துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.

 

  1. அல்-இஹ்லாஸ் (உளத்தூய்மை) “அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்ததையும் மட்டுமே நாட வேண்டும்”.
  2. துஆவின்ஆரம்பத்திலும் இறுதியிலும்அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நபியின்(ஸல்) மீது ஸலவாத்து கூறவேண்டும்.
  3. உறுதியான வாசகங்களைக் கொண்டு துஆக் கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
  4. தொடர்ந்து கெஞ்சிக் கேட்க வேண்டும். அவசரம் கூடாது.
  5. துஆவில் மன ஓர்மை இருக்க வேண்டும்.
  6. சுகம், துக்கம், வசதி, நெருக்கடி என்று எல்லா நிலைகளிலும் துஆகேட்க வேண்டும்.
  7. அல்லாஹ்விடம் மட்டுமே துஆகேட்க வேண்டும்.
  8. உறவினர், செல்வம், பிள்ளைகளுக்கு எதிராகவும, தனக்கு எதிராகவும் துஆகேட்க கூடாது.
  9. துஆ கேட்கும் போது மிகவும் தாழ்ந்த குரலும் இன்றி, உரத்த சப்தமும் இன்றி நடுத்தரத்தில் கேட்க வேண்டும்.
  10. தன் பாவங்களையும், குற்றங்களையும் ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்.  அல்லாஹ்வின் அருட் கொடைகளை ஏற்றுக் கொண்டு அவற்றிகு நன்றி செலுத்த வேண்டும்.
  11. துஆ கேட்கும் போது வாசகக் கோர்வைக்காக சிரமம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
  12. துஆவில் பணிவு, பயம், நடுக்கம், ஆர்வம் ஆகியவை இருக்க வேண்டும்.
  13. உரிமைகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும்.
  14. ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை கேட்க வேண்டும்.
  15. கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
  16. கைகளை உயர்த்திக் கேட்க வேண்டும்.
  17. முடிந்தால் துஆ கேட்பதற்கு முன் உளு செய்து கொள்ள வேண்டும்.
  18. துஆக் கேட்பதில் எல்லை மீறக் கூடாது.
  19. பிறருக்கு துஆ செய்யும் போது முதலில் தனக்கு செய்து கொள்ள வேண்டும் (ஆனால் இது கட்டாயமில்லை).
  20. அல்லாஹ்விடம் வஸீலா தேட வேண்டும்.  அதாவது அவனது அழகிய பெயர்கள் மற்றும் பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்ந்து கேட்பது. அல்லது தான் செய்த ஒரு நற்செயலைக் கூறி கேட்பது. அல்லது தனக்கருகில் உயிர் வாழும் நல்லவர் ஒருவர் தமக்காக கேட்டது ஆவைக் கூறிக் கேட்பது. உதாரணமாக, “அல்லாஹ்வே! இன்னவர் எனக்காக உன்னிடம் கேட்ட துஆவை என் விஷயத்தில் ஏற்றுக் கொள்” என்று கேட்பது.
  21. உணவு, குடிப்பு, ஆடை ஹலாலாக இருக்க வேண்டும்.
  22. துஆவில் பாவமான காரியத்தையோ உறவை முறிக்கும்விஷயத்தையோ கேட்கக்கூடாது.
  23. துஆ கேட்பவர் நன்மையை ஏவுபவராகவும் தீமையத் தடுப்பவராகவும் இருக்க வேண்டும்.
  24. எல்லாப் பாவங்களை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

    ஷேக் ஸயீது இப்னு வஹ்ஃப் அல் கஹ்தானி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d