நபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது

கேள்வி: எப்படி எனக்கு நபி ﷺ அவர்கள் மீதுள்ள நேசத்தை அதிகப்படுத்த முடியும்?

பதில்
ஷைய்ஃக் சுலைமான் அர்-ரூஹய்லி (حفظه الله) கூறிகின்றார்கள்.

நீங்கள் நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படியுங்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படித்த ஒரு நபருக்கும் அவர் மீது நேசம் அதிகமாகாமலிருப்பதில்லை.

நபி ﷺயுடைய ஒரு வாழ்க்கை சம்பவத்தை நீங்கள் இன்று வாசியுங்கள். அதேபோன்று நாளை மீண்டும் அதே சம்பவத்தை வாசித்தாலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ மீது இன்னும் நேசம் அதிகரிக்கும்..

நபிﷺ யுடைய வாழ்க்கையை படிக்காமல் விட்டதன் காரனமாக தான் இக்காலகட்டத்தில் நாம் கஷ்டங்களை அனுபவப்படுகிறோம்.

பல மாணவர்களும் இன்றைக்கு நபி ﷺயுடைய வாழ்க்கையை படிப்பதில்லை.

நபி ﷺ யுடைய ஹதீஸ்களை அதிகமாக மனனம் செய்த இமாம் அஹ்மத் (ரஹி) அவர்கள் நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அதிகமாக படிக்கக்கூடிய வராக இருந்தார்கள்.

இரண்டாவதாக நபிﷺ வழியாக அல்லாஹ் நமக்கு வழங்கிய அதிகமான அருட்கொடைகளை குறித்து தனிமையில் சிந்திப்பது.

அல்லாஹ்வினுடைய கிருபையால் நாம் முஹம்மது நபியுடைய பாதையில் நம்மை வாழவைப்பது என்பது பெரிய அருட்கொடையாகும்.அதை குறித்து சிந்திக்கும்போது நமக்கு நபிﷺ மீது பாசம் அதிகரிக்கும்.

அப்படியானால் உங்கள் எல்லாவருக்கும் நபி ﷺ நேசிக்க முடியும்.

மேலும் இதை குறித்து விளக்கமாக கேட்க
https://youtu.be/KoukIEoAQec

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ ஸாலிஹ்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d