புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

கேள்வி:

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

பதில்:

அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…

முஸ்லிமான எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காபிர்களுடைய மதத்துடன் தொடர்புபட்ட, அவர்களின் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள், விழாக்களில் பங்கேற்பது அவைகளை கொண்டாடுவது, அதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் ரஹ்மானுடைய அடியார்களின் பண்பை பற்றி கூறுகையில்….

அவர்கள் வீணான காரியங்களில் பங்கேற்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 25:72)

இவ்வசனத்தில் உள்ள ‘ஸூர்’ எனும் சொல்லுக்கு இப்னு அப்பாஸ் (رضي الله عنه ) அவர்கள் விளக்கம் கூறும் போது “நிச்சயமாக அது இணைவைப்பாளர்களுடைய கொண்டாட்டங்கள்” என்று கூறினார்கள்.

நபி (ﷺ) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அம்மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர் .இதனை செவியுற்ற நபி (ﷺ) அவர்கள் “இந்த இரு தினங்களும் என்ன” என்று வினவ அவர்கள் “நாங்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் அவ்விரு பண்டிகை தினங்களிலும் விளையாடுபவர்களாக இருந்தோம்” என்றனர்.அதற்கு நபி (ﷺ) அவர்கள் நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான் , அவை ஈகைத் திருநாள் , மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள்.
(அபூதாவுத்,அஹ்மத்,நஸாஈ)

இந்த ஹதீஸில் நபி (ﷺ) அவர்கள் பண்டிகை தினங்களில் விளையாடி வந்த மக்களை விளையாட விடவில்லை. மாறாக அதற்குப்பதிலாக அல்லாஹ் இரு தினங்களை மாற்றியுள்ளான் என்று கூறி தடுத்தார்கள்.

ஒரு முஸ்லிமுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரித்த, அனுமதி வழங்கிய கொண்டதைத் தவிர வேறு எந்தக் கொண்டாட்டமும் கொண்டாடமுடியாது

புத்தாண்டு கொண்டாட்டங்கள் காபிர்களுக்கு ஒப்பாகும் ஒரு செயலாகும்.முஸ்லிம்கள் காபிர்களுக்கு ஒப்பாகுவதை நபி (ﷺ) அவர்கள் தடுத்துள்ளார்கள்

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.”யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகிறாரோ அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே.

இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ‘புத்தாண்டு கொண்டாட்டம் பற்றிக் கேட்கப்பட்டபோது கூறினார்கள்

“நிச்சயமாக அது ஹராமாகும் இன்னும் அது அவரை இறைநிராகரிப்பின் பக்கம் கொண்டுசெல்லும். அது அவர்களில் இறைநிராகரிப்பை பொருந்திக் கொள்வதாக அமையும் .
(மின்பருஹ் ஸலப்)

ஷேஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “முஸ்லிம் அல்லாதவர்கள் விடயத்தில் எங்கள் கடமை என்ன” என்று கேட்கப்பட்டபோது அதில் அவர் சில வழிகாட்டல்களை கூறிவிட்டு “அவர்களில் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் பங்கேற்பது ஒரு முஸ்லிமுக்குக் கூடாது”என்று கூறினார்கள்.
(மஜ்மூஉல் பதாவா இப்னு பாஸ்)

இதனடிப்படையில் காபிர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள், பண்டிகைகள்,விழாக்கள் கொண்டாடுவது அவைகளில் பங்கேற்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டவைகளாகும்.

குறிப்பு:

புத்தாண்டு மட்டுமல்லாமல் இணைவைப்பாளர்களின் அனைத்து பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கும் இது பொருந்தும்…

அல்லாஹ் மிக அறிந்தவன்..

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d