வேண்டாம் PUBG!!! இணைவைத்த்லுக்கு ஷிர்கிற்க்கு வழி வகுக்கின்றது

بسم الله الرحمن الرحيم

என் இஸ்லாமிய சகோதர சகோதரியே மற்றும் என்னுடைய பிள்ளைகளே அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதில் இருந்து எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருந்து கொள்ளுங்கள்.

அது செல்போன் அல்லது விளையாட்டு கருவியில் வீணாக (பிரியோஜனம் இல்லாமல்) விளையாடும் விளையாட்டுகளாக இருந்தாலும் சரி.

(புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வந்துள்ள) PUBG என்னும் விளையாட்டில் காட்டப்படும் சிலைகளை மகத்துவ படுத்துவது, (அதிக சக்திகள் அல்லது ஆயுதங்களை வாங்குவதற்காக)
அதனிடம் நெருங்குவது,
(வஸீலத் தேடுவது),

மேலும் அச்சிலைகளுக்குள் உயிர்கள் இருக்கும் என்று தானாக சித்தரித்துக்கொண்டு அவைகளை அழைத்து பிரார்த்திப்பது,

இது அனைத்தும் இறை நிராகரிப்பும் மகத்துவமிக்க அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் செயலாகும்.

மேலும் சிலர் கூறுகிறார்கள் அச்சிலைகளுக்கு வணக்க வழிபாடு செய்யப்படுவதில்லை, மாறாக அச்சிலைகளுக்கு வாழ்த்து தான் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்கிறார்கள்.

இக்கூற்றுக்கு இரண்டு கோணத்தில் பதில் உள்ளது:

அவ்விளையாட்டில் காட்டப்படும் வார்த்தை invoke அல்லது invoking என்றால் அழைத்து பிரார்திப்பதாகும்.

இது அவ்விளையாட்டில் காட்டப்படும் அச்சிலைகலுக்குள் இருக்கும் அவ்வுயிர்களை மற்றும் ஷைத்தான்களை அழைத்து பிரார்த்திப்பதைக் குறிக்கின்றது.

இரண்டாவதாக,

சிலைகளுக்கோ அல்லது அதனுள் இருக்கும் போலியான உயிர்களுக்கோ அல்லது ஷைத்தாங்களுக்கோ
வாழ்த்து கூறுவதோ அல்லது மகத்துவ படுத்துவதோ அல்லது பணிந்து இரைஞ்சுவதோ அல்லது வஸீலத் அல்லது நெருக்கம் தேடுவதோ அல்லது ருகூ மற்றும் ஸஜ்தா செய்வதோ (இவை அனைத்தும் ஒரு முஸ்லிமிற்கு) அனுமதிக்கபடாததாகும்.

அதை தெரிந்தே செய்தாலும் சரி அல்லது நகைச்சுவைக்காகவோ அல்லது விளையாட்டுக்காகவோ அல்லது வீணாக செய்தாலும் சரி இதற்கு ஒருபோதும் அனுமதி இல்லை.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்:

وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ
(இதனைப் பற்றி) நீர் அவர்களைக் கேட்பீராயின், “நாங்கள் (வீண்) பேச்சில் மூழ்கியும், விளையாடிக் கொண்டுமிருந்தோம்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், (அதற்கு நபியே! அவர்களிடம்) “அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று நீர் கேட்பீராக

ஸூரத்துத் தவ்பா-65.

எழுதியவர்: அஷ்ஷெய்க் ஹாமித் ஃகமீஸ் அல்ஜுனைபி ஹஃபிதஹுல்லாஹ்

தமிழாக்குனர்: முஹம்மத் அஸ்லம் பின் ஹாஷிம்.

பப்ஜீ(PUBG) விளையாட்டு குறித்து ஷேக் சுலைமான் அர் ருஹைலீ*:

9 மாதங்களுக்கு முன்னர் என்னிடம் பப் ஜீ விளையாடுவது குறித்து கேட்கப்பட்டது. அப்போது நான் அது ஹராம் என்றும், பல தீமைகளை விளைவிக்கிறது என்றும் ஃபத்வா வழங்கி இருந்தேன்.

இப்போது நான் இந்த விளையாட்டில், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை அறியக் கண்டேன். இதில் சிலைகளை கண்ணியப்படுத்துவது போன்ற செயல்கள் உள்ளது, இந்த சிலைகள் பயன் தருவதாகவும் காட்டப்படுகிறது, அவற்றை கண்ணியப் படுத்துவோருக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கிடைக்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயம், பெரும் இணைவைப்பு( ஷிர்க் அல் அக்பர்).

ஆகையால் ஒவ்வோர் முஸ்லிமும் இந்த விளையாட்டை குறித்து கவனமாக இருக்க வேண்டும், தம் பிள்ளைகள் இதை விளையாடுவதை தடுக்கவும் வேண்டும்.

___________
*ஷேக் சுலைமான் மஸ்ஜித் அல்குபாவின் இமாம் மற்றும் கதீப், மஸ்ஜித் அந்நபவியில் ஆசிரியர், மதீனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்

மொழி பெயர்ப்பாளர்: நயீம் இப்னு அப்தில் வதூத்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d