கேள்வி:நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?
விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவரின் மீதான சட்டம் என்ன?
பதில்:
அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது நல்லதல்ல ஏனெனில் அதன் காரணமாக விபத்துகளும், ஆபத்துகளும் ஏற்படக்கூடும். எனவே தான் அறிஞர்கள் இதை பற்றி கடுமையாக பேசுகிறார்கள். வேக கட்டுப்பாட்டை மீறி (வாகனத்தை) ஓட்டுவது என்பது ஓட்டுபவரின் கவனக்குறைவாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் ஏற்பட கூடிய உயிர் இழப்பிற்கும்,உறுப்பு அல்லது உடைமைகள் இழப்பிற்கும் அவரே பொறுப்பாவார். இதன் விளைவாக ஏற்படக்கூடிய தற்செயலான மரணங்களுக்கு, கட்டாயமாக உயிரீட்டு தொகை(தியா) செலுத்த வேண்டும் மற்றும் ஈடாக (கஃபரா) வழங்க வேண்டும்.
இமாம் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஃதைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கபட்டது: ஒருவர் கார் வேகமாக சென்றதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இறந்துவிட்டார்.இதுவும் தற்கொலை என்று சொல்ல முடியுமா?
இமாம் அவர்கள் கூறுவதாவது :
இல்லை இது தற்கொலை அல்ல. மாறாக அவர் தவறுதலாக தன்னை கொலை செய்துகொண்டார். விபத்து ஏற்படுவதற்கு வேகம் காரணமாகும் என்றால், அவர் தவறுதலாக தன்னை கொலை செய்துகொண்டார். ஏனெனில் “நீங்கள் மரணம் அடைவதற்காக (வாகனத்தை) வேகமாக ஓட்டினீர்களா? என்று அவரிடத்தில் கேட்கபட்டால், அவர் “இல்லை” என்று கூறுவார். அதனால் இது தற்கொலை அல்ல. அவர் தவறுதலாக தன்னை கொலை செய்துவிட்டார் என்று கூறலாம்.
லிக்கா அல் பாபில் மஃவ்தூஹ்-73/19
இரண்டாவது-
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது நற்செயல் ஆகும், அதற்கு நற்கூலி கொடுக்கப்படும். ஆனால் (வாகனத்தை) வேகமாக ஓட்டுவதனாலோ அல்லது சிகப்பு விளக்குகள் தாண்டி செல்வதினாலோ தனக்கோ அல்லது காயமடைந்தவருக்கோ எவ்வித தீங்கும் செய்து கொள்ளகூடாது
அவ்வாறு செய்வதினால், எதாவது ஏற்படுவதன் காரணமாக பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்படலாம்
ஒருவர் வேகத்தின் காரணமாக மரணமடைந்தால்,அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், அவரது நல்ல எண்ணத்திற்கு கூலி வழங்குவதற்கும் நாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். அது தற்கொலையாக கருதப்படாது. ஏனென்றால் அவர் தன்னைக் கொல்ல நினைக்கவில்லை. மாறாக காயம்பட்டவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதே அவரது நல்ல எண்ணமாக இருந்தது.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: