ஒரு மாணவன் மாணவிக்கு ஸலாம் கூறுவது குறித்த சட்டம்

கேள்வி: நான் ஒரு பல்கலைகழகத்தில் மாணவனாக இருக்கின்றேன், சில நேரங்களில் பெண்களுக்கு ஸலாம் கூறுகின்றேன். இது போன்று ஒரு மாணவர் தன்னுடன் பயிலும் மாணவிக்கு ஸலாம் கூறுவது ஹலாலா அல்லது ஹராமா?

பதில்: பெண்களும் ஆண்களும் ஒரே இடத்தில், ஒரே பள்ளியில் கல்வி கற்பது அனுமதிக்கப்பட்டது அல்ல, இது தான் ஃபித்னா எழுவதற்கு ஆகப்பெரிய காரணம். ஆகையால் மாணவ மாணவிகள் இவ்வாறு ஒரே இடத்தில் இணைந்து படிப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல.

ஃபித்னா எழாது என்ற நிலையில் ஷரியத் அடிப்படையில் ஸலாம் கூறுவதை பொறுத்த வரை, அதில் யாதொரு தவரும் இல்லை.

அதே போல் அந்நிய பெண்களுக்கு கை கொடுப்பதும் மார்கத்தில் தடுக்கப்பட்டது.

ஸலாம் கூறும்போது தூரத்திலிருந்து, ஹிஜாபுடன் கூறவேண்டும். ஆகவே ஷரியத்தின் அடிப்படையிலும் ஃபித்னாக்களுக்கு இடம் இல்லாமலும் ஸலாம் கூறுவதில் தவறில்லை. ஆனால் ஃபித்னாக்கள் எழும் என்ற நிலையிலோ, அல்லது அல்லாஹ் ஹராமாக்கிய ஆசைகள், உணர்வுகளுடன் ஸலாம் கூறுவது தடுக்கப்பட்டது.

அல்லாஹ்விடமே வெற்றியும் உதவியும் உள்ளது.

ஷேக் பின் பாஸ்

(ஃபதாவா இஸ்லாமியா)


س – أنا طالب جامعي، وفي بعض الأحيان أسلم على الفتيات، فهل سلام الطالب على زميلته في الكلية حلال أو حرام؟
ج- أولا لا يجوز الدراسة مع الفتيات في محل واحد وفي مدرسة واحدة وفي كراسي واحدة،

بل هذا من أعظم أسباب الفتنة، فلا يجوز للطالب ولا للطالبة هذا الاشتراك لما فيه من التفن، أما السلام فلا بأس أن يسلم عليها سلاماً شرعياً ليس فيه تعرض لأسباب الفتنة، ولا حرج أن تسلم عليه أيضاً من دون مصافحة، لأن المصافحة لا تجوز للأجنبي، بل يكون السلام من بعيد مع الحجاب، ومع البعد عن أسباب الفتنة، ومع عدم الخلوة، فالسلام الشرعي الذي ليس فيه فتنه لا بأس به، أما إذا كان السلام عليها مما يسبب الفتنة أو سلامها عليه كذلك أي كونه عن شهوة وعن رغبة فيما حرم الله فهذا ممنوع شرعاً، وبالله التوفيق.
الشيخ ابن باز
[محمد بن عبد العزيز المسند، فتاوى إسلامية، ٧٠/٣]

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d