ஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன? உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன?

கேள்வி : ஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன? உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன?

பதில்:

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…

சுருக்கமான பதில்:

ஷரீஆ என்றால் மார்க்கம் முழுவதையும் குறிக்கும் ஒரு சொல்.
ஃபிக்ஹ் என்ற வார்த்தை விரிவான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட (அமல்) செயல் சார்ந்த ஷரீயத் கிளை, உட் பிரிவு சட்டங்களைக் கொண்ட ஒரு கல்விக்கு சொல்லப்படும்.
உசூலுல் ஃபிக்ஹ் என்பது ஷரீயத் சட்டங்களையும் ஃபிக்ஹ்கின் ஆதாரங்களின் முறைகளையும் சுருக்கமாக அறிந்து கொள்ளும் ஒரு கலைதான் உசூலுல் ஃபிக்ஹ் என்பதாகும்.

ஷரீயத் என்ற வார்த்தை அகராதியில் தண்ணீர் ஓடும் ஓடைக்கு சொல்லப்படும். மக்கள் ஓடையிலிருந்து குடிப்பார்கள், புகட்டுவார்கள். சில வேளை மக்கள் தாங்களின் கால்நடைகளுக்கும் புகட்டுவார்கள். அரபியர்கள் தொடர்ச்சியாக ஓடும் ஓடைக்கு மாத்திரம் ஷரீயத் என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
பார்க்க:கஸானுல் அரப் பாகம் 8 பக்கம் 175.

ஷரீயத் என்ற வார்த்தை வழக்கத்தில் மார்க்கம் மற்றும் அதன் முழுவதிற்கும் சொல்லப்படும். அது அல்லாஹ் தஆலா தன்னுடைய அடியார்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக தேர்வு செய்த மார்க்கமாகும். மேலும் அந்த ஷரீஅத்தில் ஏவல்களையும்,விலக்கள்களையும் ஹலால், ஹராத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறான்.
யார் அல்லாஹ்வின் ஷரீயத்தை பின்பற்றி அவன் ஹலால் ஆக்கியதை ஹலால் ஆக்கி அவன் ஹராமாக்கியதை ஹராமாக்குகிறாரோ அவர் வெற்றி பெற்றார். யார் ஷரீயத்தை பின்பற்றவில்லையோ அவர் அல்லாஹ்வின் தண்டனைக்கும் கோபத்திற்கும் ஆளாகுவார்.

(முஹம்மதே!) பின்னர் இம்மார்க்கத்தில் உம்மை ஒரு வழிமுறையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!
சூரா அல் ஜாஸிய்யா 18.

ஃபிக்ஹ் என்பது அகராதியில் விளங்குதல் என்ற பொருளாகும். இன்னார் மார்க்கத்தில் (ஃபிக்ஹ்) விளக்கம் அளிக்கப்பட்டவர் என்று அறிஞர்கள் சொல்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இறைவா இவருக்கு மார்கத்தில் (ஃபிக்ஹ்) விளக்கத்தை கொடுப்பாயாக என்று துஆ செய்தார்கள்.
நூல் : புகாரி 143. முஸ்லிம் 2477.

வழக்கத்தில் ஃபிக்ஹ் என்பது விரிவான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட (அமல்) செயல் சார்ந்த ஷரீயத் கிளை, உட் பிரிவு சட்டங்களைக் கொண்ட ஒரு கல்விக்கு சொல்லப்படும்.

இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஃபிக்ஹின் வரைவிலக்கணம் ஷரீயத் சட்டங்களை குர்ஆனிலிருந்தும் நபி (ஸல்) அவர்களின் சொல்லிலிருந்தும் அறிவதாகும்.
இதன் விளக்கம், குர்ஆலிருந்து சட்டங்களை அறிவதும் குர்ஆனில் (மன்சூக்) மாற்றப்பட்ட, நாஸிக் மாற்றிய வசனங்களையும் அறிவதும் ஆகும். இதே போன்று நபியவர்களின் பேச்சிலும் நாஸிக் மன்சூக்கை அறிவதும் ஆகும். மேலும் நபியவர்களின் பேச்சில் எது ஆதாரப்பூர்வமானது எது பலவீனமானது உலமாக்கள் எதில் ஒன்றுபட்டுள்ளார்கள் எதில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்கள் என்பதை அறிவதும் கருத்துவேறுபாடுகளை எப்படி குர்ஆன் சுன்னாவை வின் பக்கம் கொண்டு செல்வது என்பதை அறிவதுமாகும்.

நூல் : அல்இஹ்காம் ஃபீ உசூலில் அஹ்காம் பாகம் 5 பக்கம் 127.

இமாம் இப்னுஜிப்ரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ஃபிக்ஹ் என்பது குர்ஆன், சுன்னா ஆதாரங்களை விளங்குவதும் அதிலிருந்து சட்டம் எடுப்பதுமாகும்.
நூல் : ஷரஹ் அக்ஸருல் முக்தஸராத் பாகம் 1 பக்கம் 2

உசூல் ஃபிக்ஹ்:
அசல் அடிப்படை என்ற வார்த்தை அதன் (அசல்) பக்கம் மற்றவைகளை இணைப்பது. அதாவது தந்தை அவர்தான் அசல் அடிப்படை. அவரின் பக்கம் குழந்தையை இணைக்கப்படும். ஆறு அதுதான் அடிப்படை. அதன் பக்கம் ஓடைகள் இணைக்கப்படும். அசல் என்பதின் பண்மை உசூல் என்பதாகும்.
நூல் : மிஸ்பாஹீல் முனீர் பாகம் 1 பக்கம் 16.

உசூலுல் ஃபிக்ஹ் என்பது ஷரீயத் சட்டங்களையும் ஃபிக்ஹ்கின் ஆதாரங்களின் முறைகளையும் சுருக்கமாக அறிந்து கொள்ளும் ஒரு கலைதான் உசூலுல் ஃபிக்ஹ் என்பதாகும்.நூல் : ஷரஹ் முக்தஸர் அர் ரவ்ழா பாகம் 1 பக்கம் 106.

இமாம் இப்னு உஸைமீன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

உசூல் ஃபிக்ஹ் என்பது இரண்டு வகைகளில் விளக்கமளிக்கப்படும். ஒன்று அதன் தனித்தனி வார்த்தைகளை கவனித்து விளக்கமளிக்கப்படும்.
உசூல் என்பது அசல் என்பதின் பன்மையாகும். எந்த பொருளின் மீது மற்றவைகளை அமைக்கப்படுமோ அதுவாகும். உதாரணமாக பவுன்டேஷன் இதுதான் அடிப்படை. அதன் மீது சுவர் கட்டி எழுப்பப்படுகிறது. வேர் இதுதான் அடிப்படை,அதன் மீது மரம் அதன் கிளைகள், தண்டுகள் வளர்கிறது.

அல்லாஹ் தஆலா சொல்கிறான்:

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.
சூரா இப்ராஹீம் 24.

மஃரிபத் என்ற வார்த்தை (இல்ம்) உறுதியான அறிவு மற்றும் (லன்னு) யூகம் ஆகியவைகளை குறிக்கும். ஏனென்றால் பிக்ஹு சட்டங்கள் சில நேரங்களில் உறுதியான கல்வியின் மூலமாகவும் எடுக்கப்படும். சில நேரங்களில் அதிகமான சட்டங்களில் உள்ளதை போல யூகத்தின் அடிப்படையிலும் எடுக்கப்படும்.
(அஹ்காமுஷ் ஷாயிய்யா) ஷரீஅத் சட்டங்கள் என்பது குர்ஆன், சுன்னா சட்டங்களிலிருந்து எடுக்கப்படுவையாகும். இது வாஜிப் இது ஹராம் என்று நாம் சொல்வதைப் போல. இவை மூலம் சிந்தனை (அறிவு) ரீதியான சட்டங்கள் கட்டுப்படாது. உதாரணமாக கோடைகால இரவுகளில் மழை பொழியும் என்று அறிந்து சொல்வதைப் போல.
அமலிய்யா (செயல் சார்ந்தது) என்ற நம்முடைய வார்த்தையிலிருந்து நாம் சொல்ல வருவது தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை மட்டும் குறிக்கும். கொள்கை ரீதியான விஷயங்களை எடுத்துக் கொள்ளாது. உதாரணமாக வணக்கங்களில் இறைவனை ஏகத்துவப்படுத்துதல். அல்லாஹ்வின் பண்புகளை, பெயர்களை அறிதல். இவைகள் வழக்கத்தில் ஃபிக்ஹ் என்று சொல்லப்படாது.

அதில்லதுத் தஃப்ஸீலிய்யா என்ற நம்முடைய வார்த்தையின் மூலம் சொல்லவருவது ஃபிக்ஹ்வுடைய சட்டங்களைக் கொண்டு இணைந்த (ஃபிக்ஹீடைய) ஆதாரங்களாகும். இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில் உசூலுல் ஃபிக்ஹ் என்ற கலையை எடுத்துக் கொள்ளாது. ஏனென்றால் உசூலுல் ஃபிக்ஹ் கலையில் ஃபிக்ஹீடைய ஆதாரங்களை சுருக்கமாக ஆய்வு செய்யப்படும் என்று சொல்லப்படும்.

உசூலுல் ஃபிக்ஹ் என்ற வார்த்தை குறிப்பாக இந்த கலைக்கு மாத்திரம் சொல்லப்படும். இதில் ஃபிக்ஹீடைய ஆதாரங்களை சுருக்கமாக ஆய்வு செய்யப்படும். அந்த ஆதாரங்கள் மூலமாக சட்டங்களை எப்படி எடுப்பது மேலும் (முஜ்தஹித்) ஆய்வு செய்பவரின் நிலைமைகளையும் ஆய்வு செய்யப்படும்.

இஜ்மாலிய்யா என்ற வார்த்தை பொதுவான சட்டங்களை குறிக்கும் வார்த்தையாகும். உதாரணமாக (ஏவல்) கட்டளை வாக்கியம் (வாஜிப்) கட்டாயத்தை குறிக்கும். விலக்கல் வாக்கியம் ஹராம் ஐ குறிக்கும். இது போன்ற சட்டங்களுக்கு சொல்லப்படும். இதன் மூலம் ஃபிக்ஹில் ஆய்வு செய்யப்படும் விரிவான ஆதாரங்ளை கட்டுப்படுத்தாது. சில இடங்களில் உசூலில் ஃபிக்ஹில் உதாரணத்திற்காக விரிவான ஆதாரங்களை சொல்லப்படும்.

கய்ஃபிய்யதில் இஸ்திஃபாததி மின்ஹா என்ற வார்த்தை குர்ஆன், சுன்னாவில் உள்ள வார்த்தைகள் அந்த வார்த்தைகள் அறிவிக்கும் அறிவிப்புகள் அந்த வார்த்தைகள் பொதுவானதா? குறிப்பானதா? மன்சூக் மாற்றப்பட்டதா? அல்லது நாஸிக் மாற்றக்கூடியதா? இவைகளை அறிவதாகும். இவைகளை அறிவதின் மூலமாகத்தான் ஃபிக்ஹீடைய சட்டங்களை எடுக்கப்படும்.

ஹாலுல் முஸ்தஃபீத் முஜ்தஹித் ஆய்வாளரின் நிலையை அறிவதாகும். இவருக்கு முஸ்தஃபீத் என்ற வார்த்தையை பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இவர்தான் (இஜ்திஹாத்) ஆய்வு செய்வதற்கான தகுதியை பெற்றதினால் சட்டங்களை ஆய்வு செய்து எடுக்கிறார். மேலும் (இஜ்திஹாத்) ஆய்வு செய்வதற்கான நிபந்தனைகள் என்ன அவருடைய சட்டம் என்ன? இவைகளை இதில் ஆய்வு செய்யப்படும்.
ஆய்வு செய்வதற்கான ஆற்றலை பெற்றிருப்பது என்பது குறைவற்ற அடிப்படைகளின் அமைக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து ஷரீயத் சட்டங்களை எடுப்பதாகும். இதில் தனியாக ஒரு கலையை உருவாக்கியவர் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களாகும். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இதில் நூல்களை தொகுத்துள்ளார்கள்.
அல்உசூல் மின் இல்மில் உசூல் பக்கம் 7.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

மூலம்:Islamqa.info

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply