கேள்வி 04:
அதிகமான வருடங்கள் (எனது பொருட்களுக்கான) ஸகாத்தை நான் வழங்கவில்லை. எத்தனை வருடங்கள் (வழங்கப்படவில்லை) என்பதையும் நான் அறிய மாட்டேன். என்னிடம் அதிகமான பணமும், சொத்துக்களும் உள்ளன. கடந்து சென்ற (வருடங்களுக்கான) ஸகாத்தை நான் எவ்வாறு கொடுக்க வேண்டும்? நான் எவ்வாறு தவ்பா செய்வது?
பதில்:-
தவ்பா செய்வதைப் பொருத்தவரையில், (முதலில்) முன் சென்ற வருடங்கள் விடயத்தில் வருந்த வேண்டும். அதை மீண்டும் செய்யக்கூடாது என்று உறுதி கொள்ள வேண்டும். அதை (முழுமையாக) கைவிட வேண்டும். கடந்து சென்ற வருடங்களின் (ஸகாத்தை) விரைவாக வழங்க வேண்டும்.
கடந்த காலத்தை ஆராய்ந்து கடந்து சென்ற (காலங்களுக்கு) ஸகாத் வழங்குங்கள். (விடுபட்ட காலங்கள்) ஐந்து வருடங்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால், ஐந்து (வருடங்களுக்கு) ஸகாத் வழங்குங்கள். ஆறு (வருடங்கள்) என்று நினைத்துக் கொண்டால், ஆறு (வருடங்களுக்கு) ஸகாத் வழங்குங்கள்.
பார்க்க:-
அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
“فتاوى نور على الدرب” என்ற பத்வா தொகுப்பு
(பாகம் – 15 / பக்கம் 17 )
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:


