உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா?

உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா?

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்காய் ஸலாத்தும் ஸலாமும் அவனின் தூதரின் மீது உண்டாகட்டும்.

இந்த விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் அதை அனுமதித்தனர், இதுவே இமாம் அஹ்மதின் மத்ஹபின் கூற்று, சிலர் அது தவறு என்று கூறினர், ஏனென்றால் இவ்விரு காரியங்களின் நோக்கம் வெவ்வாறாக இருப்பதனால். உத்ஹிய்யா கொடுப்பதன் நோக்கம் தனக்காக அறுத்து தியாகம் செய்வது, அகீகா கொடுப்பதன் நோக்கம் குழந்தைக்காக அறுத்து தியாகம் செய்வது, ஆகையால் இவ்விரண்டும் ஒரே செயலில் ஒன்று சேராது என்று கூறினார். எவர் ஒருவரிடம் பொருளாதார வசதி உள்ளதோ அவருக்கு இந்த இரண்டாம் கூற்றை பின்பற்றுவதுதான் சிறந்தது என்பதில் சன்தேகம் இல்லை. எவருக்கு பொருளாதார வசதி இல்லையோ அவருக்கு இமாம் அஹ்மதின் மத்ஹபை பின்பற்றுவது சிறந்தது.

உயர்ந்தோன் அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

https://www.islamweb.net/ar/fatwa/885/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%B9-%D8%A8%D9%8A%D9%86-%D9%86%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D8%A3%D8%B6%D8%AD%D9%8A%D8%A9-%D9%88%D8%A7%D9%84%D8%B9%D9%82%D9%8A%D9%82%D8%A9

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply