தன் பிரதேச மக்களுடன் சேர்ந்து நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது எவ்விடத்தில் பிறை பார்த்தாலும் நோன்பு வைக்க வேண்டுமா?

கேள்வி:

சில முஸ்லிம் நாடுகளில் பிறை பார்க்கப்பட்ட பின்னரும், நான் வசிக்கும் நாட்டில் ஷாபன், ரமழான் மாதங்களில் 30 நாட்களாக பூர்த்தி செய்கின்றனர், இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் மத்தியில் ரமழான் விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட காரணங்கள் என்ன?

பதில்:

புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே.

நீங்கள் உங்கள் பிரதேச மக்களுடன் சேர்ந்தே செயல்படவேண்டும். அவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பு வையுங்கள், அவர்கள் நோன்பை விடும்போது நீங்களும் விடுங்கள், ஏனென்றால் நபி صلى الله عليه و سلم கூறினார்கள்:

நோன்பு என்பது நீங்கள் நோன்பு வைக்கும் நாளே, ஃபித்ர் என்பது நீங்கள் நோன்பை விடும் நாளே, தியாகம் என்பது நீங்கள் அறுத்து தியாகம் செய்யும் நாளே.”

மேலும் பிளவு படுவது தீய விடயம். ஆகையால் நீங்கள் வசிக்கும் பகுதி மக்களுடன் சேர்ந்து செயல் படுவதே உங்கள் மீது கடமை. உங்கள் பகுதியில் வாழும் மக்கள் நோன்பு வைத்தால் நீங்களும் அவ்வாறே செய்யுங்கள், அவர்கள் நோன்பை விட்டால் நீங்களும் விடுங்கள்.

மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு காரணம், சில மக்கள் பிறை பார்க்கிறார்கள், சிலர் பார்ப்பதில்லை. பிறை பார்த்தவர்களின் கூற்றை சிலர் ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள், சிலர் ஏற்றுக்கொள்வதில்லை இதனால் கருத்துவேறுபடுகள் ஏற்படுகிறது. ஒரு நாடு பிறை பார்த்து அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி நோன்பு வைக்கவும் நோன்பு விடவும் செய்வார்கள், மற்றொரு நாடு இந்த பிறையை ஏற்றுக்கொள்வதில்லை, இந்த நாட்டை நம்புவதும் இல்லை, இதற்கு பல காரணங்கள் உண்டு, அரசியல் காரணங்கள், இன்னும் வேறு காரணங்கள்.

பிறையை பார்த்தால் அனைவரும் நோன்பு வைப்பதும், மீண்டும் பிறையை பார்த்தால் அனைவரும் நோன்பை விடுவதும் தான் முஸ்லிம்களின் மீது கடமை. ஏனென்றால் நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: ” நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு நோருங்கள், பிறை பார்த்தால் நோன்பை விடுங்கள், மேகம் மூடியிருந்தாள் 30ஆக பூர்த்தி செய்யுங்கள்”

அவர்கள் அனைவரும் பிறை பார்த்ததை ஏற்றுக்கொண்டால், அது உறுதியானது என்று ஒப்புக்கொண்டால், அதன் அடிப்படையில் நோன்பு நோற்பதும் விடுவதும் கடமை.

மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு, ஒருவர் ஒருவரை நம்ப மறுத்தால், நபி صلى الله عليه وسلم அவர்களின் சொல்லின் அடிப்படையில், நீங்கள் வசிக்கும் பகுதி மக்களுடன் சேர்ந்து நோன்பு நோற்பதே கடமை. நபி صلى الله عليه وسلم கூறினார்கள்:

நோன்பு என்பது நீங்கள் நோன்பு வைக்கும் நாளே, ஃபித்ர் என்பது நீங்கள் நோன்பை விடும் நாளே, தியாகம் என்பது நீங்கள் அறுத்து தியாகம் செய்யும் நாளே.”

இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்களிடம், குறைப் என்பவர் வந்து ஷாம் தேச மக்கள் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றார்கள் என்று கூறியபோது, அவர், நாங்கள் சனிக்கிழமை பிறை பார்த்தோம், நாங்கள் பிறை தெரியும் வரை, அல்லது 30 நாட்க்களை பூர்த்தி செய்யும் வரை நோன்பு வைப்போம் என்று கூறினார். அவர் ஷாம் தேச மக்களின் பிறையை பின்பற்றவில்லை, ஏனென்றால் ஷாம், மதீனாவை விட்டும் தூரமாக உள்ளது. அவர் رضي الله عنه இந்த விஷயத்தில் இஜ்திஹாத் செய்ய இடம் உள்ளதாக கருதினார். உங்களுக்கு இப்னு அப்பாஸ் அவர்களிடமும், அவரை போன்று மக்கள் தன் பிரதேசங்களின் மக்களுடன் சேர்ந்தே நோன்பு நோற்க வேண்டும், விட வேண்டும் என்று கூறிய உலமாக்களிடம் ஒரு முன்மாதிரி உள்ளது.

அல்லாஹ்வே உதவியாளன்.

ஷேக் இப்னு பாஸ்

Islamqa.info

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 
%d