தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா?

கேள்வி :
தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளுமாறு நாம் ஏவப்படவில்லை என்று ஷைகுல் இஸ்லாம் அவர்கள் கூறியுள்ளார்களே?

பதில் :
முடிந்தவரை எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அது தான் சிறந்தது.

ஆனால் பிறரிடம் வேண்டிக் கொள்வதில் தடையேதும் இல்லை. வாகனத்தில் இருப்பவர் தனது கையிலிருந்து விழுந்த பொருளை வாகனத்திலிருந்து இறங்கி அவரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை (மாறாக)இன்னொருவரிடம் உதவி பெறலாம்.

பார்வை இழந்த ஒருவர் தனக்கு பிரார்த்தனை செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுக் கொண்ட போது அவர் விரும்பினால் தான் துஆ கேட்பதாகவும் அல்லது பொறுமை காக்குமாறும் வழி காட்டியிருக்கிறார்கள்.

பதிலளித்தவர்:இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்)

மூலம் : أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

*السؤال :* شيخنا، هنا شيخ الإسلام رحمه الله يقول : وأما سؤال المخلوق المخلوق أن يقضي حاجة نفسه أو يدعو له فلم يؤمر به ويستدل على هذا الكلام…

*الشيخ الألباني رحمه الله (الشيخ مقاطعا) :* نهي عنه؟ لم يؤمر به، قبل ما تقرأ لي، نهي عنه؟ *السائل* : لم يذكر نهي، ولا نعلم نهيا.
*الشيخ الألباني رحمه الله* : طيب، ليس هذا كلاما صحيحا.؟ لا تسأل الناس شيئا، ولو ناولني السوط. وكان الواحد إذا سقط السوط من يده وهو على الناقة يبرك الناقة وينيخها حتى يأخذ السوط، ولا يقول لأحد : من فضلك! أعطني؟ *السائل* : هو ذكر الحديث واستدل بهذا، وقال إن الدعاء يعني سؤال.
*الشيخ الألباني رحمه الله :* فعلا سؤال، لكن ليس حراما، هذا الأفضل. *السائل :* يعني الأفضل ما يسأل؟
*الشيخ الألباني رحمه الله* : ما أمكنه، ما أمكنه، آآآآآآه، فنسأل الله عز وجل أن يخلصنا من هذه الفتن ما ظهر منها وما بطن، يعني حياة صعبة جدا يعيشها الإنسان اليوم.
*السائل :* فيه شيخنا حديث الأعمى الذي جاء إلى النبي صلى الله عليه وسلم وطلب منه أن يدعو له فخيره النبي صلى الله عليه وسلم بين أن يدعو له أو أن يصبر، هذا فيه إقرار من النبي صلى الله عليه وسلم على الدعاء.
*الشيخ الألباني رحمه الله :* طبعا، لكنه قال إن صبرت فهو خير لك.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply