ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாத ஒருவரை திருமணம் முடித்து வைப்பது

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ சாலி, நயீம் இப்னு அப்துல் வதூத்.
_______

கேள்வி:

ஒரு சகோதரியின் கேள்வி…..

எனக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு எண்ணுடைய தாய் ஏற்பாடு செய்கிறார். நான் விருப்பம் தெரிவிக்காததினால்.அவர் இரவும் பகலுமாக அழுகிறார் நான் என்ன செய்வது.

பதில்:
ஷைய்ஃக் ஸாலிஹ் அல்- ஃபவ்ஜான் (ஹ) கூறிகின்றார்கள்.

திருமணம் உங்களுடைய உரிமையாகும்.

தீனிலும், குணத்திலும் உங்களுக்கு விருப்பமுள்ளவரை திருமணம் செய்வது தான் சிறந்தது.

உங்களுடைய தாய் விருப்பபடுகின்றவர்களை உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அவருக்கு உரிமையில்லை.

பிறகு உங்களுடைய தாய் இந்த விஷயத்தில் எதிரானாலும் நீங்கள் செய்தது தான் சரி. அவர்களிடத்தில் தான் தவறு இருக்கின்றது.

மேலும் இதை குறித்து விரிவாக கேட்பதற்கு
https://youtu.be/n3lxfm99eEM

இப்னு பாஸ் (رحمه الله) கூறிகின்றார்கள்.
” ஒரு பெண்ணின் வலி (பொறுப்பாளர்) அந்த பெண்ணிற்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க எந்த உரிமையும் இல்லை, மக்களிலேயே சிறந்த ஒரு ஆடவராக இருந்தாலும் சரி, அவருடன் கட்டாய திருமணம் நடத்தி வைக்க எந்த உரிமையும் இல்லை.

பெண்களுக்கு இது விடயத்தில் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு, இதற்கு ஆதாரம்:

‘கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி(صلى الله عليه وسلم) அவர்கள், ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், மற்றும் பல நூல்கள்).

மற்றோர் அறிவிப்பில், “கண்ணிப்பெண்ணிடம் அவலின் தந்தை அனுமதி கேட்கட்டும், அவலின் மௌனமே அனுமதி ஆகும்” என்று வந்துள்ளது.

ஆகவே ஒரு பெண்ணின் தந்தைக்கோ, பிறருக்கு, அவள் ஒன்பது வயதை அடைந்து விட்டால், அவளை கட்டாயப்படுத்த எந்த உரிமையும் இல்லை. அவளிடம் அனுமதி வாங்குவது கட்டாயம், அது மௌன வடிவில் இருந்தாலும் சரியே. முன்னரே திருமணம் ஆகிய இரு பெண்ணாக இருந்தால், தெளிவாக ‘ஆம்’ என்று கூறி அனுமதி கொடுக்க வேண்டும், மௌனம் மட்டும் போதாது. பொறுப்பாளர் பெண்ணின் தந்தாயாக இருப்பினும், திருமணம் பேசும் ஆன் உலகிலேயே சிறந்தவராக இருப்பினும் பெண்ணின் சம்மதம் பெறுவது கட்டாயம். இது அவலளுக்கான உரிமை

السؤال:
المستمع: عبد الله عثمان ، بعث برسالة، ملخص ما في هذه الرسالة يسأل سماحتكم عن حكم إجبار البنت على الزواج، ولاسيما من شخصٍ قد يكبرها سنًا، أو قد يكون عليه بعض النقص الخلقي؟ جزاكم الله خيرًا.

الجواب:
ليس للولي أن يجبر المرأة على التزوج، ولو بأكمل الناس، ليس له إجبارها، بل هي لها الخيار، لقوله ﷺ: لا تنكح الأيم؛ حتى تستأمر، ولا تنكح البكر؛ حتى تستأذن قالوا: يا رسول الله! كيف إذنها؟ قال: أن تسكت، وفي الحديث الآخر يقول ﷺ: والبكر يستأذنها أبوها، وإذنها سكوتها، فليس للأب ولا لغيره أن يجبر البنت على الزواج، إذا بلغت تسعًا فأكثر، بل لابد من إذنها ولو بالسكوت، وأما الأيم التي قد تزوجت، فلابد من إذنها الصريح بالكلام، تقول: نعم، وليس له جبرها أبدًا، ولو كان أباها، ولو كان الزوج من أصلح الناس، لأن هذا يختص بها، من مصلحتها، فلا تجبر. نعم.
المقدم: جزاكم الله خيرًا، وأحسن إليكم.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 
%d