குர்பானி கொடுக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துவிட்டால்

கேள்வி:

முஸ்லிம் விலங்கை அறுத்துப் பலியிடும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால் அது ஹராம் ஆகிவிடுமா? அதை உன்ன அனுமதி இல்லையா?

பதில்: முஸ்லிம் விலங்கை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அல்லது உதூ செய்யும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அவருடைய பலியிடுதல் உதூ ஆகியவை சரியானவையே. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஹஜ்ஜின் போது ஹதி செய்யும்போதும், ஹஜ்ஜில் ஏற்படும் தவறுகளுக்கு ஃபித்யா கொடுக்கும்போதும் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டாலும் சரியே, இவற்றில் யாதொரு தவறும் இல்லை. அது ஹலாலாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!”

2:286

இந்த துஆவிற்கு பதிலாக அல்லாஹ் ‘நான் செய்துவிட்டான்’ என்று கூறிவிட்டான். ஆகையால் மறந்திவிட்டவர் மன்னிக்கப்படுகிறார்.  உத்ஹிய்யாவாக இருந்தாலும், ஹதியாவாக இருந்தாலும், அகீகாவாக இருந்தாலும் ஹலால் ஆகும்.

இது தொடர்பான மார்க்க சட்டத்தை அறியாத ஜாஹிலுக்கும்(அறியாதவருக்கும்) இதே சட்டம் தான், அவர் அறியாமையின் காரணமாக அல்லாஹ்வின் பெயரை கூறாமல் அறுத்துவிட்டால் அதுவும் ஹலால் தான்.

https://binbaz.org.sa/fatwas/12153/%D8%AD%D9%83%D9%85-%D9%86%D8%B3%D9%8A%D8%A7%D9%86-%D8%A7%D9%84%D8%AA%D8%B3%D9%85%D9%8A%D8%A9-%D8%B9%D9%86%D8%AF-%D8%A7%D9%84%D8%B0%D8%A8%D8%AD

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply