ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள்

கேள்வி:-
1.ஸகாத் என்றால் என்ன?

பதில்:-
அரபு மொழியில் ஸகாத் என்றால் “வளர்ச்சியடைதல்” ,”அதிகரித்தல்” என்ற கருத்தாகும்.

மார்க்க ரீதியாக “ஸகாத்” என்றால் “குறிப்பிடப்பட்ட சொத்தில் வரையறுக்கப்பட்ட அளவை குறிப்பிடப்பட்ட கூட்டத்தினருக்கு வழங்குவதற்கு கூறப்படுகிறது”.

கேள்வி:-
2.இஸ்லாத்தில் ஸகாத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டமும்,
அந்தஸ்தும் யாது?

பதில்:-

  • ஸகாத் என்பது கடமையான ஒன்றாகும்.
  •  இதனுடைய அந்தஸ்தைப் பொறுத்தவரையில், இஸ்லாத்தின் தூண்களில் மூன்றாவதாகும்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழும் ஒருவர் “இது கடமை” என்பதை மறுத்தால், அவர் காபீராகி விடுவார். ஏனெனில், அவர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், முஸ்லிம்களால் ஏகோபிக்கப்பட்ட ஒரு விடயத்தையும் பொய்ப்பித்து விட்டார்.
மேலும், யார் “இது கடமை” என்பதை ஏற்றுக் கொண்டு, இதனைக் கொடுப்பதில் அசட்டையாக இருந்தால் உலமாக்களின் மிக சரியான கருத்தின் அடிப்படையில் அவன் (பாஸிக்) மனிதர்களில் கெட்டவனாக கருதப்படுவான். (ஆனாலும்) அவர் காபிராகி விட மாட்டார்.

⛳ பார்க்க:-

“الشرح الممتع للشيخ ابن العثيمين” (1/455)

 

இவை அனைத்தும் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-அஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களின் மார்க்கத் தீர்வில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.

அல்லாஹ் இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பல பிரயோசனங்களை வழங்குவானாக.

தமிழில்:-
அபூ அப்திர்ரஹ்மான் (அப்பாஸி,மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply