அலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்

கேள்வி:

கண்ணியத்திற்குரிய ஷேக்,

சில சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் தனி எழுத்துக்களின் போருள் குறித்து தஃப்ஸீர் அறிஞர்களிடம் பல கருத்துகள் நிலவுகின்றன.

என் கேள்வி, இந்த தனி எழுத்துகளுக்கு பொருள் உள்ளதா அல்லது இல்லையா? பொருள் இருக்குமானால், அது அல்லாஹ் மட்டுமே அறிவானா, அல்ல இல்மில் உறுதி பெற்ற அறிஞர்களும் அறிவார்களா? பொருள் ஏதும் இல்லை என்றால் எங்கள் அய்யத்தை தீருங்கள்: பேரறிவாளனும்; விவேகமிக்கோனுமாகிய; உயர்ந்தோன் அல்லாஹ் எப்படி பொருள் இல்லாத பேச்சை பேசுவான்?

உங்கள் பதில் மூலம் எங்களை பயன் பெறுமாறு செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை தரட்டும்.

பதில்:

சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் இந்த தனி எழுத்துகளுக்கு பொருள் ஏதும் இல்லை என்பதே சரியான கருத்து. அல்லாஹ் கூறுவதை கேளுங்கள்:

نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ

193. (இறை கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர் என்னும் ஜிப்ரயீல்) இதை உமது உள்ளத்தில் இறக்கிவைத்தார்.

عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ

194. (மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக,

بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِينٍ

195. தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டுள்ளது).

[அஷ்ஷுஅரா:193-195]

அரபு மொழியில் இந்த தனி எழுத்துகளுக்கு யாதொரு பொருளும் இல்லை. இந்த எழுத்துகளினால் மக்களின் சொற்கள் உருவாகிறது.

ஆனால் இந்த தனி எழுத்துகளுக்கு பொருள் ஏதும் இல்லை என்று கூறுவதின் அர்த்தம், அதில் பயனும் படிப்பினையும் ஏதும் இல்லை என்றல்ல. இந்த ஆயத்துகளில் மிகப்பெரும் படிப்பினை உள்ளது.

இதில் உள்ள படிப்பினை: தெளிவான, திறமையான, சொல்வள்ளமை கொண்ட அரபுகளே, உங்களால் கூட எப்பொழுதும் இதற்கு இணையாக ஒரு ஆயத்தையும் கொண்டு வரமுடியாது எனும் இந்த குர்ஆன், நீங்கள் பயன்படுத்தும் அதே எழுத்துகளால் ஆனது, புதிதாக எந்த எழுத்தையும் எடுத்து வரவில்லை.

இதனால் தான், இவ்வாறான தனி எழுத்துகளை கொண்டு துவங்கும் சூறாக்களை நீங்கள் கண்டீர்களானால், அதன் பின்னர் குர்ஆனை பற்றி பேசும் ஆயத்துகளை தான் காண்பீர்கள்.

இந்த விளக்கத்தை தான் ஷேக் அல் இஸ்லாம் இப்ன் தைமிய்யா رحمه الله தேர்வு செய்கிறார். அவர் கூறுகிறார் “இந்த எழுத்துகள் இடம் பெருவதல் ஒரு காரனமும் போருளும் உள்ளது, ஆனால் அந்த எழுத்துகளுக்கென்று தனியாக எந்த பொருளும் இல்லை”

இந்த எழுத்டுகளுக்கென்று தனி ஒரு அர்த்தம் இல்லை என்பதை பின் வரும் குர்ஆன் ஆயத்திலிருந்து அறிந்து கொண்டேன்.

بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِينٍ

195. தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டுள்ளது).

அதன் அடிப்படையில், எவரேனும் ஒருவர் இந்த எழுத்துகள் ஏதேனும் ஒரு விஷயத்தை குறிக்கிறது என்று கூறினால், நாம் அவ்வாற கூறுவதில்லை. அவ்வாறு நாம் கூறுவோமானால் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அறியாத சொற்கள் குர்ஆனில் உள்ளது என்று அர்த்தமாகும். ஆனால் அல்லாஹ் இந்த குர்ஆனை தன் அடியார்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளான்.

فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

18. ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக.

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

19. பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.

[அல்கியாமா:18-19]

குர்ஆனில் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அர்த்தத்தை உணராத எந்த ஒரு சொல்லோ எழுத்தோ இல்லவே இல்லை. ஆனால் இல்மில் பல படித்தரங்கள் உண்டு. இல்மில் உரிதி கொண்ட அறிஞர்கள் (ராசிகூன ஃபில் இல்ம்) சில விஷயங்களை அறிவார்கள், அதன் அடுத்த படியில் உள்ள அறிஞர்கள் சில விஷயங்களை அறிவார்கள், சாதாரண பொதுமக்களும் சிலவற்றை அறிவார்கள். குர்ஆனில் யாரும் பொருள் உணராத ஒன்றை பார்ப்பது சாத்தியமற்றது.

-ஷேக் உஸைமீன். ஸில்ஸிலாத் அல் பாப் அல் மஃப்தூஹா
السؤال:

فضيلة الشيخ, تعددت أقوال المفسرين في الحروف المقطعة في أوائل السور، والسؤال: هل هذه الحروف لها معنى أو ليس لها معنى؟ وإذا كان لها معنى فهل استأثر الله بعلمه أو يعرفه الراسخون في العلم؟ وإذا كان ليس لها معنى فقد يرد علينا إشكال: أنه كيف يتكلم الله عز وجل وهو الحكيم العليم بكلام ليس له معنى. أفيدونا جزاكم الله خيراً؟

الجواب:

الصحيح أن هذه الحروف الهجائية التي في أوائل السور ليس لها معنى; لقول الله تبارك تعالى: ﴿ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ * عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ * بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ [الشعراء:193-195] واللسان العربي لا يجعل لهذه الحروف معنىً إطلاقاً، بل هذه الحروف حروف يتكون منها كلام الناس، وليس معنى قولنا: إنه ليس لها معنى أي: ليس لها فائدة، هي لها فائدة عظيمة، فائدتها: أن هذا القرآن الكريم الذي أعجزكم معشر العرب مع قدرتكم وبلاغتكم وفصاحتكم لم يكن أتى بجديد من الحروف التي لا تعرفونها، بل هو من الحروف التي أنتم تعرفونها وترتبون كلامكم منها، ويدل لهذا: أنك لا تكاد ترى سورة مبدوءة بالحروف الهجائية إلا وبعدها ذكر القرآن، وهذا ما ذهب إليه شيخ الإسلام ابن تيمية رحمه الله قال: إن لها مغزى لكنه ليس لها معنى في حد ذاته. وعرفت الدليل على أنه ليس معنى في حد ذاتها من القرآن نفسه: ﴿بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ﴾ [الشعراء:195] وبناءً على ذلك: لو ادعى مدعٍ أنها حروف ترمز إلى شيء من الأشياء فإننا لا نقول قوله; لأننا لو قلنا: إنها حروف ترمز إلى شيء من الأشياء لا يعلمها إلا الله. لكان في القرآن ما لا يعلمه إلا الله، وقد تكفل الله عز وجل أن يبين القرآن لعباده، فقال: ﴿فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ۞ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ﴾ [القيامة:18-19] وليس في القرآن كلمة ولا حرف لا يعلم معناه إلا الله أبداً. لا بد أن يعلم، لكن العلوم تختلف، فالراسخون في العلم لهم علم ومن دونهم لهم علم، والعامي له علم. أما أن يوجد شيء في القرآن لا يعلمه أحد من الناس فهذا شيء مستحيل. بل لا بد أن يكون معلوماً.

المصدر: سلسلة لقاءات الباب المفتوح > لقاء الباب المفتوح [96
இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: