கேள்வி: அல்லாஹ் உங்களுக்கு நன்மையும், பரகத்தும் செய்யட்டும்.
சூடாணிலிருந்து இந்த நபர் கேள்வி கேட்கிரார்: சிலர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள், இது உண்மையா?
பதில்: இந்த கருத்து தவரானது, முஹம்மது صلى الله عليه وسلم ஆதாமின் பிள்ளைகளில் ஒருவர், அவாின் மூதாதையர்களின் வமிசம் அறியப்பட்டதே, மேலும் அல்லாஹ் கட்டளை இட்டது போல அவரே தான் ஒரு மனிதர் தான் என்பதை தெளிவாக கூறியுள்ளார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ
ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நபி صلى الله عليه وسلم தன்னை பற்றியே “நானும் ஒரு மனிதன் தான், நீங்கள் மரப்பதை போன்று நானும் மரக்கிறேன்” என்று கூறியுள்ளார்கள்.
நபி صلى الله علي وسلم, ஆதமுடைய ஏனைய சந்ததிகளை போன்று களிமண்ணால் படைக்கப்பட்டார்கள்,
ஒளியிலிருந்து மலக்கு மார்கள் (வானவர்கள்) தான் படைக்கப்பட்டனர்.
படைப்பினங்கள் மூவகைப்படும், நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவை, இது இப்ளீசும் அவனின் சந்ததிகளும், ஒளியிலிருந்து படைக்கப்பட்டவர்கள், அவர்கள் மலக்கு மார்கள், களிமண்ணால் படைக்கப்பட்டவர்கள் இவர்கள் மனிதர்கள்.
நபி صلى الله عليه و سلم அவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டார்கள் எனும் இந்த கூற்று எந்த ஆதாரமும் அற்ற ஒரு பொய்
ஷேக் உஸைமீன், ஃபதாவா நூருன் அலா அத்தர்ப்)
தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்.
السؤال
أحسن الله إليكم يا شيخ وبارك فيكم. هذا سائل للبرنامج يقول في سؤاله، السائل سوداني يقول فضيلة الشيخ، يقولون بأن الرسول مخلوق من نور، هل هذا كلام صحيح؟
الجواب
قال الشيخ رحمه الله :هذا الكلام باطل؛ فإن محمدا صلى الله عليه وسلم من بني آدم، وسلسلة آبائه وأجداده معلومة، وهو نفسه عليه الصلاة والسلام قد صرح بما أمر الله به، فقد قال الله تعالى له ﴿قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد﴾. وقال صلى الله عليه وسلم هو عن نفسه إنما أنا بشر مثلكم أنسى كما تنسون. فقد خلق عليه الصلاة والسلام من طين كما هو شأن بني آدم كلهم، والذين خلقوا من نور هم الملائكة، فإن المخلوقات ثلاثة أقسام؛ قسم خلقوا من نار وهم إبليس وذريته، وقسم خلقوا من نور وهم الملائكة، وقسم خلقوا من طين وهم آدم وبنوه، وليس هناك قسم رابع، فهذا الحديث أو الأثر أو القولة المشهورة أن نبينا صلى الله عليه وعلى آله وسلم خلق من نور كذب لا أصل له. نعم.
المصدر سلسلة فتاوى نور على الدرب الشريط رقم [331]
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: