நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 2️⃣ :

நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா?

மேலும் நிய்யத்தை சத்தமாக கூற அனுமதியுள்ளதா?அதேபோல, நோன்பை முறிக்கும் போது கூறவேண்டிய துஆக்கள் ஏதேனும் உள்ளதா? ஆம் எனில் அந்த துஆவை சத்தமாக ஓதலாமா?

 

பதில் :

 

நோன்பின் நிய்யத்தை வைப்பதற்கென (ஸுன்னாவில்) குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவுமில்லை. ஹஜ் விடயத்தில் கூட ஒரு நபர் எந்த விதமான வணக்க வழிபாட்டுக்கான நிய்யத்தையும் சத்தமாக கூறுவதில்லை என்பதே சரியானது.

 

ஹஜ் விடயத்தில் நிய்யத்தை சத்தமாக கூறலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளோர் ஒரேயொரு நபித்தோழரின் கூற்றைத் தவிர வேறெந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது.

 

நபித்தோழர் ஒருவர் கூறுவதாவது :

 

“அல்லாஹ்வே… நான் ஷுப்ருமா சார்பாக உன் அழைப்பை ஏற்கிறேன்.”

 

இதன் அர்த்தம் என்னவெனில், ஷுப்ருமா என்பவருக்காக இந்நபர் ஹஜ் செய்கிறார் என்பதாகும்; மேலும் ஷுப்ருமா சார்பாக இவர் நிய்யத் வைக்கிறார்.

 

மேற்கண்ட இவ்விடயத்தை பொறுத்தமட்டில், நபி ﷺ அவர்கள் அந்த நபருக்கு என்ன கூறினார்களோ, அதுவே (கூற்றாக) கூறப்பட்டுள்ளது.

 

நோன்பை முறிக்கும் போது கூறப்படும் துஆவை பொறுத்தளவில், அஹ்லுல் இல்ம் எனும் கல்வியாளர்களில் சிலர் கீழ்க்கண்ட துஆவை ஆதாரமாக கருதுகிறார்கள்.

 

” ذَهَبَ الظَّمأ وابتلت العُرُوقُ وثَبَتَ الْأَجْرُ إِن شَاءَ اللَّهُ”

 

“தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால், கூலி நிச்சயம்.” (நூல் : அபூதாவூத் 2357)

 

இருப்பினும், குறிப்பான துஆ என்று எதுவுமில்லை. உண்மையில், ஒரு ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :

 

فطره إن للصائم دَعْوَة مُسْتَجَابَة عَنْدَ

 

“நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்கும் துஆவிற்கு பதிலளிக்கப்படுகிறது”. (நூல் : ஸுனன் இப்னு மாஜா)

எனவே, நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும், இன்னபிற தேவைகளையும் துஆ செய்ய வேண்டும்.

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

முதலாம் பாகத்தை வாசிக்க
மூன்றாம் பாகத்தை வாசிக்க

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

2 thoughts on “நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? ”

Leave a Reply