அல்லாஹ்வினுடைய தூதரே ! எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கலாமா ?

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ sஸாலிஹ்

கேள்வி: “அல்லாஹ்வினுடைய தூதரே ! எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கலாமா ?

பதில்:ஷைய்ஃக் உஸ்மான் அல்-ஃகமீஸ் (ஹ) கூறிகின்றார்கள்.

கேட்கலாம் நபி (صلى الله عليه وسلم), ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும்போது.

நபி (صلى الله عليه وسلم) அவர்களுடன் வாழ்ந்தவர்கள் சிபாரிசு செய்ய கேட்டிருக்கின்றார்கள். ஆனால் இப்போது நபி (صلى الله عليه و سلم) அவர்களிடம் சிபாரிசு கேட்கக்கூடாது. காரணம் நபி (صلى الله عليه وسلم) மரணம் அடைந்து விட்டார்கள்.ஸலாத்தும், ஸலாமும் நபி அவர்களின் மீது உண்டாகட்டும்.

எங்கிருந்து நாம் பேசினாலும், அதை நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கேட்பார்கள் என்ற நம்பிக்கையோடு, ஒருவர் , யா முஹம்மத் எனக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்பது கூடாது.
நபி (صلى الله عليه وسلم) அவர்கள் உயிரோடு இருக்கும்போது இராக்கிலும், யமனிலும், மக்காவிலும் வாழ்ந்த மக்கள் பேசினாலும் கூட நபி (صلى الله عليه وسلم) அவர்களுக்கு கேட்டதில்லை.
நபி (ஸல்) அவர்கள் இப்போது கப்ரில் இருக்கின்றார்கள். பிறகு எப்படி ? ஒரு மனிதர் கேட்கும் சிபாரிசு நபி (صلى الله عليه وسلم) அவர்களுக்கு கேட்கும்.
இது ஒருபோதும் நடக்காத ஒன்றாகும்.

ஆகவே நபி (صلى الله عليه وسلم) மரணித்து விட்டார்கள்.இப்போது அவர்களிடத்தில் சிபாரிசு கேட்கக்கூடாது.
ஷைய்ஃக் உஸ்மான் அல்-ஃகமீஸ் (ஹ) உரையிலிருந்து எடுக்கப்பட்டது…
இதை குறித்து விரிவாக கேட் :

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d