குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன?

கேள்வி:
குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன?

س: ما حكم تعليق التمائم إذا كانت من القرآن، أو من الدعوات المباحة؟.

பதில் : உலமாக்களிடையில் குர்ஆன், அனுமதிக்கப்பட்ட துஆக்களை கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவது பற்றி, அது ஹலாலா அல்லது ஹராமா என கருத்து வேறுபாடு உள்ளது.

அவை ஹராம் என்பதே சரியான கருத்து. இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1) தாயத்துகளை தடை செய்து வரும் ஹதீஸ்கள் பொதுவான கருத்திலேயே வருகிறது, அது அனைத்து வகையான தாயத்துக்களையும் உள்ளடக்கும்.
2) குர்ஆனிய தாயத்துகளை அனுமதித்தால் அது ஷிர்க்குக்கு வழிவகுக்கக்கூடும். மற்ற தாயத்துகளுக்கும் இதுக்கும் மத்தியில் குழப்பங்கள் ஏற்படக்கூடும், இது ஷிர்க்கிற்கான கதவுகளை திறந்து விடும். ஷிர்க்கிற்கும் பாவங்களுக்கும் வழிவகுப்பவைகளை தடுப்பது ஷரியத்தின் அடிப்படைகளில் முக்க்கியமானது என்பது தெரிந்ததே.

அல்லாஹ்வே உதவியாளன்.

[இபின் பாஸ் – மஜ்மூ அல் பதாவா 6/482]

ج: اختلف العلماء في التمائم إذا كانت من القرآن، أو من الدعوات المباحة هل هي محرمة أم لا؟ والصواب: تحريمها لوجهين:أحدهما: عموم الأحاديث المذكورة، فإنها تعم التمائم من القرآن وغير القرآن، والوجه الثاني: سد ذريعة الشرك، فإنها إذا أبيحت التمائم من القرآن اختلطت بالتمائم الأخرى واشتبه الأمر، وانفتح باب الشرك بتعليق التمائم كلها، ومعلوم أن سد الذرائع المفضية إلى الشرك والمعاصي من أعظم القواعد الشرعية، والله ولي التوفيق.مجموع لأبن باز(6/482).

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d