ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

பதில்‌: ஒருவன்‌ தனது உடம்பிலோ ஆடையிலோ அசுத்தம்‌ இருப்பதுடன்‌ தொழுது விடுகிறான்‌. தொழுது முடித்த பிறகே அந்த அசுத்தம்‌ அவனுக்குத்‌ தெரியவருகிறது எனில்‌ அறிஞர்களின்‌ இரு வேறு கருத்துக்‌களில்‌ சரியான கருத்தின்படி அவனது தொழுகை நிறைவேறிவிடும்‌. இவ்வாறே முன்னரே அசுத்தம்‌ இருப்பது தெரியவந்த பிறகு தொழுகை நேரத்தில்‌ அதனை மறந்து விடுகிறான்‌. பிறகு தொழுது முடித்த பிறகே அது நினைவுக்கு வருகிறது என்றால்‌ அவனது தொழுகையும்‌நிறைவேறிவிடும்‌.

ஏனெனில்‌,

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
“எங்கள்‌ இறைவா! நாங்கள்‌ மறந்துவிட்டாலோ தவறு செய்து விட்டாலோ எங்களைத்‌ தண்டித்து விடாதே!”(2:286)
என்று அல்லாஹ்‌ கூறுகிறான்‌.

மேலும்‌ நபி()அவர்கள்‌ மூலம்‌ அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸும்‌ இக்கருத்தைச்‌ சரிகாணுகிறது. ஒரு நாள்‌ நபி () அவர்கள்‌ செருப்புடன்‌ தொழும்போது அதில்‌ அசுத்தம்‌ இருந்தது. உடனே ஜிப்ரீல்‌( عليه السلام  ) அது பற்றி நபி()அவர்களுக்கு எடுத்துக்‌ கூறியதும்‌ நபியவர்கள்‌ செருப்பைக்‌ கழற்றிவிட்டுத்‌ தொழுகையைத்‌ தொடர்ந்‌தார்கள்‌. அத்தொழுகையைப்‌ புதிதாக முதலிலிருந்து ஆரம்பித்துத்‌ தொழவில்லை. (பார்க்க: அபூதாவூத்‌ 650)

இது அல்லாஹ்‌ வழங்கிய சலுகையாகும் தனது அடியார்களுக்கு அவன்‌ காட்டிய கருணையுமாகும்‌. எனினும்‌ ஒருவன்‌ உளுவின்றி இருப்பதை மறந்த நிலையில்‌ தொழுது விட்டால்‌ அறிஞர்களின்‌ ஏகமனதான முடிவின்‌படி (இஜ்மா) அவன்‌ அதைத்‌ திருப்பித்‌ தொழ வேண்டும்‌.
ஏனெனில்‌

“உளுவின்றி தொழுகையும்‌, மோசடி செய்த பொருட்‌களிலிருந்து (கொடுக்கப்படும்‌) தர்மமும்‌ ஏற்றுக்‌ கொள்‌ளப்பட மாட்டாது” என்று நபி()அவர்கள்‌ கூறினார்கள்‌.
(முஸ்லிம்‌ 224)

“உங்களில்‌ ஒருவருக்கு உளு நீங்கிவிட்டால்‌ மீண்டும்‌ உளுச்‌ செய்யாது தொழும்‌ தொழுகை ஏற்றுக்கொள்ளப்‌படுவதில்லை” என்றும்‌ நபி() அவர்கள்‌ கூறியுள்‌ளார்கள்‌. (புகாரி 135, முஸ்லிம்‌ 225)

 

இமாம் இப்னு பாஸ் – தொழுகை பற்றிய முக்கியமானகேள்வி பதில்கள்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply