ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 1️⃣3️⃣ :

ரமழான் மாதத்தின் பகல் நேரங்களில் மிஷ்வாக், அல்லது பற்பசை (Toothpaste) பயன்படுத்துவது பற்றிய மார்க்கச் சட்டம் என்ன.?

 

📝 பதில் :

 

மிஷ்வாக் (குச்சிகளை) பயன்படுத்துவதைப் பொறுத்தளவில், அவைகள் மரத்தின் வேர்களிலிருந்து தயார் செய்யப்படுகிறது; அவைகளால் எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை.

 

பற்பசைகளை பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவது ஹராம் என்று கூற என்னிடம் ஆதாரம் இல்லையென்றாலும், அவைகளை விட்டும் நாம் தவிர்ந்திருப்பது சிறந்தது என்றே நான் அறிவுரை கூறுகிறேன்.

 

மிகவும் முக்கியமானது என்னவெனில்,ஒரு நபர் (நோன்பின் போது) தன் வயிற்றுக்குள் எதுவும் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :

 

وبالغ في الاستنشاق إلا أن تكون صائمًا

“உங்களில் ஒருவர் ஒழு செய்வதற்காக தம் மூக்கை சுத்தம் செய்யும்போது, தண்ணீரை மூக்கில் செலுத்த வேண்டும்; நோன்பாளியை தவிர…”

(நூல் : ஸுனன் அபூதாவூத் )

 

 

நோன்பாளியாக இருப்பவர் அவரது வயிற்றில் தண்ணீர் சென்று அதன் மூலமாக நோன்பு முறிந்துவிடுமோ என்று அவர் அஞ்சுவதால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply