ஏகத்துவத்தை பற்றி அறிவதற்கு வாய்ப்பு இல்லாமல் மரணிக்கும் முஸ்லீம்களின் மறுமை நிலை என்ன?

கேள்வி:

ஷைக் அவர்களே! சிலர் ஏகத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்றனர். ஸூபித்துவத்தை இபாதத் என்று நினைத்து அவர்களும் ஸூபிகளாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் எழுத வாசிக்கத் தெரியாததால் ஏற்பட்ட அறியாமையாக இருக்கலாம். அல்லது மார்க்க அறிவற்ற ஸூபி ஆலிம்கள் போன்றவர்கள் அழைப்பாளர்களாக இருந்திருக்கலாம். இவ்வாறான நிலையில் மரணித்த முஸ்லிம்களின் நிலை என்ன?

அழைப்புப்பணி பற்றியும், உண்மையான அழைப்புப்பணி சென்றடையாமல் மரணிக்கும் மனிதரைப் பற்றி பேசும் போது, அவர்களுக்கு பிரத்தியேகமான நடைமுறை இருக்கிறது என்று கூறினீர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் :
நீங்கள் அறிந்திருப்பதே இதற்கு பதிலாகும். நாம் அறிந்த வகையில் இஸ்லாமிய தஃவா சென்றடையாதவர்களைப் போன்றே இவ்வகையான முஸ்லிம்களும் இறைவனிடம் நடத்தப்படுவார்கள்.

ஏகத்துவத்தைப் பற்றிய அறிவில்லாத மக்களிடம் அவர்களது சமூகத்தின் நிலை மிகைத்திருக்கிறது. அல்லது அவர்கள் தமது அறியாத சமூகத்தைப் பிரதிபலிக்கிறார்கள்.
தாமும் நேர்வழி பெற்று பிறரையும் நேர்வழியில் நடத்த வேண்டிய ஷைகுமார்கள் அல்லது ஆலிம்களே வழி தவறியவர்களாக இருக்கும் போது மற்றவர்களின் நிலை எவ்வாறிருக்கும்?

ஒரு கவிதை இவ்வாறு கூறுகிறது. :

வீட்டுரிமையாளர் தாளம் போட்டால்
வீட்டிலுள்ளவர்கள் நடனமாடாமல் இருப்பார்களா என்ன?

பதிலளித்தவர்:இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்)

நூல்: أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

அரபு மூலம்:

السائل : الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه، يا شيخ ما حكم من مات من المسلمين وهو يجهل التوحيد حيث لم تصله الدعوة إما لجهل وهو لا يقرأ أو يكتب، وإما لكون بعض العلماء الجاهلين تولوا نشر الدعوة بين الناس، وأضرب مثلا على ذلك : الصوفية، بعض الناس يتصوفون ويعلمون أن الصوفية عبادة.
إن فضيلتكم تكلمت عن قضية الدعوة ونشر الإسلام وعن الإنسان الذي مات ولم تصله الدعوة الحقة في نشر التوحيد فهم إن شاء الله لهم معاملة خاصة، فما رأي فضيلتكم؟

الشيخ الألباني رحمه الله : عرفت فالزم. هذا هو الجواب. أي هذا النوع من المسلمين يعاملون – فيما نعلم – من دين الإسلام عند رب العالمين معاملة من لم تبلغه الدعوة.
السائل : ما الجواب في هذا؟
الشيخ الألباني رحمه الله : الجواب حسب ما جاء في السؤال. أنت وصفت الوضع الذي عاش فيه هذا الإنسان، يعني المجتمع الذي عاش فيه ذلك الإنسان وهو لم يفهم التوحيد يغلب عليه،. أو هو صورة ممثلة لهذا المجتمع الذي لم يفهم التوحيد.
وإذا كان المشايخ أو العلماء في مثل ذلك المجتمع والمفروض فيهم أنهم يكونون هداة مهتدين هم أنفسهم ضالين منحرفين فما يكون شأن الآخرين؟ يعني كما قيل :
إذا كان رب البيت بالدف ضاربا * فما على الساكنين فيه إلا الرقص

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply