;வஅலா மில்லதி அபீனா இப்ராஹீம ஹனீபன் முஸ்லிமவ்; வமாகான மினல் முஷ்ரிகீன்.

 

பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும், எங்கள் நபி முஹம்மத் ﷺ அவர்களது மார்க்கத்தின் மீதும், எங்கள் தந்தை இப்ராஹீமின் வழிமுறையின் மீதும், காலைப் பொழுதை அடைந்தோம். அவர் இணை வைப்பதை விட்டு விலகியவர்; அல்லாஹ்விற்குப் பணிந்தவர்; அவர் இணை வைப்பவர்களில் உள்ளவர் அல்லர்.

 

[காலையில் ஒரு முறை]

 

ஆதாரம்:

 

அப்துர்-ரஹ்மான் இப்ன் அப்ஸா رضي الله عنه அவர்களின் ஹதீஸ்.

 

இமாம் அஹ்மத் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 

________________

 

துஆ: 08

 

عن عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ» ، وَإِذَا أَمْسَى قَالَ مِثْلَ ذَلِكَ.  أخرجه البزار في مسنده (١٩١١) بإسناد صحيح

 

_________________________________

 

أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ

 

அஸ்பஹ்னா அலா பித்ரதில் இஸ்லாமி; வ கலிமதில் இக்லாசி; வ மில்லதி அபீனா இப்ராஹீம; முக்லிஸீன; லஹுத்தீன்.

 

பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும்; எங்கள் தந்தை இப்ராஹீமின் நேர்மையான வழிமுறையின் மீதும், , காலைப் பொழுதை அடைந்தோம்.

 

[காலை மற்றும் மாலை ஒரு முறை]

 

[ஆனால் மாலையில் கீழ்க்காணும் முறையில் கூறவேண்டும்.]

 

أَمْسَيْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ

 

அம்ஸைனா அலா பித்ரதில் இஸ்லாமி; வ கலிமதில் இக்லாசி; வ மில்லதி அபீனா இப்ராஹீம; முக்லிஸீன; லஹுத்தீன்.

 

பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும்; எங்கள் தந்தை இப்ராஹீமின் நேர்மையான வழிமுறையின் மீதும், , மாலைப் பொழுதை அடைந்தோம்.

 

ஆதாரம்:

 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 

சரியான அறிவிப்பாளர் தொடருடன் பஸ்ஸார் அவரது முஸ்னதில் அறிவிக்கின்றார்.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

-ஸலஃபி தமிழ் இணையதளம்

 

முந்தைய தொடரை வாசிக்க 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply