அஸ்ல்  செய்வது ஆகுமானது

அஸ்ல் செய்வது – அதாவது பென்ணுறுப்பின் வெளியில் விந்தை வெளிப்படுத்துவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது. இது குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளது.

      1. “குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராக இருந்தோம்”  என்று ஜாபிர் அறிவித்தார். [புஹாரி, முஸ்லிம்,   ]
        மற்றோர் அறிவிப்பில்  “நாங்கள் நபியின்  காலத்தில் அஸ்ல் செய்வோராக இருந்தோம், அது நபி அவர்களுக்கு தெரிய வந்தது ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை” என்று அறிவிக்கிறார் [முஸ்லிம் ]
      2. அபூ சயீத் அல் குத்ரி  அறிவிக்கிறார், “ஒரு மனிதர் நபியிடம் வந்து ‘என்னிடம் ஒரு பெண் அடிமை உள்ளார். அவளிடம் நான் அஸ்ல் செய்கிறேன், ஆண்களுக்கு தேவைப்படுவது எனக்கும் தேவையாக உள்ளது . ஆனால் யூதர்கள் அஸ்ல் செய்வது சிறிய சிசுக்கொலை என்கிறார்கள்?’ என்றார். அதற்க்கு நபி ‘யூதர்கள் பொய் சொல்கிறார்கள், யூதர்கள் பொய் சொல்கிறார்கள். அல்லாஹ் ஒரு உயிரை படைக்க நாடினால், நீ அதை மாற்ற முடியாது.’ என்றார்கள். [நஸாயீ, அபூ தாவூத், தஹாவீ, அஹ்மது ஆகியோர் ஸஹீஹான ஸனதுடன் அறிவிக்கிறார்கள்]
      3. ஜாபிர் அறிவிக்கிறார்: ஒரு மனிதர் நபியிடம்ﷺ  வந்து  “என்னிடம் ஒரு அடிமைப்பெண் இருக்கிறார் அவள் எங்களுக்கு உதவுகிறார், எங்கள் பேரீத்த தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாள். சில நேரம் நான் அவளிடம் செல்கிறேன், அவள் கர்பமாவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்க்கு நபி “நீங்கள்  நாடினால் அஸ்ல் செய்யுங்கள். ஆனால் அல்லாஹ் அவளுக்கு விதித்தது அவளுக்கு கிடைத்தே தீரும்”  என்றார்கள். சில காலம்  கழித்து அவர் நபியிடம் வந்து “அந்த பெண்  கர்ப்பமாகி விட்டார்” என்றார். நபி“அல்லாஹ் அவளுக்கு  விதித்தது நடக்கும் என்று நான் கூறினேன் அல்லவா” என்றார்கள். [முஸ்லிம், அபூ தாவூத்,அஹ்மத்,  பைஹகீ  ]

 

இமாம்  அல்பானீ – திருமண மற்றும் இல்லற சட்டங்கள்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply