ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

கேள்வி 2️⃣8️⃣ : ரமழான் மாதத்தின்போது, மாதவிடாய்/ பிரசவத்துடக்கு ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை தொட்டு ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா.?

பதில் : அவ்வாறு ஒதுவதற்கு எதிரான ஆதாரங்கள் எதையும் நான் அறியவில்லை.

لا يمس القرآن إلا طاهر

“… தூய்மையானவர்களை தவிர வேறெவரும் குர்ஆனை தொடமாட்டார்கள்”. -என்ற ஹதீஸானது ‘முர்ஸல்’ வகையை சேர்ந்ததாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இன்னபிற அறிவிப்புகளை கொண்டு இந்த ஹதீஸை ஏற்பதாக இருந்தாலும், இதன் விளக்கமானது இமாம் ஷவ்கானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ‘நைலுல் அவ்தார்’ எனும் நூலில் கூறியதுதான்.

இமாம் அவர்கள் கூறுவதாவது :

“தூய்மையானவர்களை (முஸ்லிமை) தவிர வேறெவரும் குர்ஆனை தொட அனுமதியில்லை. ஏனெனில் எதிரிகளின் தேசத்திற்கு ஒருவர் குர்ஆனுடன் பயணம் செய்வதை நபி صلى الله عليه و سلم அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

அல்லாஹு தஆலா குர்ஆனில் கூறும்,

لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
“பரிசுத்தமானவர்களை தவிர, (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்.”
(அல்குர்ஆன் 56:79) -எனும் வசனமானது ‘மலக்குமார்களை’ குறிப்பதாக இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ‘முவத்தா’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இமாம் அவர்கள் தனது கருத்துக்கு ஆதாரமாக கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை கூறுகிறார்கள் :

كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٌ
அவ்வாறன்று! நிச்சயமாக (குர் ஆனாகிய) இது உபதேசமாகும்.

فَمَن شَآءَ ذَكَرَهُۥ
எனவே, எவர் (இதனைக்கொண்டு நேரான வழியில் செல்ல) நாடுகின்றாரோ அவர் இதனை நினைவு கொள்வார்.

فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
(இவ்வேதமானது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் (இருக்கிறது).

مَّرۡفُوعَةٍ مُّطَهَّرَةِۭ
உயர்வாக்கப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட (ஏடுகளில் இருக்கிறது).

بِأَيۡدِي سَفَرَةٍ
(வானவர்களான) எழுதுவோரின் கரங்கள் கொண்டு (எழுதப்படுகின்றது)
(அல்குர்ஆன் 80: 11 -15)

மேலும் அல்லாஹு கூறுவதாவது :

وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ
இன்னும், (குர் ஆனாகிய) இ(வ்வேதத்)தைக் கொண்டு ஷைத்தான்கள் இறங்கவில்லை.

وَمَا يَنبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ
மேலும், (அது அவர்களுக்குத் தகுதியுமன்று.) அவர்கள் (அதற்கு) சக்தி பெறவுமாட்டார்கள்.

إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ
“நிச்சயமாக அவர்கள் செவியேற்பதிலிருந்தும் தடுக்கப்பட்டவர்களாவர்.
(அல்குர்ஆன் 26:210 -212)

 

📝மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply