சூரா அல் நாஸ்- விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் அரசன்.
إِلَٰهِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் நாயன்.
من شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்)
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
இந்த சூரா மனிதர்களின் ரப்1, இலாஹ்2 மற்றும் அதிபதியாகிய அல்லாஹ்விடம், ஷய்த்தானிடம் இருந்து பாதுகாப்பு தேட கூறுகிறது. அந்த ஷய்த்தான், தான் அனைத்து தீங்குகளின் காரணியும், அடிப்படையாகவும் இருக்கிறான். அவனுடைய குழப்பங்களிலும் தீங்குகளிலும் ஒன்று தான் அவன் மக்களின் எண்ணங்களில் ஊசலாட்டங்களை (வஸ் வாஸ்) உருவாக்கி, பாவங்களையும் தீமைகளையும் நன்மையாக காட்டுவது , அந்த பாவங்களை செய்ய ஆர்வத்தை தூண்டுகிறான், மேலும் நன்மையான விஷயங்களை கேவலமாக காட்டுகிறான், நன்மைகளை செய்வதிலிருந்தும் தடுக்கிறான். அவனின் வாழ்நாளை இதிலேயே கழிக்கிறான், மக்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகிறான்,  பதுங்கி ஓடுகிறான், அதாவது, ஒரு அடியான்  தன் இறைவனை நினைவிகூறி ஷய்த்தானை  விரட்ட  உதவிதேடும்பொழுது அவனை விட்டு பதுங்குகிறான்.
وهذه السورة مشتملة على الاستعاذة برب الناس ومالكهم وإلههم، من الشيطان الذي هو أصل الشرور كلها ومادتها، الذي من فتنته وشره، أنه [ص: 938] يوسوس في صدور الناس، فيحسن [لهم] الشر، ويريهم إياه في صورة حسنة، وينشط إرادتهم لفعله، ويقبح لهم الخير ويثبطهم عنه، ويريهم إياه في صورة غير صورته، وهو دائمًا بهذه الحال يوسوس ويخنس أي: يتأخر إذا ذكر العبد ربه واستعان على دفعه.
ஆகையால் அடியான், அல்லாஹ்வின் (1) இறைத்தன்மையை (ருபூபிய்யஹ் -ரப் எனும் இறைவனின் பெயரிலிருந்து வருகிறது ) முன்னிறுத்தி, ஷய்த்தானிடம் இருந்து பாதுகாப்பும், அவனுக்கு எதிராக உதவியும் தேடுவது கட்டாயம். மேலும் எல்லாப்படைப்புகளும் இறைவனின் ருபூபிய்யத்திற்கு கட்டப்பட்டுள்ளது, அவனே அதற்கு அதிபதி. அனைத்து உயிரினங்களின் முன்நெற்றியும் அவன் கைகளில்தான் உள்ளது
فينبغي له أن [يستعين و] يستعيذ ويعتصم بربوبية الله للناس كلهم.
وأن الخلق كلهم، داخلون تحت الربوبية والملك، فكل دابة هو آخذ بناصيتها.
மேலும் அவனுடைய (2)உலூஹிய்யத்தையும்* , கொண்டு ஷய்த்தானிடமிருந்து பாதுகாப்பு தேட வேண்டும். மனிதர்கள் படைக்கப்பட்டதே உலூஹிய்யத்திற்காக(இறைவனை வணங்குவதற்கு) தான், ஷய்த்தானை விட்டு விலகாமல் தன்னுடைய படைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற மனிதனால் முடியாது. ஷய்த்தான் நம்மை நம்முடைய படைப்பின் நோக்கத்தை விட்டும் தூரமாக்கி, அவனுடைய  கூட்டாத்தாரில் ஒருவனாக ஆக்க விரும்புகிறான்,  لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் ஆக்கிவிடுவதற்காக.மன ஊசலாட்டங்களை ஏற்படுத்தும் ஜின்களை போல் மனிதர்களிலும் ஊசலாட்டம் ஏற்படுத்த்பவார்கள் இருக்கின்றனர். ஆகையால் “مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.என்று இறைவன் கூறுகிறான் .
وبألوهيته التي خلقهم لأجلها، فلا تتم لهم إلا بدفع شر عدوهم، الذي يريد أن يقتطعهم عنها ويحول بينهم وبينها، ويريد أن يجعلهم من حزبه ليكونوا من أصحاب السعير، والوسواس كما يكون من الجن يكون من الإنس، ولهذا قال: {مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ} .
முதலிலும் இறுதியிலும், வெளிப்படையாகவும் மறைவாகவும் அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
والحمد لله رب العالمين أولا وآخرًا، وظاهرًا وباطنًا
__________________________________________________________________
அடிக்குறிப்புகள்:
1)ரப் :- ரப் எனும் இறைவனின் பெயருக்கு அர்த்தம், அணைத்து படைப்புகளை படைத்தவன், ஆட்சி அதிகாரம் செய்பவன், நிர்வகிப்பவன்,  என்பதாகும். இது பல அர்த்தங்களை கொண்ட ஒரு பெயர். இந்த பெயரை தனியாக குறிப்பிட்டால், இறைவனின் அனைத்து அழகிய பெயர்கள், உயரிய பண்புகளின் அர்த்தங்களையும்  உள்ளடக்கும்.  [பார்க்க பிக்ஹ் அஸ்மா அல்ஹுஸ்னா, அப்துர்ரஸ்ஜாக் அல்பத்ர, பக்கம் 94]
2) இலாஹ்:-  அல்-இலாஹ் எனும் இறைவனின் பெயரின் அர்த்தம், படைப்புகளால் வணங்கப்படுபவனும், அவர்களின் வணக்கத்திற்கு உண்மையிலேயே தகுதியான ஒருவன் என்பதாகும். அவனை  அன்றி  வணங்க படும் ஏனைய அனைத்தும் போலி கடவுள்கள்.
*உலூஹிய்யத் என்பது இறைவனின் பண்புகளில் ஒன்று, இலாஹ் எனும் இறைவனின் பெயரிலிருந்து வருகிறது. அவன் ஒருவனே அணைத்து விதமான வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் தகுதியானவன் எனும் பண்பு.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply