ஆயத்துல் குர்ஸியின் தஃப்ஸீர் -இமாம் அஸ்ஸஅதி

اللَّهُ لا إِلهَ إِلّا هُوَ الحَيُّ القَيّومُ لا تَأخُذُهُ سِنَةٌ وَلا نَومٌ لَهُ ما فِي السَّماواتِ وَما فِي الأَرضِ مَن ذَا الَّذي يَشفَعُ عِندَهُ إِلّا بِإِذنِهِ يَعلَمُ ما بَينَ أَيديهِم وَما خَلفَهُم وَلا يُحيطونَ بِشَيءٍ مِن عِلمِهِ إِلّا بِما شاءَ وَسِعَ كُرسِيُّهُ السَّماواتِ وَالأَرضَ وَلا يَئودُهُ حِفظُهُما وَهُوَ العَلِيُّ العَظيم

அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய ‘‘குர்ஸி’ வானங்கள், பூமியைவிட விசாலமாய் இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் இல்லை. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.

இந்த ஆயத் குர்ஆனின் ஆயத்துகளிலேயே மிக முக்கியமானது, சிறந்தது, கண்ணியம்மிக்கது. ஏனென்றால், இந்த ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியம்வாய்ந்த விஷயங்களும் மற்றும் அல்லாஹ்வின் கண்ணியமான பண்புகளும் தான்.

இதனால், இந்த ஆயத்தை ஓதி வர ஊக்குவிக்கும் வகையில் பல ஹதீஸ்கள் வந்துள்ளன, காலை, மாலை, தூங்கும் முன், தொழுகைக்கு பின் ஓதும் திக்ருகளில் ஒன்றாக உள்ளது.

لا إله إلا هو

அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை

அல்லாஹ் அவனை தவிர வணக்கத்திற்கு தகுதியான இலாஹ் வேறு யாரும் இல்லை.
அல்லாஹ் தன்னை பற்றி ‘ அவனைத் தவிர இலாஹ் வேறுயாரும் இல்லவே இல்லை ‘ என்று அறிவிக்கிறான். இதன் பொருள் “உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை” என்பதாகும். அவன் தான் உண்மையான இலாஹ், அனைத்து வகை வணக்க வழிபாடுகளும், வழிபடுதல்களும், இறைத்தன்மை, அவனுக்கு மட்டுமே உரியது.

ஏனென்றால் அவன் பரிபூரணமானவன், குறையற்றவன், குறையில்லா பண்புகளை கொண்டவன், பெரும் அருட்கொடைகளை கொடுப்பவன். மேலும் அடியார்கள், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, அவன் தடுத்தவைகளை விட்டும் விலகி, ரப்பின் அடிமைகளாக, அவனை வணங்குபவர்களாக இருக்க வேண்டும்.

الحي القيوم:

அல்ஹய் அல்கைய்யூம்:

இவ்விரு பெயர்களும், அல்லாஹ்வின் அனைத்து பெயர்களின் பொருள்களையும் உள்ளடக்கும்.

அல்ஹய்: அவன்தான், குறையற்ற பரிபூரண வாழ்வுடயவன், அவனுடய வாழ்வானது , செவி, பார்வை, வல்லமை, அறிவு போன்றஅவனுடய மெய்மை(தாத்) சார்ந்த அனைத்துப் பண்புகளையும் கொண்டது.

அல் கய்யூம்: என்பவன், தானே நிலைகொண்டு, அவனை தவிர உள்ள அனைத்தையும் நிலயாக்கினான். இது இஸ்திவா(அர்ஷின் மீது உயர்ந்தது), நுஸூல் (வானத்திற்கு இருங்குவது), படைத்தல், கொடுத்தல், மரணிக்கச் செய்தல் , உயிர்ப்பித்தல், சொல், பேச்சு, இன்னும் படைப்புகளை ஆழ்வதன் அனைத்து செயல்களையும் உள்ளடக்கும் பெயராகும். இதனால்தான் மர்க்க அறிஞர்களில் சிலர், அல்லாஹ்வின் பெயர்களில் எந்தப்பெயரை கொண்டு அழைத்தாள் பதில் கொடுக்கப்படும், கேட்டால் கொடுக்கப்படுமோ, அந்த இஸ்முல் அஃதம் (மிக சிறந்த) பெயர் அல்ஹய் அல்கய்யூம் தான் என்று கூறுகிறார்கள்.

لا تأخذه سنة ولا نوم:

அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது.

அவன் வாழ்வு, மற்றும் கய்யூமியத்தின் முழுமைகளில் ஒன்றுதான் அவனை சிறு தூக்கமும் பீடிக்காது, பெரும் நித்திரையும் பீடிக்காது என்பது, இங்கு வந்துள்ள ஸினதுன் எனும் சொல்லிற்கு சோர்வு, கன் அசர்வு என்று பொருள்.

له ما في السماوات وما في الأرض

வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே.

அவன், தான் அதிபதி, அவனையன்றி மற்றவை அனைத்தும் ஆளப்படுபவை. அவன் படைப்பாளன், ரிஸ்க் கொடுப்பவன், ஆள்பவன் அவனன்றி மற்றவை அனைத்தும் படைப்புகள், ரிஸ்க் கொடுக்கப்பட்டவை, ஆளப்படுபவை, வானிலும் பூமியிலும் ஒரு அணுவளவும் தன் மீதோ பிரர்மீதோ ஆற்றல் அற்றவை.

இதனால்தான் அல்லாஹ் கூறுகிறான்:

من ذا الذي يشفع عنده إلا بإذنه

அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்?

அதாவது அவன் அனுமதி இன்றி அவனிடம் யாரும் பரிந்துரை செய்ய இயலாது, ஆக பரிந்துரைகள் அனைத்தும் அவனுக்கே உரித்தது. ஆனால் தன் அடியார்களில் யாருக்கேனும் அவன் கருணை காட்ட நினைத்தால், தன் அடியார்களில் தான் கண்னணியமளிக்க விரும்பும் ஒருவருக்கு அந்த மனிதருக்காக பரிந்துரை செய்ய அனுமதிப்பான். அல்லாஹ் அனும்திக்கும் முன் யாராலும் பரிந்துரை செய்ய முடியாது.

يعلم ما بين أيديهم وما خلفهم

அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்.

கடந்து சென்றவை, மற்றும் எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அல்லாஹ் அறிவான். அல்லாஹ்வின் அறிவு நடந்தவை, நடக்க இருப்பவை, வெளிப்படயாணவை, மறைவாணவை அனைத்தயும் சூழும். அடியார்களுக்கோ அல்லாஹ் கற்றுக்கொடுத்ததை தவிர அணுவளவும் அறிவு பெற முடியாது, இதனால் தான் அல்லாஹ் கூறுகிறான்:

ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض

அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய ‘‘குர்ஸி’ வானங்கள், பூமியைவிட விசாலமாய் இருக்கிறது.

இது அல்லாஹ்வின் மகத்துவத்தையும், அதிகாரத்தின் பரப்பையும் காட்டுகிறது, குர்ஸியின் நிலையே இவ்வளவு ஆச்சர்யம் தருகிறதே, வானங்கள், பூமியை சூழ்கிரதே! ஆனால் குர்ஸி அல்லாஹ்வின் படைப்புகளில் மிக பெரியது அல்ல, அர்ஷ் என்பது அதைவிட மிகப்பெரியது. இந்த படைப்புகளின் மகத்துவத்தை கண்டு சிந்தனைகள் நிலைகுலைந்து போகும்,பார்வைகள் சோர்ந்துவிடும், மலைகளும் ஆடிப்பொகும்.

அல்லாஹ்வின் படைப்புகளின் மகத்துவமே இப்படி என்றால், அவற்றின் படைப்பாளனின் மகத்துவத்தை எண்ணிப்பாருங்கள், இதன் படித்ததில்அவனின் ஞானத்தை எண்ணிப்பாருங்கள், அவன் எந்த சிரமும் சோர்வும் இன்றி வானங்கள் பூமியை நிலை நிறுத்தி வருவதையும் எண்ணிப்பாருங்கள்.

இதனால் தான் அல்லாஹ் கூறுகிறான்:

ولا يؤوده حفظهما وهو العلي

அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் இல்லை. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்;

அல்லாஹ், அவன் தானே அர்ஷின் மேல் உயர்ந்தான், தன் படைப்புகள் அனைத்தின் மீதும் அதிகாரத்தால் உயர்ந்தவன், பரிபூரண குறையற்ற பண்புகளினால் உயர்ந்தவன், அந்தஸ்தில் உயர்ந்தவன்.

العظيم

மிக மகத்தானவன்.

அவனுடை மகத்துவத்தின் முன்னாள் அகம்பாவக்காரர்களின் அகம்பாவம் ஒன்றுமே இல்லை, அடக்கி ஆண்ட ஆட்சியாளர்களின் ஆட்சி அதிகாரங்கள் இல்லாலமலாகும்.

பெரும் கண்ணியம், மகிமை, பெருமை, அனைத்தின் மீதும் அதிகாரம், ஆட்சி கொண்ட அல்லாஹ் எந்த குறையுமற்ற தூயவன்.

இந்த ஆயத், அல்லாஹ் மட்டும்தான் வணங்கப்பட வேண்டும் எனும் தவ்ஹீத் அல் உலூஹிய்யா, அவன் மட்டும் தான் படைத்து பரிபக்குவப் படுத்தி, ஆளும் ரப் எனும் தவ்ஹீத் அர் ருபூபிய்யா, அல்லாஹ் தன் பெயர்களிலும் பண்புகளிலும் எவ்வகையிலும் இணையும் துணையும் ஒப்பும் அற்றவன் எனும் தவ்ஹீத் அல் அஸ்மா வ அஸ்ஸிஃபாத், எனும் தவ்ஹீதின் மூன்று வகைகளையும் கூறுகிறது. மேலும் அனைத்தையும் சூழும் ஆட்சி, அறிவு, பறந்து விரிந்த அதிகாரம், உயர் மாண்பு, மகிமை, பெருமை, படைப்புகள் அனைத்தயும்விட உயர்வு ஆகிய அல்லாஹ்வின் உயர் பண்புகளை இந்த ஆயத் குறிப்பிடுகிறது. இந்த ஆயத் மட்டுமே அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், பண்புகளின் அகீதாவை குறிப்பிடுகிறது, அல்லாஹ்வின் அனைத்து அழகிய பெயர்கள், பண்புகளின் பொருளையும் உள்ளடுக்கியுள்ளது.

மூலம்: தப்ஸீர் அஸ்ஸஅதி
தமிழாக்கம்: நயீம் இப்னு அப்துல் வதூத்

، فقد اشتملت هذه الآية على توحيد الإلهية وتوحيد الربوبية وتوحيد الأسماء والصفات، وعلى إحاطة ملكه وإحاطة علمه وسعة سلطانه وجلاله ومجده، وعظمته وكبريائه وعلوه على جميع مخلوقاته، فهذه الآية بمفردها عقيدة في أسماء الله وصفاته، متضمنة لجميع الأسماء الحسنى والصفات

هذه الآية الكريمة أعظم آيات القرآن وأفضلها وأجلها، وذلك لما اشتملت عليه من الأمور العظيمة والصفات الكريمة، فلهذا كثرت الأحاديث في الترغيب في قراءتها وجعلها وردا للإنسان في أوقاته صباحا ومساء وعند نومه وأدبار الصلوات المكتوبات، فأخبر تعالى عن نفسه الكريمة بأن {لا إله إلا هو} أي: لا معبود بحق سواه، فهو الإله الحق الذي تتعين أن تكون جميع أنواع العبادة والطاعة والتأله له تعالى، لكماله وكمال صفاته وعظيم نعمه، ولكون العبد مستحقا أن يكون عبدا لربه، ممتثلا أوامره مجتنبا نواهيه، وكل ما سوى الله تعالى باطل، فعبادة ما سواه باطلة، لكون ما سوى الله مخلوقا ناقصا مدبرا فقيرا من جميع الوجوه، فلم يستحق شيئا من أنواع العبادة، وقوله: {الحي القيوم} هذان الاسمان الكريمان يدلان على سائر الأسماء الحسنى دلالة مطابقة وتضمنا ولزوما، فالحي من له الحياة الكاملة المستلزمة لجميع صفات الذات، كالسمع والبصر والعلم والقدرة، ونحو ذلك، والقيوم: هو الذي قام بنفسه وقام بغيره، وذلك مستلزم لجميع الأفعال التي اتصف بها رب العالمين من فعله ما يشاء من الاستواء والنزول والكلام والقول والخلق والرزق والإماتة والإحياء، وسائر أنواع التدبير، كل ذلك داخل في قيومية الباري، ولهذا قال بعض المحققين: إنهما الاسم الأعظم الذي إذا دعي الله به أجاب، وإذا سئل به أعطى، ومن تمام حياته وقيوميته أن {لا تأخذه سنة ولا نوم} والسنة النعاس {له ما في السماوات وما في الأرض} أي: هو المالك وما سواه مملوك وهو الخالق الرازق المدبر وغيره مخلوق مرزوق مدبر لا يملك لنفسه ولا لغيره مثقال ذرة في السماوات ولا في الأرض فلهذا قال: {من ذا الذي يشفع عنده إلا بإذنه} أي: لا أحد يشفع عنده بدون إذنه، فالشفاعة كلها لله تعالى، ولكنه تعالى إذا أراد أن يرحم من يشاء من عباده أذن لمن أراد أن يكرمه من عباده أن يشفع فيه، لا يبتدئ الشافع قبل الإذن، ثم قال {يعلم ما بين أيديهم} أي: ما مضى من جميع الأمور {وما خلفهم} أي: ما يستقبل منها، فعلمه تعالى محيط بتفاصيل الأمور، متقدمها ومتأخرها، بالظواهر والبواطن، بالغيب والشهادة، والعباد ليس لهم من الأمر شيء ولا من العلم مثقال ذرة إلا ما علمهم تعالى، ولهذا قال: {ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض} وهذا يدل على كمال عظمته وسعة سلطانه، إذا كان هذه حالة الكرسي أنه يسع السماوات والأرض على عظمتهما وعظمة من فيهما، والكرسي ليس أكبر مخلوقات الله تعالى، بل هنا ما هو أعظم منه وهو العرش، وما لا يعلمه إلا هو، وفي عظمة هذه المخلوقات تحير الأفكار وتكل الأبصار، وتقلقل الجبال وتكع عنها فحول الرجال، فكيف بعظمة خالقها ومبدعها، والذي أودع فيها من الحكم والأسرار ما أودع، والذي قد أمسك السماوات والأرض أن تزولا من غير تعب ولا نصب، فلهذا قال: {ولا يؤوده} أي: يثقله {حفظهما وهو العلي} بذاته فوق عرشه، العلي بقهره لجميع المخلوقات، العلي بقدره لكمال صفاته {العظيم} الذي تتضائل عند عظمته جبروت الجبابرة، وتصغر في جانب جلاله أنوف الملوك القاهرة، فسبحان من له العظمة العظيمة والكبرياء الجسيمة والقهر والغلبة لكل شيء، فقد اشتملت هذه الآية على توحيد الإلهية وتوحيد الربوبية وتوحيد الأسماء والصفات، وعلى إحاطة ملكه وإحاطة علمه وسعة سلطانه وجلاله ومجده، وعظمته وكبريائه وعلوه على جميع مخلوقاته، فهذه الآية بمفردها عقيدة في أسماء الله وصفاته، متضمنة لجميع الأسماء الحسنى والصفات العلا، ثم قال تعالى:
تفسير السعدي

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 
%d